கொரோனா நடவடிக்கைகளில் அரசு அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வரிடம், குறிப்பிட்ட மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது என்று செய்தியாளர் கேள்விக்கு பதிலளித்த முதல்வர், எந்த மருத்துவமனை என்று சொல்லுங்க ? என்று பதில் கேள்வி எழுப்பி கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த மருத்துவமனையில் சேர்க்கப்படுள்ளார் என்று அறிவித்து மருத்துவர்களை நியமித்துள்ளோம், ஆய்வு கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன, பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது என்று விளக்கம் அளித்தார்.
அப்போது குறிப்பிட்ட இடத்தில் என்று கேள்வி எழுப்பிய போது, எந்த இடம் என்று சொல்லுங்க, சும்மா பொத்தாம் பொதுவாக சொல்ல வேண்டாம். ஒவ்வொரு மருத்துவர்களும், செவிலியர்களும் மருத்துவப் பணியாளர்களும், உயிரைப் பணயம் வைத்து, அர்ப்பணிப்புணர்வோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இது தவறான செய்தி இது ஊடகத்தின் வாயிலாக வெளியேறும் பணியாற்றுவபர்கள் மனது கஷ்டப்பட்டும். அரசு முழுமூச்சோடு இறங்கிக் கொண்டிருக்கிறது உயிரை பணையம் வைத்து அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
ஒரு கூட்டுப் பொறுப்பு அங்கேயே தன்னுடைய உயிரையும் பொருட்படுத்தாமல், குடும்பத்தை பொருட்படுத்தாமல் அர்ப்பணிப்பு உணர்வோடு மருத்துவ சேவை செய்து வருகின்றார்கள். இது சாதாரண விஷயமல்ல நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவருக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய மருத்துவர்களும், செவிலியர்களும், மருத்துவப் பணியாளர்களும் அவர்களின் உடை அணிந்து கொண்டு வெளியே வர முடியாது.
6 மணி நேரம் அங்கேயே தான் இருக்க வேண்டும். எவ்வளவு கஷ்டம் என்று எண்ணிப் பாருங்கள். ஒரு மணி நேரம் கரண்ட் இல்லை என்றால் நாம் எவ்வளவு கஷ்டப்படுகின்றோம். ஆனால் கொரோனா சிகிச்சை உடையை 6 மணி நேரம் போட்டுக்கொண்டு பணியாற்றும் மருத்துவர்களுக்கு நாம் அனைவரும் துணை நிற்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் மனம் தளராமல் இன்னும் ஆர்வத்தோடு அந்த நோயாளியை கண்காணித்து குணப்படுத்த முடியும் என்று முதல்வர் தெரிவித்தார்.