மேஷம் ராசி அன்பர்களே..!! உங்கள் நலனுக்கு எதிராக செயல்பட்டவரை இன்று சந்திக்க நேரிடும். பெருந்தன்மையுடன் அவரிடம் விலகிச் செல்லுங்கள். ஓரளவு நிலைமை இன்று சீராக தான் இருக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பணி ஓரளவு நிறைவேறும். பணவரவை விட செலவு கொஞ்சம் கூடும். வாகனத்தில் மித வேகத்தை பின்பற்றுங்கள். இன்று விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.
காரியத்தில் இருந்த தடங்கல்கள் விலகி செல்லும். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெறுவதற்கு கொஞ்சம் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். பாடத்தில் கவனத்தை செலுத்துவது மிகவும் நல்லது. விளையாட்டு துறையில் உள்ளவர்களுக்கு வெற்றி வாய்ப்புக்கள் ஏற்படும். இன்று உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்பட்டாலும் எடுத்த வேலையை எப்படியாவது செய்து விடுவீர்கள்.
இன்று மனம் ஓரளவு அமைதியாக காணப்படும். கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடியதாக இருக்கும். அது மட்டும் இல்லை இன்று காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்குங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு
அதிஷ்ட எண் : 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் வெள்ளை நிறம்
ரிஷபம் ராசி அன்பர்களே..!! உங்களிடம் பலரும் அன்பு பாராட்டக் கூடும். மனதில் புதிய உத்வேகம் உருவாகும். தொழில் வியாபாரம் செழித்து வளரும். உபரி பண வருமானம் கிடைக்கும். எதிர்பார்த்த சுப செய்தி வந்து சேரும். இன்று மனதில் ஏதாவது கொஞ்சம் கவலை இருந்துக் கொண்டே இருக்கும். பய உணர்வு கொஞ்சம் இருக்கும். தூக்கம் குறையக்கூடும். சரியான நேரத்திற்கு தூங்கச் செல்லுங்கள் .வாகனத்தில் செல்லும்போது கவனமாக செல்லுங்கள்.
அடுத்தவருடன் பகை ஏற்படாமல் இருக்க கவனமாக பேசுங்கள். மாணவர்களுக்கு தொழில்நுட்பக் கல்வியில் ஆர்வம் ஏற்படும். சாமர்த்தியமாகப் பேசி காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். நீண்ட தூரத்திலிருந்து வரும் தகவல்கள் நன்மையாக இருக்கும். இன்று மனம் மகிழும். மனம் தெளிவாகவும் இருக்கும். இன்று கணவன் மனைவிக்குள் அன்பு இருக்கும்.
அது மட்டுமில்லாமல் உடல் நிலையில் மட்டும் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள் அது போதும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுபோலவே இன்று காக்கைக்கு அன்னமிட்டு வாருங்கள் நீங்கள் செய்யக்கூடிய காரியங்கள் நல்லபடியாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் மஞ்சள் நிறம்
மிதுனம் ராசி அன்பர்களே..!! உங்களின் நல்ல செயலை சிலர் பரிகாசம் செய்யக் கூடும். மற்றவர்கள் உங்களை குறை சொல்லக்கூடும். ஆனால் எதைப்பற்றியும் கவலை வேண்டாம். பயனறிந்து பேசுவதால் உரிய நன்மை கிடைக்கும். தொழிலில் நிலுவைப் பணியை நிறைவேற்றவும். சீரான அளவில் பணவரவு இருக்கும். அதிகம் பயன் தராத பொருட்களை விலைக்கு வாங்க வேண்டாம். இன்று குடும்பத்தில் இருப்பவருடன் அனுசரித்துச் செல்வது நல்லது.
கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் ஏற்படலாம். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவது நல்லது. திடீர் செலவு கொஞ்சம் ஏற்படும். பெண்கள் மற்றவர்களிடம் கவனமாகப் பேசுவதும் கருத்து வேற்றுமை வராமலிருக்கும். வீண் அலைச்சல் குறையும். வாகனங்களில் உபயோகப்படுத்தும் பொழுது கவனமாக இருங்கள். வாகனச் செலவு கொஞ்சம் இருக்கும்.
கூடுமானவரை இன்று நீங்கள் நிதானத்தை கடைபிடிப்பது ரொம்ப நல்லது. இன்று நீங்கள் முக்கியமான பணி மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். அது மட்டுமில்லை இன்று காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்குங்கள். அனைத்து காரியமும் நல்லபடியாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு
அதிஷ்ட எண் : 3 மற்றும் 4
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்
கடகம் ராசி அன்பர்களே..!! சமூகத்தில் உங்கள் மீதான நல்ல மதிப்பு இன்று அதிகரிக்கும். வெகுநாட்களாக இலட்சியத்தை நிறைவேற்ற கடுமையாக உழைத்துக் கொண்டிருப்பீர்கள். அது உங்களுக்கு இன்று நல்ல முடிவை கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி திருப்திகரமாக இருக்கும். தாராள அளவில் பண வரவு கிடைக்கும். நண்பர்களுடன் விருந்து விழாவில் கலந்துக் கொள்வீர்கள். கூடுமானவரை காரியங்களை செய்யும்போது மட்டும் நிதானமாக செய்யுங்கள். இன்று மனக்கவலை விலகிச்செல்லும்.
மற்றவர்களிடம் பகை ஏற்படாமல் பழகுவது நல்லது காரியங்களில் மெத்தனப்போக்கு கொஞ்சம் காணப்படும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் குறித்த கவலை இருக்கும். சக மாணவருடன் நிதானமாக பழகுவது நல்லது. கணவன் மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை கொஞ்சம் வரக்கூடும். பிள்ளைகள் கல்வியில் முன்னேற்றமடைய தேவையான உதவிகளைச் செய்வீர்கள். இன்றைய நாள் ஓரளவு சிறப்பான நாளாக இருக்கும். பெண்களுக்கு அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.
பொறுமையை மட்டும் இழக்க வேண்டாம். காரியங்களை செய்யும்போது பொறுமையாகச் செய்யுங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுபோலவே காக்கைக்கு அன்னம் இடுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். உங்களுடைய கர்மவினைகள் தீர்ந்து அனைத்து காரியங்களும் சிறப்பாக நடக்கும். தயவு செய்து இதனை நீங்கள் செய்து பாருங்கள்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு
அதிஷ்ட எண் : 3 மற்றும் 4
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்
சிம்மம் ராசி அன்பர்களே..!! உங்கள் பேச்சில் வசீகரம் இருக்கும். புதியவர் நட்புடன் அன்பு பாராட்டுவார். தொழில் வியாபாரம் செழிக்க அனுகூல காரணி பலம் பெறும். உபரி பண வருமானம் கிடைக்கும். இஷ்ட தெய்வ வழிபாடு நிறைவேற்றுவீர்கள். இன்று பிரச்சினைகள் அனைத்துமே சரியாகும். எந்த சூழ்நிலையிலும் சுய கௌரவத்தை விட்டுக் கொடுக்காமல் செயல்படுவீர்கள். மன தைரியம் உண்டாகும். மனதில் இருந்த கவலை நீங்கும். வருத்தம் நீங்கி மகிழ்ச்சியும் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எளிதாக பணிகளை செய்து முடிப்பார்கள்.
மேல் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். ஆர்டர்கள் புடிப்பதில் இருந்த கஷ்டங்கள் குறையும். இன்று வீண் அலைச்சலும் ஓரளவு குறையும். வெளியூர் பயணங்கள் நல்லபடியாகவே இருக்கும். தன வரவு தாராளமாக இருக்கும் என்பதால் சேமிக்கக்கூடிய எண்ணத்தை மட்டும் வளர்த்துக் கொள்ளுங்கள். இன்று கணவன் மனைவிக்கிடையே சின்ன சின்ன பூசல்கள் இருக்கும் எதையுமே பேசி தீர்த்துக் கொள்ளுங்கள்.
அது போலவே இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு சிறப்பான நிறமாக இருக்கும். அதுபோலவே இன்று காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்குங்கள். எப்பொழுதுமே காக்கைக்கு அன்னம் இடுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். உங்களுடைய கர்ம வினைகள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்பை ஏற்படுத்தி கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் நீல நிறம்
கன்னி ராசி அன்பர்களே..!! சிரமங்களுக்காக மனம் வருந்த வேண்டாம். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு உங்களுக்கு நம்பிக்கையை கொடுக்கும். அதிக உழைப்பு தொழில் வியாபாரத்தில் புதிய பரிமாணத்தை உருவாக்கிக் கொடுக்கும். புத்திரர்கள் விரும்பிய பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். தொழில் வியாபாரம் சிறப்பாக இன்று இருக்கும். தொழில் தொடர்பாக கொஞ்சம் அலைய வேண்டி தான் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். சரக்குகளை அனுப்பும் பொழுது கவனமாக பாதுகாப்பாக அனுப்புங்கள்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் காரிய தடைகளை சந்திக்க வேண்டியிருக்கும். அலுவலகப் பணிகள் மெதுவாகத்தான் நடைபெறும். குடும்பத்தில் பாதியில் நின்ற வீடு கட்டும் பணியை மீண்டும் தொடர்வீர்கள். சிலர் புதிய வீட்டுக்கு குடி போக கூடிய சூழலும் நன்றாகவே இருக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். அதுபோலவே மாணவர்கள் கொஞ்சம் கடுமையாக உழைத்து பாடங்களை படிக்க வேண்டும். பாடத்தில் மட்டும் கவனத்தை செலுத்துவது நல்லது.
அது மட்டும் இல்லை இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடியதாக இருக்கும். அதுபோலவே காக்கைக்கு அன்னம் இடுவதை வாடிக்கையாக வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இதனால் உங்களுடைய கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி காரியத்தில் சிறப்பான வெற்றியைப் பெறமுடியும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் நீல நிறம்
துலாம் ராசி அன்பர்களே..!! இன்று அதிக வேலைப்பளு மனதிற்கு சஞ்சலத்தைக் கொடுக்கும். நண்பரின் ஆலோசனை நம்பிக்கையை கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி சீராகவே இருக்கும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். அதிகம் பயன் தராத பொருட்களை மட்டும் வாங்க வேண்டாம். இன்று குடும்ப கஷ்டம் கடன் தொல்லை போன்றவை நீங்கும். வாழ்க்கையில் இன்று முன்னேற்றமான சூழ்நிலையை சந்திக்கக்கூடும். பயத்தை வெளிக்காட்டாமல் தைரியமாக இருப்பது போல் மற்றவர் முன்பு செயல்படுவீர்கள்.
கூடுமானவரை இனம் தெரியாத பயத்தை தயவுசெய்து விலக்கிவிடுங்கள். மனதை நிம்மதியாக வைத்துக் கொள்ளுங்கள். இன்று பண வரவு சிறப்பாக இருக்கும். காரியத்தில் இருந்த தடைகள் விலகி செல்லும். கூர்மையான மதிநுட்பத்தால் எந்த பிரச்சினையும் எளிதாக தீர்த்து விடுவீர்கள். பூர்வீக சொத்துக்களில் இருந்த தகராறுகள் நல்ல முடிவுக்கு வரும். கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமாக இருப்பார்கள்.
முடிந்தால் இன்று ஆலயம் சென்று வாருங்கள். மனம் ஓரளவு நிம்மதியாக காணப்படும். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடியதாக இருக்கும். அதுபோலவே காக்கைக்கு தினசரி அன்னமிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இது உங்களுடைய கர்ம வினைகளை தீர்த்து வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் நீல நிறம்
விருச்சிகம் ராசி அன்பர்களே..!! உடல் ஆரோக்கியம் இன்று பலம் பெறும். திகைப்பு தந்த பணியை எளிதாக நிறைவேற்றுவீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை அதிகரிக்கும். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்க கூடும். போட்டி பந்தயத்தில் வெற்றி பெற அனுகூலம் உண்டாகும். இன்று காரியத்தடை தாமதம் போன்றவை ஏற்படக்கூடும். புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. சமயத்துக்கு ஏற்ப கருத்துக்களை மாற்றிக் கொண்டு செயல்படுவீர்கள்.
வீண் செலவைக் குறைப்பதற்கு திட்டமிட்டு செயல்படுவது மிகவும் சிறப்பு. பெண்களுக்கு ஆலோசனை கேட்டு குடும்பத்தில் இருப்பவர்கள் செயல்படுவார்கள். இன்று பெண்களுக்கு அதிஷ்டமான வாய்ப்புகளும் கிடைக்கும். இன்று கூடுமானவரை யாரிடமும் கடன்கள் மட்டும் வாங்காதீர்கள். பொறுமையாக இருங்கள். கணவன் மனைவிக்கிடையே சின்ன சின்ன பூசல்கள் இருக்கும். எதையுமே பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள்.
இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு சிறப்பு வாய்ந்த நிறமாக இருக்கும். அது மட்டுமில்லாமல் காக்கைக்கு அன்னம் இடுவதை தினசரி வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். உங்களுடைய கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 2
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்
தனுசு ராசி அன்பர்களே..!! இன்று உங்கள் பேச்சில் மங்கள தன்மை நிறைந்திருக்கும். நல்லோரின் நட்பு எளிதாக கிடைக்கும். தொழில் வியாபாரம் செழித்து வளரும். பணவரவும் நன்மையை கொடுக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருளை பெருமளவில் இன்று வாங்கி குவிப்பீர்கள். இன்று தொழில் வியாபாரம் எதிர்பார்த்தபடி நல்லபடியாக நடக்கும். பணத்தட்டுப்பாடு நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சங்கடங்கள் சரியாகும்.
புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பதில் கிடைக்கும். கலைத்துறையினருக்கு நிதானத்தை மட்டும் கடைபிடிக்கவேண்டும். தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வருவாய் இன்று ஏற்படும் உல்லாச பயணங்களில் நாட்டம் செல்லும். ஆன்மிக எண்ணங்கள் மேலோங்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். இன்று எல்லா வகையுமான நன்மைகளையும் நீங்கள் அடையக்கூடும்.
இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடியதாக இருக்கும். அது மட்டுமில்லை காக்கைக்கு தினசரி அன்னமிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். உங்களுடைய கர்ம தோசங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்தும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 8
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்
மகரம் ராசி அன்பர்களே..!! இன்று புகழ்ச்சியை மனம் விரும்பும். செயல் நிறைவதற்கு சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். தொழில் வியாபாரத்தில் சிறிய குளறுபடி வந்து சரியாகும். கொஞ்சம் பணக்கடன் பெறக்கூடும். ஒவ்வாத உணவுகளை மட்டும் உண்ண வேண்டாம். இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களது ஆலோசனை கேட்டு நடப்பது மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். கணவன் மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவதால் வருத்தங்கள் நீங்கும். பிள்ளைகளின் செயல்பாடுகள் மனதிற்கு திருப்தி தருவதாக இருக்கும்.
சோதனைகளை வெற்றியாக இன்று மாற்றிக் கொள்வீர்கள். உங்களுடைய செயல்பாடுகள் மற்றவர்களை கவரும். கொடுக்கல் வாங்கலில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருங்கள். பணப்பரிவர்த்தனையில் ரொம்ப கவனமாக செயல்பட வேண்டும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். அது போலவே வெளியூரிலிருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும். ஏற்றுமதி துறை சார்ந்தவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும்.
கூடுமானவரை ஆசிரியர்களின் சொற்படி மட்டும் நடந்து கொள்ளுங்கள். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். அதுபோலவே தினசரி காக்கைக்கு அன்னம் இடுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். உங்களுடைய கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி காரியத்தில் வெற்றி ஏற்படும். தயவு செய்து இதனை நீங்கள் செய்து பாருங்கள்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்
கும்பம் ராசி அன்பர்களே..!! கடந்தகால சிரமம் பிறரிடம் சொல்ல வேண்டாம். யாரிடமும் ரகசியத்தை பகிர்ந்துகொள்ள வேண்டாம். செயல்களில் முழு யோசனை அவசியம். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பெறுவதற்கு கூடுதலாகத்தான் பணிபுரிவீர்கள். பணவரவை விட செலவு கொஞ்சம் கூடும். விஷ பிராணிகளிடம் விலகியிருங்கள். இன்று மன அமைதி குறையலாம். கூடுமானவரை ஆலயம் சென்று வாருங்கள். பயணத்தை தவிர்ப்பது நன்மையை கொடுக்கும். ஏனென்றால் பயணம் உங்களுக்கு அலைச்சலை தருவதாக இருக்கும்.
எதிர்பார்த்த பணவரவு உங்களுக்கு வந்து சேரும். இன்று புதிய நபரிடம் கொஞ்சம் கவனமாகவே நடந்து கொள்ளுங்கள். உறவினர் உதவிகள் கிடைக்கும். நண்பர்களின் ஒத்துழைப்புடன் வியாபாரத்தை விரிவாக்கமும் செய்வீர்கள் .இன்று ஏற்றுமதி சம்பந்தமான துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். அது போலவே பங்குச் சந்தையில் உள்ளவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். புதிய வகுப்புகளில் சேர்வதற்கு மாணவர்கள் முயற்சிகளை மேற்கொள்வார்கள். கூடுமானவரை படிப்பில் கவனம் செலுத்துவது நல்லது. ஆசிரியர்களின் சொல்படி நடந்து கொண்டால் அனைத்து காரியம் நல்லபடியாக இருக்கும்.
சக மாணவரிடம் பேசும் போது கொஞ்சம் கவனமாக பேசுங்கள். இன்று குடும்பத்தில் ஓரளவு மகிழ்ச்சி இருக்கும். வீண் வாக்குவாதங்கள் மட்டும் யாரிடமும் நீங்கள் செய்ய வேண்டாம். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடியதாக இருக்கும். அதுபோலவே தினசரி காக்கைக்கு அன்னம் இடுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். உங்களுடைய கர்ம தோஷங்களை நீக்கி காரியங்களை சிறப்பாக செய்ய வைக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிஷ்ட எண் : 6 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்
மீனம் ராசி அன்பர்களே..!! இன்று சிரமமான சூழ்நிலை மாறி மனம் மகிழ்ச்சியாக காணப்படும். எண்ணத்திலும் செயலிலும் உத்வேகம் பிறக்கும். மனம் உற்சாகமாக இருக்கும். தொழிலில் உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். பண கடனை அடைக்க கூடிய சூழல் இருக்கும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை கொடுக்கும். மன தைரியம் கூடும். காரியத்தில் அனுகூலம் ஏற்படும். எதிர்பார்த்த பணமும் கைக்கு வந்து சேரும். மாணவர்கள் இன்று கல்வியில் தனது திறமையை வெளிக்காட்டுவார்கள்.
பாடங்களை படிப்பதில் தீவிர கவனம் செலுத்துவீர்கள். அரசியல் துறையினருக்கு எடுக்கக்கூடிய ஒப்பந்தங்கள் நன்றாக இருக்கும். சில விஷயங்களை மேற்கொள்ளும் போது மட்டும் கொஞ்சம் கடுமையாக ஆராய்ந்து மேற்கொள்வது சிறப்பு. அதுபோலவே வெளிநாட்டு பயணங்கள் உங்களுக்கு நல்ல அனுகூலத்தை கொடுக்கும். லாபம் பன்மடங்கு பெருகும். மேலிடத்தின் கனிவான பார்வை உங்களுக்கு கிடைக்கப் பெறும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நல்ல வளர்ச்சிகரமான சூழ்நிலை உருவாகும். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும்.
கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். சகோதரர் வகையில் ஒற்றுமை இருக்கும். இன்று எல்லாவகையான நன்மைகளையும் நீங்கள் அடையக்கூடும். இன்று முக்கியமான பணியை மட்டும் நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கும். அதுபோலவே தினசரி காக்கைக்கு அன்னம் இடுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இது உங்களுடைய கர்ம தோஷங்கள் அனைத்தையும் நீக்கி உங்களை செல்வ செழிப்பாக வாழ வைக்கும். தயவு செய்து இதனை நீங்கள் செய்து பாருங்கள்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6 மற்றும் 8
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்