உத்திரபிரதேசத்தில் போலீசார் இருவர் குடிபோதையில் உணவகத்திற்கு சென்று, சாப்பிட்ட உணவிற்கு பணம் கொடுக்காமல் உணவக ஊழியர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்தனர் .
உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள ஏட்டா மாவட்டத்தில் இரண்டு காவலர்கள், ஹோட்டலுக்கு உணவு சாப்பிட சென்றனர். இவர்கள் இருவரும் குடிபோதையில் ஓட்டலுக்கு சென்று, உணவு சாப்பிட்டனர். இருவரும் உணவு சாப்பிட்ட பிறகு ,சப்ளையர் சாப்பிட்ட உணவிற்கு பணத்தை கொடுக்குமாறு கேட்டார். ஆனால் அந்தக் காவலர்கள் பணத்தை தர மறுத்துள்ளனர். இதனால் ஹோட்டல் உரிமையாளரும் ,அங்கு பணி புரியும் சப்ளையர்களும் பணத்தை கொடுக்குமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உணவு சாப்பிட வந்த சிலரும் பணத்தை கொடுக்குமாறு காவலர்களிடம் கூறினர்.
ஆனால் தொடர்ந்து காவலர்கள் பணத்தைத் தராமல் தகராறில் ஈடுபட்டனர். இந்த சம்பவ இடத்திற்கு 15க்கும் மேற்பட்ட போலீஸார், அங்கு வந்து துப்பாக்கி முனையில் ஹோட்டல் உரிமையாளர் உட்பட 10 பேரை கைது செய்தனர். இவர்கள் மீது பொய்யான வழக்குகளை பதிவு செய்து ,சிறையில் அடைத்தனர். இந்த வழக்குகள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில், இவர்கள் மீது சுமத்தப்பட்ட வழக்குகள் பொய்யானது என்று தெரிந்தது . இதன் காரணமாக பொய்யான பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து ஹோட்டல் உரிமையாளர் உட்பட 10 பேரை கைது செய்த குற்றத்திற்காக ,காவலர்கள் இருவரையும் பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டது.