Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கனத்த மழை பெய்ததால்… இடிபாடுகளில் சிக்கிய குடும்பம்… தஞ்சையில் நடந்த சோகம்…!!

கனமழை பெய்ததால் வீடு இடிந்து விழுந்து பெண் பலியான நிலையில் 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருவையாறு பகுதியில் இருக்கும் மருவூர் காலனி தெருவில் கல்யாணசுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேவகி என்ற மகளும் சுப்ரமணியன் என்ற மருமகனும் இருந்துள்ளனர். இவர்கள் அனைவரும் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். கடந்த 1991 – ஆம் ஆண்டு இவர் காலனை தோப்பு பகுதியில் வீடு கட்டி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் இரவு நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் திடீரென இவர்களின் வீட்டு கட்டிடம் இடிந்து மூவர் மீதும் விழுந்துவிட்டது. இதனால் படுகாயம் அடைந்த தேவகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். மேலும் கல்யாண சுந்தரம் மற்றும் சுப்பிரமணியன் கட்டிட இடிபாட்டில் சிக்கி பலத்த காயமடைந்துள்ளனர்.

இதனைப் பார்த்த அருகில் உள்ளவர்கள் படுகாயம் அடைந்த கல்யாண சுந்தரம் மற்றும் சுப்பிரமணியனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் தேவகியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதன்பின் தாசில்தார் ஒன்றிய குழு தலைவர் வருவாய் ஆய்வாளர் என பலரும் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்துள்ளனர்.

Categories

Tech |