Categories
மாநில செய்திகள்

வீடு மாறினால் ஒப்படைக்க வேண்டும்… தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழக அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனத்தின் செட்டாப் பாக்ஸ்கள் பழுதடைந்தாலோ, மாதாந்திர கட்டணம் செலுத்தாமல் துண்டிப்பு செய்யப்பட்டிருந்தாலும், அல்லது குடி பெயர்ந்து வேறு இடத்திற்கு சென்று இருந்தாலும்  செட்டாப் பாக்ஸ் மற்றும் ரிமோட்டை அந்த பகுதியில் உள்ள ஆபரேட்டர்கள் இடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவன தலைவரும், கால்நடை பராமரிப்பு துறை அமைச்சருமான உடுமலை கே ராதாகிருஷ்ணன் இது குறித்து ஒரு செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளார்.

அதில் தமிழகம் டிஜிட்டல் ஒளிபரப்பு கேபிள் தொலைக்காட்சி சேவையை குறைந்த கட்டணத்தில் அரசு வழங்கி வருகின்றது. இதுவரை உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் மூலம் 35 புள்ளி 97 செட்டாப் பாக்ஸ்கள் வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனத்தின் 7 லட்சத்து 60 ஆயிரம் 170 செட்டாப் பாக்ஸ்கள் சந்தாதாரருக்கு வினியோகம் செய்யப்படாமல் உள்ளது. இதனால் மக்கள் பயன்படுத்தப்படாத செட்டாப் பாக்ஸ் மட்டும் ரிமோட்களை அந்தந்த பகுதியில் உள்ள ஆப்ரேட்டர்கள் இடம் திரும்ப ஒப்படையுங்கள் என்று அவர் கேட்டுக்கொண்டார். இது குறித்த புகார்களுக்கு 1800 425 2911 என்ற எண்ணை பயன்படுத்தலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |