Categories
உலக செய்திகள்

“இவங்க முதல்ல போடுறாங்க” எப்படி இருக்குனு பாப்போம்…. ரிசல்ட்டுக்காக காத்திருக்கும் இந்தியா…!!

பிரிட்டனில் கொரோனா தடுப்பூசி நல்லபலனை தருகிறதா என்று இந்திய காத்துக்  கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி ஒரு வருடம் ஆகிவிட்ட நிலையில், அதை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி கண்டுபிடிக்கும் விஞ்ஞானிகள் முயற்சியில் ஓரளவு வெற்றி கிடைத்துள்ளது. உலகம் முழுவதும் சுமார் ஐந்து நிறுவனங்களில் தடுப்பூசி மருந்துகள் 90% க்கும் அதிகமாக கொரோனாவை கட்டுப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளன. எனினும் பல நாடுகளில் இன்னும் மக்களுக்கு நேரடியாக தடுப்பூசி வழங்கப்படவில்லை.

முதன்முதலாக பிரிட்டன் இந்த தடுப்பூசியை அந்நாட்டு மக்களுக்கு நேரடியாக அளிக்க உள்ளது. அமெரிக்க நிறுவனமான பைஸரின் கண்டுபிடிப்பான இந்த கொரோனா தடுப்பூசி, கொரோனாவை கட்டுப்படுத்துவதாக கூறப்படுகிறது. பிரிட்டனின் இந்த பரிசோதனையை உலக நாடுகள் கவனித்து வருகின்றன. இந்நிலையில் பைஸர் உட்பட ஐந்து தடுப்பூசியில் எது நல்ல பலன் தருகிறதோ அதை கொள்முதல் செய்ய இந்தியா காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |