Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

“மணிக்கணக்கில் வீடியோ கேம்”… மயங்கி விழுந்த 16 வயது சிறுவன்…. உயிரை குடித்த விளையாட்டு..!!

புதுச்சேரி வில்லியனூர் அருகே செல்போனில் ஆன்லைன் கேம் விளையாடிக் கொண்டிருந்த 16 வயது சிறுவன் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

மனவெளி பகுதியை சேர்ந்த பச்சையப்பன் என்பவரின் மகன் தர்ஷன். இவர் செல்போனில் பயர்வால் என்னும் ஆன்லைன் கேமில் மணிக்கணக்கில் விளையாடி வந்துள்ளார். சம்பவ தினத்தன்று காதில் ஹெட் போன் அணிந்து அதிக சத்தத்துடன் கேம் விளையாடிக் கொண்டிருந்த தர்ஷன் திடீரென்று சுய நினைவின்றி மயங்கி விழுந்தார்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர்கள் அவரை அழைத்து மருத்துமனைக்கு அழைத்துச் சென்றனர். மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் .அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறி விட்டனர்.

Categories

Tech |