கொரோனா தொற்று நோய்களைக் கட்டுப்படுத்த ஊரடங்கு தொடங்கப்பட்டு இன்றுடன் ஒரு மாதம் முடிவடையும் நிலையில் எப்படி இருந்தது ஒரு மாத ஊரடங்கு.
இந்தியாவில் நோய் தாக்குதல் ஜனவரி 30-ஆம் தேதி கேரளாவில் கண்டறியப்பட்டது. சீனாவின் வூஹான் மாகாணத்தில் ஒரு பல்கலைக்கழகத்தில் படித்து வந்த கேரள மாணவர் ஒருவர் கேரளாவிற்கு திரும்பிய பின்பு அவருக்கு நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அதன் பின்னர் படிப்படியாக வெளிநாடுகளிலிருந்து வந்த பலருக்கும் அறிகுறிகள் கண்டறியப்பட்டன.
கொரோனா தொற்று நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் 500 நெருங்கியபோது மார்ச் 19ஆம் தேதியன்று தொலைக்காட்சி வாயிலாக பேசிய பிரதமர் மோடி மார்ச் 22 ஆம் தேதி அன்று ஒருநாள் நாடு முழுவதும் ஊரடங்கு செயல்படுத்துவதற்கு அறிவித்தார். அன்று மாலை 5 மணிக்கு சுகாதாரத் துறை ஊழியர்களின் முயற்சிகளை பாராட்டும் விதமாக பொதுமக்கள் தங்களின் வீடுகளின் பால்கனிகள் ஜன்னல்களில் முன் நின்று கைத்தட்டி மணியடித்து தங்களின் ஆதரவை தெரிவிக்கலாம் என்றும் கூறினார்.
மார்ச் 22 ஆம் தேதியன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரையில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு பின்னர் அமல்படுத்தப்பட்ட உலகிற்கு முன்னோடியாக அமைந்தது. மார்ச் 22ஆம் தேதி அன்று இரவு தொலைக்காட்சி மூலம் பேசிய பிரதமர் மோடி இன்று இரவு 12 மணி முதல் 3 வார காலத்திற்கு இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவித்தார். இந்த இருபத்தொரு நாட்களில் கவனக்குறைவாக இருந்தால் இந்தியா இருபத்தொரு வருடங்கள் பின்னோக்கி நகர்ந்து விடும் என்று பிரதமர் எச்சரிக்கை விடுத்தார்.
மார்ச் 22ஆம் தேதி இந்தியா முழுவதும் ஊரடங்கு தொடங்கியது பொது போக்குவரத்து சேவைகள், தொழிற்சாலைகள், கல்வி கூடங்கள், வழிபாட்டு தலங்கள், வணிக வளாகங்கள், திரைப்பட அரங்குகள், அலுவலகங்கள் மூடப்பட்டன. மருந்து கடைகள், காய்கறி கடைகள், மளிகை கடைகள், ஏடிஎம்கள், குடிநீர், மின்சாரம், குப்பைகளை அகற்றுதல் போன்ற அத்தியாவசிய சேவைகள்அனுமதிக்கப்பட்டுள்ளது.
உணவு விடுதிகளில் பார்சல் மூலம் மட்டும் பணி செய்ய அனுமதிக்கப்பட்டது. தொலைக்காட்சி மூலம் உரை நிகழ்த்திய பிரதமர் மோடி இருளிலிருந்து ஒளியை நோக்கி நகரும் ஐந்தாம் தேதி ஞாயிறு அன்று இரவு 9 மணிக்கு அனைவரும் மின் விளக்குகளை அணைத்துவிட்டு அகல் விளக்குகள், மெழுகுவத்திகளை ஏற்றுமாறு வேண்டுகோள் விடுத்தார். இந்த நிலையில் தாக்கத்தின் எண்ணிக்கை கட்டுக்குள் இல்லாத நிலையில் ஏப்ரல் 14ஆம் தேதி முதல் ஊரடங்கு மூன்றாம் தேதி வரை நீட்டித்து அறிவிக்கப்பட்டு இன்றுடன் ஒரு மாதம் நிறைவடைகிறது.