ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ கங்கா நகர் பகுதியில் உள்ள மீரா மார்க்கில் ஒரு பிரபலமான வங்கி செயல்பட்டு வருகிறது. கடந்த சனிக்கிழமை இந்த வங்கிக்குள் ஒரு திருடன் நுழைந்து கத்தியை காட்டி அங்குள்ள ஊழியர்களை மிரட்டியுள்ளான். அதோடு ஒருபையை எடுத்து அந்த பை முழுவதும் வங்கியில் இருக்கும் பணம் மற்றும் நகைகளால் நிரப்ப வேண்டும் எனவும் கூறியுள்ளான். இதனால் வங்கியில் இருந்த ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகினர். ஆனால் அப்போது திடீரென வங்கியின் மேலாளர் துணிச்சலுடன் வந்து திருடனை எதிர்த்தார். அந்த திருடனின் பாக்கெட்டில் இருந்து விழுந்த ஒரு இரும்பு பொருளை எடுத்து மேலாளர் திருடனுடன் சண்டையிட ஆரம்பித்தார்.
இதனையடுத்து வங்கியில் வேலை பார்க்கும் மற்ற ஊழியர்களும் தைரியமாக வந்து திருடனை பிடித்தனர். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வங்கியில் திருட கொள்ளையனை கொள்ளையனை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் லாவிஸ் (29) என்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து லாவிஸ் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேலும் வங்கியில் பெண் மேலாளர் திருடனை எதிர்த்து துணிச்சலாக போராடும் சிசிடிவி காட்சிகள் தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
श्रीगंगानगर मरुधरा बैंक में मैनेजर पूनम गुप्ता लुटेरों से प्लास लेकर भिड़ गयी ..हौसले की इस तस्वीर को देखिए ग़ज़ब का साहस दिखाया है इस महिला ने,लॉरेंस का नाम लेकर बैंक लूटने आया था लेकिन महिला बैंक मैनेजर भिड़ गयी.. पूनम गुप्ता के इस जज़्बे को सलाम है! @PoliceRajasthan pic.twitter.com/J6GZQFreki
— Manish Bhattacharya (INDIA TV)﮷ (@Manish_IndiaTV) October 17, 2022