நீட் ஆள்மாறாட்டம் தொடர்பாக தேசிய தேர்வு முகமை தான் பதிலளிக்க வேண்டும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
சென்னையை சேர்ந்த மருத்துவர் வெங்கடேசனின் மகன் உதித்சூர்யா மஹாராஷ்டிராவில் ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று தேனி அரசு மருத்துவ கல்லூரியில் சேர்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து தேனி பல்கலைக்கழக டீனுக்கு வந்த EMAIL மூலமாக இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.இது குறித்து மாணவர் உதித்சூர்யா 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த காவல்துறை உதித் சூர்யாவை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
தனிப்படை சென்னையில் விசாரணை நடத்திவரும் சூழலில் இது குறித்து கேள்விக்கு பதிலளித்த தமிழக சுகாதாரதுறை அமைச்சர் விஜயபாஸ்கர் ,நீட் தேர்வை தமிழக அரசு நடத்தவில்லை , இதை மத்திய அரசுதான் நடத்துகின்றது எனவே நீட் ஆள்மாறாட்டம் நடந்தது தொடர்பாக தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை தான் பதிலளிக்க வேண்டும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.