இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்ட விபத்தில் ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் புதூர் பகுதியில் சதாம் உசேன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஹோட்டலில் பணிபுரிந்து வந்த சதாம் உசேன் வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற மற்றொரு மோட்டார் சைக்கிள் சதாம் உசேனின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதி விட்டது. இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்த சதாம் உசேன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார்.
இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சதாம் உசேனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.