தமிழகம் முழுவதும் நேற்று ஆயுத பூஜை பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டுள்ளது. இந்த ஆயுத பூஜை பண்டிகையின் போது பொதுமக்கள் பலரும் தாங்கள் வேலைக்கு செல்லும்போது பயன்படுத்தக்கூடிய பொருட்கள் மற்றும் மாணவர்கள் தங்களுடைய புத்தகங்களை வைத்து பூஜை செய்வார்கள். ஆனால் தற்போது கோயம்புத்தூர் மாவட்டத்தில் புதிதாக ஒரு சம்பவம் செய்துள்ளனர்.
அதாவது மைல் கல்லுக்கு மாவிலை தோரணம் கட்டி, இருபுறமும் வாழைக்கன்று நட்டு, சந்தன குங்குமம் பொட்டு வைத்து, வாழை இலையில் படையல் போட்டு ஆயுத பூஜை பண்டிகையை கொண்டாடியுள்ளனர். அவர்கள் சிறுவாணி மைல் கல்லுக்கும் முக்காணி பகுதிக்கு செல்லக்கூடிய மைல்களுக்கும் பூஜை செய்துள்ளனர். மேலும் கோயம்புத்தூர் மக்கள் செய்த ஆயுத பூஜை தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாகி பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.