பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி குறித்து மக்களின் பார்வை எப்படி உள்ளது என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் அந்நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு கடுமையான விதிகளை விதித்து நாட்டை பாதுகாத்து வருகிறார். இந்நிலையில் அவரைப் பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.
அதில் அவர் 40% நன்மதிப்புகளை பெற்றுள்ளார். கடந்த மாதம் 38 சதவீத நன்மதிப்பைப் பெற்ற அவர் தற்போது இரண்டு புள்ளிகள் அதிக செல்வாக்கை பெற்றுள்ளார்.அதேபோன்று அந்நாட்டுப் பிரதமரும் கடந்த மாதத்தை போன்றே இந்த மாதமும் 37 சதவீத நன்மதிப்பு உடன் உள்ளார்.