கொரோனா தடுப்பு குறித்து தலைமைச் செயலாளர் சண்முகம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது.
சென்னை முழுவதுமாக உள்ள 15 மண்டலங்களில் உள்ள 200 வார்டுகளில் 34 வார்டுகள் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கக்கூடிய காரணத்தினால் அடுத்த கட்டமாக இந்த நோயை கட்டுப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் எவ்வாறு இருக்கின்றது. என்பது குறித்து தலைமைச் செயலாளர் சண்முகம் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் என்பது நடைபெற்று வருகின்றது.
சென்னையில் கொரோனா களப்பணியாளர்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் ? அதிகாரிகள் எந்த அளவில் உதவி செய்கிறார்கள் ? ஒவ்வோர் இடத்திலும் எவ்வாறு கண்காணிப்பு பணிகள் நடைபெறுகிறது ? அதுமட்டுமல்லாமல் பரிசோதனை செய்யக் கூடிய வழிமுறைகள் என்னென்ன? தொடர்பாக இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.
அதேபோல சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் சிறப்பு அதிகாரிகளும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று இருக்கிறார்கள். இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமைச் செயலாளர், டிஜிபி, சுகாதாரத்துறை செயலாளர், சென்னை மாநகராட்சி ஆணையர் என பல அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.