Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (04.12.2019) நாள் எப்படி இருக்கு ? முழு ராசி பலன்கள் இதோ..!!

மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று தடைபட்ட காரியங்கள் தானாகவே நடைபெறும் நாளாக இருக்கும். உள்ளம் மகிழும் செய்தி ஒன்றை உடன்பிறப்புகள் வழியில் கேட்கக்கூடும். பழைய பிரச்சினைகளை தீர்க்க முழுமூச்சுடன் செயல்படுவீர்கள். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் ஏற்படும். சுபகாரியம் நடக்கும். திருமண முயற்சி மேற்கொண்டவர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே சந்தோஷம் நிலவும்.

கஷ்டம் இல்லாத சுக வாழ்க்கை ஏற்படும். இன்று உறவினர்கள் நண்பர்கள் ஆதரவும் கிடைக்கும். நெடுநாளைய சங்கடம் உங்களுக்கு தீரும். தெளிவான முடிவு எடுப்பதன் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். பண வரவு தாராளமாகவே இருக்கும். இன்றைய நாள் ரொம்ப சிறப்பான நாளாகவே இருக்கும். மாணவக் கண்மணிகள் கல்வியில் வெற்றி பெறுவீர்கள். ஆசிரியர்களின் சொல்படி மட்டும் நடந்து கொள்ளுங்கள் அது போதும்.

இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிற  ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். இன்றைய நாள் சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டால் அனைத்துக் காரியமும் சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு

அதிஷ்ட எண் : 5 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்

ரிஷபம் ராசி அன்பர்களே..!! இன்று உடன்பிறப்புகளின் உதவி கிடைத்து மகிழும் நாளாகவே இருக்கும். உள்ளத்தில் அமைதி கூடும். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து கொடுப்பார்கள். தன வரவு திருப்திகரமாக இருக்கும். தொழிலை விரிவுபடுத்தும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். இன்று வீட்டுக்கு தேவையான வசதிகள் கிடைக்கும். நண்பர்கள் உறவினர்கள் மூலம் தேவையான உதவிகளும் கிடைக்கும்.

அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் பொழுது கொஞ்சம் கவனமாக இருங்கள். எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது. உங்களுடைய இனிமையான பேச்சின் மூலம் பலரது உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் இருக்கட்டும். நட்பு ரீதியில் நிதானத்தை கடைபிடிப்பது நன்மையை கொடுக்கும். இன்று மாணவ செல்வங்கள் கொஞ்சம் கடுமையாக உழைத்து பாடங்களை நிதானமாக படியுங்கள்.

படித்த பாடத்தை ஒரு முறைக்கு இரு முறை எழுதிப் பாருங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக்கூடியதாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் நீல நிறம்

மிதுனம் ராசி அன்பர்களே..!! இன்று சிவபெருமான் வழிபாட்டால் ஆனந்தம் காண வேண்டிய நாளாக இருக்கும். பொருளாதார நிலை உயரும். நண்பர்களிடம் ஒப்படைத்த பொறுப்புகள் நல்லவிதமாக முடியும். நேற்றைய பணி மீண்டும் இன்று தொடரும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதையும் சாதிக்கும் திறமையும் சாமர்த்தியமும் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கவனமாக இருங்கள். தேவையற்ற இடமாற்றம் ஏற்பட கூடும்.

மற்றவர்களுக்கு உதவி செய்யும் பொழுதும் பரிகாசம் செய்யும் பொழுதும் கொஞ்சம் கவனமாக இருங்கள். அது மட்டுமில்லாமல் வாகனத்தில் செல்லும்போதும் கவனமாக இருங்கள். குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுக்கள் நடைபெறும். திருமண முயற்சிகள் சாதகமான பலனையே கொடுக்கும். சிலருக்கு புத்திர பாக்கியம் ஏற்படும். கூடுமானவரை கொஞ்சம் பொறுமையாகவே செயல்படுங்கள் பார்த்துக்கொள்ளலாம்.

இன்று மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். சக மாணவர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு

அதிஷ்ட எண் : 4 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் மஞ்சள் நிறம்

கடகம் ராசி அன்பர்களே..!! இன்று புதிய பாதை புலப்படும் நாளாக இருக்கும். அயல் நாட்டில் இருந்து அணுகூல செய்திகள் வந்து சேரும். குடும்பச் செலவுகளில் தாராளம் காட்டுவீர்கள். தொழிலில் புதிய முதலீடுகள்  செய்யலாமா என்ற சிந்தனை மேலோங்கும். இன்று தைரியமாக எந்த காரியத்தையும் செய்து முடிப்பீர்கள். சகோதரர்கள் மூலம் நன்மை உண்டாகும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். வாகனங்களை ஓட்டிச் செல்லும்போது கவனமாக ஓட்டிச் செல்லுங்கள். தொழில் வியாபாரம் தொடர்பான விவகாரங்களில் தாமதம் ஏற்படும்.

புதிய ஆர்டர்கள் கிடைப்பதற்கு அலைய வேண்டியிருக்கும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு சக ஊழியர்களுடன் இருந்த கருத்து வேற்றுமை குறையும். இன்று மாணவச் செல்வங்களுக்கு நல்ல முன்னேற்றகரமான நாளாக இருக்கும். இன்று பொருளாதார ரீதியில் ஓரளவு சிறப்பு இருக்கும். உங்களுடைய நிதி மேலாண்மையும் இன்று ஓங்கி நிற்கும். ஆனால் மிக முக்கியமாக வாகனத்தில் செல்லும் போது ரொம்ப கவனமாக செல்ல வேண்டும்.

அதுதான் நாங்கள் மீண்டும் ஒருமுறை சொல்கின்றோம். பொறுமை என்பது இன்று கொஞ்சம் அவசியமாக தேவைப்படுகிறது. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டுசெல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடியதாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள். அனைத்துக் காரியமும் உங்களுக்கு நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிஷ்ட எண் : 1 மற்றும் 2

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் மஞ்சள் நிறம்

சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று விடியும் பொழுதே வெற்றி செய்திகள் வந்து சேரும் நாளாக இருக்கும். செய்யும் தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பயணத்தால் பலன் உண்டாகும். உத்தியோகத்தில் தலைமைப் பதவிகள் தானாக வந்து சேரும். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் ஏற்படும். உங்களுடைய அறிவு திறமை இன்று அதிகரிக்கும்.

இனிமையான பேச்சின் மூலம் எதையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். தேவையான பண உதவியும் எதிர்பார்க்க கூடும். இன்று திறமையாக செயல்பட்டு பாராட்டுகளை கிடைக்கப் பெறுவீர்கள். கல்வியில் முன்னேற்றம் காணப்படும். வாய்க்கு ருசியான உணவுகளை உண்பீர்கள். கடினமான முயற்சிகள் கூட எளிமையாக செய்ய முடியும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 4 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்

கன்னிராசி அன்பர்களே..!! இன்று நம்பிக்கைகள் நடைபெறும் நாளாக இருக்கும். வரவு திருப்திகரமாக இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். அடுத்தவர் நலனில் செலுத்திய அக்கறைக்கு ஆதாயம் கிடைக்கும். கல்யாணப் பேச்சுவார்த்தைகள் கைகூடும். இன்று அரசு தொடர்பான பணிகளில் சாதகமான போக்கு காணப்படும். எதிர்ப்புகள் விலகி செல்லும். உங்கள் செயல்களுக்கு இருந்த தடைகள் நீங்கும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கும்.

பலவகை முன்னேற்றங்களும் இன்று உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். தேவையான பண உதவியும் கிடைக்க பெறுவீர்கள். கணவன் மனைவி ஒருவரது பேச்சை மற்றவர் கேட்பதன் மூலம் நன்மை ஏற்படும். இன்று மாணவர்களுக்கும் நல்ல சிறப்பான நாளாக இருக்கும். கல்வியில் இருந்த தடை விலகி முன்னேற்றமான சூழல் இருக்கும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் பங்களிப்பும் இன்று அதிகமாகவே இருக்கும்.

அது மட்டுமில்லாமல் சக மாணவரின் ஒத்துழைப்பும் இன்று இருக்கும். இன்று முக்கியமான பணியை  மட்டும் நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டால் அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு

அதிஷ்ட எண் : 1 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் அடர் பச்சை நிறம்

துலாம் ராசி அன்பர்களே..!! இன்று பணியில் இருந்த தொய்வு அகழும் நாளாக இருக்கும். கடந்த இரண்டு நாட்களாக நடைபெறாத காரியம் ஒன்று இன்று நடைபெறும். குடும்ப பிரச்சினைகள் நல்ல முடிவுக்கு வரக்கூடும். வீடு மாற்றம் இடமாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். இன்று எல்லாவற்றிலுமே இலாபம் கிடைக்கும். மரியாதை அந்தஸ்து கூடும். எதிர்ப்புகள் விலகி செல்லும். மனமகிழ்ச்சி ஏற்படும். வாழ்க்கை துணையின் ஆலோசனை உங்கள் முன்னேற்றத்திற்கு உதவும்.

எதிர்பாராமல் ஏற்படும் குடும்ப செலவை சமாளிக்க தேவையான பண உதவியும் கிடைக்கும். பல வகையிலும் நன்மை ஏற்படும். இழுபறியாக இருந்த சில வேலைகள் சாதகமாகவே நடந்து முடியும். தொழில் வியாபாரத்திலிருந்த பணத்தட்டுப்பாடு நீங்கும். இன்று மாணவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். இருந்தாலும் கொஞ்சம் முயற்சி செய்து பாடங்களைப் படியுங்கள் அது போதும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு

அதிஷ்ட எண் : 5 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறம்

விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று வளர்ச்சி கூட வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாளாக இருக்கும். ஆதாயம் சிறப்பாக கிடைக்கும். நினைத்த காரியத்தில் விரயங்கள் கொஞ்சம் இருக்கும். குடும்ப பெரியவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. இன்று எதிர்பார்த்த பணம் கையில் வந்து சேரும். உங்களுடைய திறமைகள் வெளிப்படும். பல வகையிலும் முன்னேற்றம் ஏற்படும். சொத்து தொடர்பான விஷயங்கள் இழுபறியான நிலை காணப்படும். இடமாற்றம் உண்டாகும் சுப செலவுகள் ஏற்படும்.

தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் தாமதமான போக்கு காணப்படும். செலவு கொஞ்சம் இன்று அதிகமாக தான் இருக்கும். ஆனால் தேவையான பணவசதி கிடைக்கும். கடினமான வேலைகள் கூட சுலபமாக முடியும். அந்த விஷயத்தில் நீங்கள் கொடுத்து வைத்தவர்கள். அதுமட்டுமில்லாமல் இன்று காதலில் வயப்பட கூடிய சூழல் இருக்கும். உங்களுடைய வசீகரப் பேச்சு அனைவரையும் கவரும் விதமாகவே இருக்கும்.

மாணவச் செல்வங்கள் இன்று நல்ல முன்னேற்றமான சூழ்நிலையை அடையக்கூடும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பு இருக்கும். சக மாணவரின் ஒத்துழைப்பும் இருக்கும். இன்று முக்கியமான பணியை  மட்டும் நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீல நிறம் எப்பொழுதும் உங்களுக்கு சிறப்பு வாய்ந்த நிறமாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு

அதிஷ்ட எண் : 7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் வெள்ளை நிறம்

தனுசு ராசி அன்பர்களே..!! இன்று மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் கொஞ்சம் அதிகரிக்கும். விரயங்கள் குறைய விழிப்புணர்ச்சி தேவை. உங்கள் வளர்ச்சியை கண்டு உறவினர்கள் ஆதங்கப்பட கூடும். அதிகாரிகளின் வெறுப்புக்கு ஆளாக நேரிடும். இன்று விரிவாக்கம் தொடர்பான முயற்சிகள் இழுபறியான நிலையில் இருந்து பின்னர் சரியாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும்.

சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு இடமாற்றம் போன்றவை தாமதப்படலாம். எந்த ஒரு விஷயத்திலும் ஈடுபடும் முன்பு தயக்கம் ஏற்பட்டு பின்னர் தெளிவு உண்டாகும். குடும்பத்தில் திடீர் குழப்பம் ஏற்பட்டு சரியாகும். அரசாங்கம் தொடர்பான விவகாரங்களில் சாதகமான போக்கு காணப்படும். இன்று மாணவர்களுக்கு கொஞ்சம் கல்வியில் தடை இருக்கும்.

கூடுமானவரை கடினமாக உழைத்து பாடங்களைப் படியுங்கள் அது போதும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடியதாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்

மகரம் ராசி அன்பர்களே..!! இன்று பொதுக் காரியங்களில் ஈடுபட்டு புகழ் சேர்க்கும் நாளாக இருக்கும். அலுவலக பணிகள் துரிதமாக நடைபெறும். நேற்றைய பிரச்சனை ஒன்று இன்று நல்ல முடிவுக்கு வரும். மருத்துவ செலவு கொஞ்சம் குறையும். இன்று கணவன் மனைவிக்கு இடையே எதையும் பேசி தெளிவுபடுத்திக் கொள்வது நன்மையை கொடுக்கும். குழந்தைகளுக்கான பொருட்களை இன்று வாங்க கூடும்.

இழுபறியாக இருந்த காரியங்கள் முடிவுக்கு வரக்கூடும். புதிய தொடர்புகளால் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். இடமாற்றம் ஏற்படலாம். வியாபாரம் தொடர்பான பயணங்களால் லாபம் கிடைக்க பெறுவீர்கள். வசூலாக வேண்டிய கடன் பாக்கிகள் வசூலாகும். வரவேண்டிய பணமும் வந்து சேரும். இன்று மாணவர்கள் கொஞ்சம் கடுமையாக உழைத்து பாடங்களை படிக்க வேண்டும்.

அப்பொழுதுதான் பாடங்கள் நினைவில் வைத்துக் கொள்ள உதவும். அதுமட்டுமில்லாமல் இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுபோலவே இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டால்  அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் சிவப்பு நிறம்

கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று முக்கிய புள்ளிகளைச் சந்தித்து முடிவெடுக்கும் நாளாக இருக்கும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். பிள்ளைகள் வழியில் பெருமை வந்து சேரும். கண்டும் காணாமலும் சென்ற உறவினர்கள் வழிய வந்து உறவாடுவார்கள். இன்று கல்விக்கான செலவு உண்டாகும். திறமை வெளிப்படும். புதிய நபர்களின் அறிமுகமும் உண்டாகும். அதன் மூலம் நன்மையும் ஏற்படும்.

எந்த ஒரு சின்ன விஷயம் கூட லாபமாகவே இன்று உங்களுக்கு நடந்து முடியும். முக்கிய நபர்களின் அறிமுகமும் கிடைப்பதால் அதனால் உங்களுக்கு கௌரவம் உண்டாகும். பூமி வாகனம் மூலம் ஆதாயம் ஏற்படும். பண வரவு திருப்திகரமாக இருக்கும். கலைத்துறையினருக்கு ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும். மன தைரியம் அதிகரிக்கும். உங்களுடைய புத்தி தெளிவு சிறப்பாக இருக்கும்.

உங்களுடைய அறிவுத்திறன் அனைவரும் வியக்கும் விதமாக இன்று இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெளிர் நீலத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெளிர் நீல நிறம் அதிஷ்டத்தைக் கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு

அதிஷ்ட எண் : 7 மற்றும் 8

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம் மற்றும் வெள்ளை நிறம்

மீனம் ராசி அன்பர்களே..!! இன்று பெற்றோரின் ஆதரவால் பெருமை கூடும் நாளாக இருக்கும். பாகப்பிரிவினைகள் சுமூகமாக முடியும். வருமானம் திருப்தி தரும் நிலையில் இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்து கொள்வார்கள். இன்று தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்கும். வங்கியில் இருப்பு கூடும். வாங்கிய கடனை திருப்பி செலுத்தி மனநிம்மதி அடைவீர்கள்.

இன்று தொழில் தொடர்பான பயணங்கள் வெற்றி கிடைக்கும். செயல் திறமை மூலம் கடினமான பணியையும் சிறப்பாகவே செய்து முடித்து மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். இன்று அதிகாரம் செய்யும் பதவிகள் தேடி வரும். கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும்.

மாணவச் செல்வங்கள் இன்று கல்வியில் சிறப்பாக செயல்படுவார்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |