ஜாக்டோ ஜியோ மாநாட்டில் பேசிய முதலமைச்சர், கருவூலத்தில் பணம் இல்லாததால் தான் திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை. இருந்துச்சுன்னா நான் எல்லா திட்டங்களும் செயல்படுத்தி விடுவேன் என்று சொன்னது குறித்து பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு,
ஒரு எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவருக்கு கருவுலகத்தில் கஜானாவில் எவ்வளவு வருமானம் வருகிறது ? வரவில்லை என்று எப்படி தெரியாமல் இருக்கும். இவர்தான் அப்போது எதிர்க்கட்சித் தலைவர், அமைச்சர்கள் அப்போது சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார், ஆட்சி அதிகாரத்தில் இருந்திருக்கிறார்கள் திராவிட முன்னேற்றக் கழகம்.
புதிதாக ஒன்றும் இந்த கட்சி வரவில்லை. ஏதோ ஆர்வக்கோளாறில் சொல்லிவிட்டோம் என்றெல்லாம், இல்லை… தேர்தலில் வெளியிட்ட 505 வாக்குறுதிகளில் கொடுத்தீர்களே. அந்த வாக்குறுதிகளை கொடுக்கும்போது, தமிழ்நாட்டினுடைய கஜானா எப்படி? அதனுடைய வருமானம் எப்படி இருக்கும் என்று தெரியாமல் எப்படி வாக்குறுதி கொடுத்தார்கள் ?
எப்படி பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றுவோம் என்று அரசு ஊழியர்களை ஏமாற்றினார்கள், இதையெல்லாம் புரிந்து கொள்ள வேண்டும். அதே மாதிரி நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரு சொட்டு மது கூட தமிழகத்தில் இருக்காது என்று முதலமைச்சர் எதிர்க்கட்சி தலைவராக இருந்து, தேர்தல் பிரசாரத்தில் கர்ஜித்தார் என செல்லூர் ராஜீ விமர்சித்தார்.