Categories
அரசியல் மாநில செய்திகள்

என்னுடைய சீடர் எப்படி பேசினார் ? திரும்பி பார்க்கும் ஸ்டாலின்… முகத்தில் ஒரே பூரிப்பு தான் ..!!

திமுக தலைவராக முக.ஸ்டாலின் 2ஆவது முறையாக தேர்வானதை கொண்டாடும் வகையில் சென்னை மாவட்ட திமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நம்முடைய அமைச்சர் சேகர் பாபு அவர்கள், வரும் போது கூட காதில் விழுந்தது, பிரபாகரன் பேசும்போது சொன்னார்கள்… அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம், இது இல்ல. இது இல்லாமல் இன்னும் நிறைய கனவு அவருக்கு இருக்கிறது.

இவருக்கே இவ்வளவு கனவு இருக்கிறது என்று சொன்னால்,  இவருடைய தலைவர் நம்முடைய தலைவருக்கு இன்னும் எவ்வளவு கனவு இருக்கும். ஆக தொடர்ந்து இன்றைக்கு சட்டமன்றத்திலே நம்முடைய சேகர்பாபு அவர்கள் உரையாற்றும் போது, யார் அதிகமாக கவனிக்கிறாரோ இல்லையோ,  நம்முடைய முதலமைச்சர் என்னுடைய சீடர் எப்படி பேசினார் ?  என்று திரும்பிப் பார்த்து அந்த பெருமையை அவர் முகத்தில்  இருந்து நாம் பார்க்கலாம்.

சேகர்பாபு அண்ணன் மட்டுமல்ல, ஒட்டுமொத்தமாக இங்கு இருக்கின்ற ஒவ்வொரு தொண்டர்களையும் பார்க்கும்போது,  அந்த பூரிப்போடுதான் இருந்து கொண்டிருக்கிறார். பொதுக்குழு கூடிச்சு. பொதுக்குழுவில் பேசிய போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை சொன்னார்கள், ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியான பாராட்டுகளை தந்தார்கள்.

நம்முடைய மாநில இளைஞரணி செயலாளர் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணுடைய சட்டமன்ற உறுப்பினர் அவர்கள், பேசும்போது,  திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய பொதுக்குழுவில் தான் வெறும் வாழ்த்தும், பாராட்டும் கிடையாது, எங்களுக்கு வேலை செய்கின்ற இலக்கை நிர்ணயுங்கள் என்று சொல்லக்கூடிய அளவிற்கு ஒரு உழைப்பாளியாக..  தன்னுடைய தாத்தா,  தந்தை போல் இருக்கக்கூடிய தலைவராக அமர்ந்து கொண்டிருக்கிறார் என தெரிவித்ததாக அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

Categories

Tech |