Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இல்லத்தரசிகளே உஷார்! சமையல் செய்துகொண்டிருந்த போது…. திடீரென தீப்பிடித்த சிலிண்டர்…!!

சமையல் செய்துகொண்டிருந்த போது கேஸ் சிலிண்டர் தீ பிடித்து எறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் பக்கம் நரசிங்கபுரம் அண்ணா தெருவை சேர்ந்தவர் பாபு. ஓட்டுனரான இவருடைய மனைவி செல்வி சம்பவத்தன்று வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக காஸ் சிலிண்டரில் கசிவு காரணமாக தீ பற்றி எரிந்துள்ளது. இந்த தீ சிலிண்டர் வரை வேகமாக பரவியுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பாபு இந்த சம்பவம் குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதையடுத்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் சமையலறைக்குள் நுழைந்து சிலிண்டரை பத்திரமாக வெளியே எடுத்து தீயை அணைத்துள்ளனர். இவ்வாறு தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்ததால் பெருமளவு விபத்தை தடுக்க முடிந்தது. இதையடுத்து அந்த பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

Categories

Tech |