Categories
மாநில செய்திகள்

ஹோட்டலில் நுழைந்த சிங்கம்… சுற்றிப் பார்த்து சென்ற காட்சி… வைரலாகும் வீடியோ…!!!

குஜராத் மாநிலத்தில் உள்ள விடுதி ஹோட்டல் ஒன்றில் சிங்கம் வந்து செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது.

குஜராத்தில் ஜீனாகத் மாவட்டத்தி மாவட்டத்தின் கிர்னார் மலையடிவாரத்தில் கிர் சிங்க சரணாலயம் உள்ளது. அதில் ஆசிய சிங்கங்கள் மற்ற அரிய வகை சிங்கங்களும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. மக்கள் காடுகளை அழிப்பதால் தான் விலங்குகளுக்கான  சரணாலயம் அமைக்கப்பட்டது. இந்நிலையில் திடீரென ஜீனாகத் நகரின் ஒரு தனியார் சொகுசு விடுதியுடன் கூடிய ஹோட்டலில்  திங்கட்கிழமை அதிகாலை சிங்கம் நடமாடியது.

அந்த காட்சி  ஹோட்டலின் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ வலைதளங்களில் மிக விரைவாக வைரலாகி வருகிறது.இச்செய்தி அப்பகுதியில் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சிங்கத்தால் மனிதருக்கோ அல்லது மனிதனால் சிங்கத்துக்கு எந்த ஆபத்தும் வருவதற்குள் சிங்கத்தை பிடிக்க நடவடிக்கை எடுக்க பட வேண்டும் என்று வன துறைக்கு கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |