ஹோட்டல் தேங்காய் சட்னி
தேவையான பொருட்கள் :
தேங்காய் துருவல் – 1/2 கப்
பச்சை மிளகாய் – 2
பூண்டு – 3 பற்கள்
இஞ்சி – சிறிய துண்டு
பெருங்காயத்தூள் – சிறிது
கடுகு – 1/4 ஸ்பூன்
வரமிளகாய் – 2
கறிவேப்பிலை – சிறிது
எண்ணெய் – தேவைக்கேற்ப
உளுந்தம்பருப்பு – 1/2 ஸ்பூன்
பொட்டுக்கடலை – 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை :
முதலில் தேங்காய் துருவலை சேர்த்து மிதமான தீயில் ஒரு பிரட்டு பிரட்டி வறுத்துக் கொள்ள வேண்டும். மிக்சியில் தேங்காய்த்துருவல் , மிளகாய் ,பொட்டுக்கடலை , இஞ்சி , பூண்டு, உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ள வேண்டும் . கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு ,உளுந்தம்பருப்பு ,வரமிளகாய் , கறிவேப்பிலை ,பெருங்காயத்தூள் சேர்த்து கிளறி அரைத்த சட்னியில் கொட்டினால் சுவையான ஹோட்டல் தேங்காய் சட்னி தயார் !!!