ஹோட்டலுக்கு தீ வைத்த 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மாதனூர் ஆம்பூர் ரோடு சாலையோரம் ஹோட்டல் ஓன்று அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த ஹோட்டலுக்கு இரவு நேரத்தில் 4 ஓலை குடில்களுக்கும் மற்றும் சி.சி.டிவி கேமரா, குளிர்பானம் பெட்டிகளுக்கும் தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஹோட்டல் நிர்வாகம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இதனையடுத்து இதில் சம்பந்தப்பட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து காமராஜ், நவீன் குமார் மற்றும் கணேஷ்பாபு ஆகிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.