நாள் : 17-02-2020, மாசி 05,
கிழமை : திங்கட்கிழமை,
இராகு காலம்- காலை 07.30 -09.00,
எம கண்டம்- 10.30 – 12.00,
குளிகன்- மதியம் 01.30-03.00,
சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00,
மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.
இன்றைய ராசிபலன்
மேஷம் :
இன்று உங்களின் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் உண்டாகலாம். மற்றவர்கள் மிது தேவையில்லாத கோபம் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த விஷயத்திலும் நிதானத்துடன் செயல்படுங்கள். சுபகாரியங்களையும் , புதிய முயற்சிகளையும் சற்று தள்ளி வைப்பதிருப்பது சிறப்பு .
ரிஷபம் :
இன்று பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் சுப நிகழ்ச்சிகள் அரங்கேறும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்வீர்கள். சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் ஏற்படும். வேலையில் புதிய மாற்றம் ஏற்படும். வியாபாரத்தில் இருந்து வந்த மந்த நிலை நீங்கி எதிர்பார்த்த லாபம் பெறுவீர்கள்.
மிதுனம் :
இன்று உங்களுக்கான பணவரவு மிக தாராளமாக இருக்கும். வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். உறவினர்களால் எதிர்பார்த்த உதவிகள் தக்க நேரத்தில் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைத்து மகிழ்ச்சி உண்டாகும் . பூர்வீக சொத்துகளில் இருந்து வந்த பிரச்சினை விலகி சுபகாரியங்கள் கைகூடி சந்தோசம் நிலைக்கும்.
கடகம் :
இன்று பொருளாதார ரிதீயாக நெருக்கடிகள் உங்களை சோகமடைய செய்யும். உறவினர்களினால் தேவையில்லாத வீண் பிரச்சினைகள் தோன்றும். அலுவலகத்தில் வேலையின் பளு அதிகரிக்கும். குடும்பத்தின் மகிழ்ச்சியை கெடுத்து வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். வியாபார ரீதியில் ஏற்படும் கொடுக்கல் , வாங்கலில் மிக கவனமாக இருப்பது நல்லது.
சிம்மம் :
இன்று குடும்பத்தில் நிம்மதி இல்லா சூழ்நிலை உண்டாகி , மன உளைச்சலில் இருப்பீர்கள். பெற்றோருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். வியாபாரத்தில் உள்ள கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் உங்களுக்கான முன்னேற்றம் ஏற்படும். வேலையில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைப்பதோடு , உங்களின் உடன்பிறந்தவர்கள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.
கன்னி :
இன்று வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் ஏற்படும். வியாபார சம்மந்தமாக நீங்கள் மேற்கொள்ளும் வெளியூர் பயணங்களால் அனுகூலப்பலன் ஏற்படும். உற்றார் உறவினர்கள் உதவியாக , உறுதியாக , துணையாக இருப்பார்கள். கடன்கள் குறைந்து , பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். தேவைகள் யாவும் பூர்த்தியாகி மகிழ்ச்சியில் திகழ்வீர்கள்.
துலாம் :
இன்று குடும்பத்தில் ஏற்படும் வீண் செலவுகளினால் பணப்பிரச்சனை ஏற்படலாம். பெண்கள் , மற்றவர்களை நம்பி பணமோ , பொருளோ கொடுக்காமல் இருப்பது நல்லதாக இருக்கும் , வீண் பிரச்சனையை தவிர்க்கலாம். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைப்பதில் சற்று கால தாமதம் உண்டாகும். தொழில் ரீதியான நீங்கள் மேற்கொள்ளும் புதிய முயற்சிக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும்.
விருச்சிகம் :
இன்று பிள்ளைகளால் அனுகூலமான பலன் கிட்டும். உடன்பிறந்தவர்களிடம் ஒற்றுமை ஏற்பட்டு மன உறுதியுடன் இருப்பீர்கள். வீட்டு தேவைகள் பூர்த்தியாகி திருப்தி அடைவீர்கள். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடு , மகிழ்ச்சி மேலோங்கும். பூர்வீக இருக்கும் சொத்துக்களால் லாபம்கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறைந்து , மன உளைச்சல் நீங்கும்.
தனுசு :
இன்று உங்களின் உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்பட்டு சங்கடத்தை கொடுக்கும் . பிள்ளைகளினால் வீண் விரயங்கள் உண்டாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடு முற்றிலும் நீங்கும். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் அலைச்சலை கொடுத்தாலும் அனுகூலப் பலன்கள் வந்து சேரும்.
மகரம் :
இன்று நீங்கள் மேற்கொள்ளும் புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை கொடுக்கும் . எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் உங்களை தேடி வரும். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் அமைதி நிலவும். தொழில் சம்பந்தபட்ட வழக்குகளில் வெற்றி கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும். நவீன பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
கும்பம் :
இன்று எந்த ஒரு காரியத்தையும் நல்ல நம்பிக்கையுடன் செய்து முடிப்பீர்கள். பெரிய மனிதர்களுடன் நட்பு ஏற்பட்டு உங்களின் செல்வாக்கு உயரும். நண்பர்கள் உங்களுக்கு அனுகூலமாக இருந்து மகிழ்ச்சியை கொடுப்பார்கள். கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் விலகி ஒற்றுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் தொடர்ந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் குறைந்து , எதிர்மறை எண்ணங்கள் நீங்கும்.
மீனம் :
இன்று குடும்பத்தில் ஒற்றுமை நிலவ நீங்கள் சற்று விட்டு கொடுத்து செல்ல வேண்டும். மாணவர்கள் தங்களின் படிப்பில் முழு திறமைகளை வெளிபடுத்துவார்கள். ஆரோக்கிய ரீதியாக சிறு சிறு பிரச்சினைகள்உண்டாகலாம் . அலுவலகத்தில் வேலைபளு அதிகரித்தாலும் உடனிருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். இதனால் வேலை பளு முற்றியுலும் குறையும்.