Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

16 நாட்களுக்கு பின் தூத்துக்குடி இளம்பெண்ணுக்கு கொரோனா வந்தது எப்படி?

தூத்துக்குடி மாவட்டம் எப்போது வென்றான் அருகே உள்ள ஆதனூரைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் சென்னை மேடவாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

கொரோனா பாதிப்பின் காரணமாக  ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில்  அவர் கடந்த மாதம் 29ம் தேதி தாம்பரத்தில் இருந்து காய்கறி ஏற்றி வந்த லாரி மூலம் எட்டயாபுரத்திற்கு வந்துள்ளார். பின்னர் அங்கிருந்து தனது சகோதரனுடன் மோட்டார் சைக்கிளில் ஆதனூரில் உள்ள தனது வீட்டுக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் கடந்த 2ம் தேதி அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து  எப்போதும்வென்றான் அரசு ஆரம்ப சுகாதார  நிலையத்திற்கு சென்றுள்ளார்.  அங்கிருந்த மருத்துவ குழுவினர்  அவரிடம் விசாரித்தபோது; தான் சென்னையில் பணிபுரிந்து வருவதாகவும் சில நாட்களுக்கு முன்பு ஆதனூர் வந்ததாகவும் தெரிவித்துள்ளார். உடனே அவரின்  சளி மற்றும் ரத்த மாதிரி எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பரிசோதனையில் அந்த இளம்பெண்ணுக்கு கொரோனா பாசிட்டிவ் வந்தது. இதனையடுத்து அந்த இளம்பெண் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டார்.  மேலும் அவர் வீட்டைச் சுற்றி கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண்ணின்  குடும்பத்தில் உள்ளவர்களின்  ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் அவரது வீட்டைச் சுற்றி உள்ள வீடுகளில் வசிப்போரின் இரத்தமாதிரிகளை மருத்துவ குழுவினர் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

Categories

Tech |