Categories
உலக செய்திகள்

ஓட்டல் ருவாண்டா…. உண்மை கதாநாயகனுக்கு…. விதிக்கப்பட்ட சிறை தண்டனை …!!

“ஓட்டல் ருவாண்டா” என்ற  ஹாலிவுட்  படத்தின் உண்மை கதாநாயகனான பால் ருசபாகினா என்பவருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

ருவாண்டா நாட்டில் கடந்த 1994 ஆம்  ஆண்டு பால் ருசபாகினா என்பவர் ஓட்டல் நடத்தி வந்துள்ளார். அந்த சமயத்தில் அங்கு நடந்த இனப்படுகொலை சம்பவத்தில் அவர்  சுமார் 1200 பேரை காப்பாற்றி தனது ஓட்டலில் அடைக்கலம் கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து பால் ருசபாகினா கிளர்ச்சி கும்பலுடன் சேர்ந்து 9 பேரை படுகொலை செய்ததாக கூறி அவர் மீது கடந்த 2018 -19  ஆம் ஆண்டு வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கானது விசாரணைக்கு வந்தபோது பால் ருசபாகினாக்கு 25 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது. இந்த சம்பவத்தை மையமாக கொண்டு “ஓட்டல் ருவாண்டா” என்ற பிரபல ஹாலிவுட் படமானது எடுக்கப்பட்டு கடந்த  2004 ம் ஆண்டு வெளிவந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |