Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (23.11.2019) நாள் எப்படி இருக்கு ? முழு ராசி பலன்கள் இதோ..!!

மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று வேண்டாத நபரை நீங்கள் பொது இடத்தில் சந்திக்க நேரிடும். எண்ணத்திலும் பேச்சிலும் கட்டுப்பாடு அவசியம். இன்று தொழிலில் உற்பத்தி விற்பனை சுமாராகத்தான் இருக்கும். புதிய இனங்களில் பணச்செலவு ஏற்படும். போக்குவரத்தில் கவன நடையை பின்பற்ற வேண்டும். இன்று உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு அலுவலக பணி தொடர்பான அலைச்சல் இருக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும்.

குடும்பத்தில் உங்களது பேச்சுக்கு எதிர்ப் பேச்சு பேசியவர்கள் அடங்கி விடுவார்கள். தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். ஆனால் பணவரவு திருப்திகரமாக இருக்கும். வாடிக்கையாளர்களின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுப்பது நன்மையை கொடுக்கும். இன்று வியாபார தளத்திற்காக புதியதாக இடம் வாங்க கூடும். இன்று ஓரளவு மனம் மகிழ்ச்சியாகவே இருக்கும். வெளியூர் பயணம் நல்ல அனுபவத்தை கொடுக்க கூடியதாக இருக்கும்.

இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் பெறக்கூடும். இருந்தாலும் படித்த பாடத்தை ஒரு முறைக்கு இரு முறை எழுதிப் பாருங்கள். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடியதாக இருக்கும். அது மட்டுமில்லை இன்று காக்கைக்கு எள் கலந்த சாதத்தை அன்னதானமாக கொடுங்கள். உங்களுடைய கர்ம தோஷங்கள் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக்கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் பச்சை நிறம்

ரிஷபம் ராசி அன்பர்களே..!! இன்று மனதில் கருணை தன்மை அதிகமாக இருக்கும். நல்ல செயல் புரிந்து சமூகத்தில் வரவேற்பு பெறுவீர்கள். தொழில் வியாபாரம் செழிப்பதற்கு  தேவையான அனுகூல காரணி பலம்பெரும். உபரி பண வருமானம் கிடைக்கும். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்க கூடும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் திறமை வெளிப்படும். கல்வியில் வெற்றி பெற தேவையான உதவிகளும் கிடைக்கும். புதிய முயற்சிகளை தள்ளிப் போடுவது மட்டும் நல்லது. காரியத்தில் தடை தாமதம் வீண் அலைச்சல் போன்றவை இருக்கும்.

தொழில் வியாபாரத்தில் திடீர் போட்டிகள் இருக்கும். வீண் வார்த்தைகளை பேசுவதை மட்டும் தவிர்த்துவிடுங்கள். வாடிக்கையாளர்கள் மன நிறைவடைவதற்காக  கூடுதலாகவே உழைக்க வேண்டி இருக்கும். இன்று ஓரளவு சிறப்புமிக்க நாளாக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சிறப்பாகவே காணப்படும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் விலகி செல்லும்.

இருந்தாலும் கொஞ்சம் கடுமையாக உழைத்து பாடங்களைப் படியுங்கள். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடியதாக இருக்கும். அது மட்டுமில்லை இன்று காக்கைக்கு எள் கலந்த சாதத்தை அன்னமாக கொடுங்கள். உங்களுடைய கர்ம தோஷங்கள் அனைத்துமே நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக்கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிஷ்ட எண் : 6 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்

மிதுனம் ராசி அன்பர்களே..!! இன்று மாறுபட்ட சூழ்நிலை ஏற்படக்கூடும். நிதான செயல் கூடுதல் நன்மையை பெற்றுக் கொடுக்கும். தொழில் வியாபார நடைமுறை சுமாராகத் தான் இருக்கும். சிக்கனமாக செலவு செய்வது நல்லது. இன்று தியானம் தெய்வ வழிபாடு மனதிற்கு அமைதியை கொடுக்கும். இன்று தொழில் வியாபாரம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கும் பொழுது தீர ஆலோசித்த பின் முடிவு எடுப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் சக ஊழியர்களின் கருத்துக்கு மாற்று கருத்து சொல்லாமல் இருப்பது நன்மையை கொடுக்கும்.

குடும்பத்தில் ஏதாவது வேண்டாத பிரச்சினை தலை தூக்கலாம் பார்த்துக்கொள்ளுங்கள். உறவினர்கள் நண்பர்கள் பிள்ளைகள் என்று யாரிடமும் வீண் சண்டையை  தவிர்ப்பது நல்லது. கூடுமானவரை இன்று பொறுமையையும் நிதானத்தையும் கடைபிடியுங்கள் அது போதும். இன்று மாணவக் கண்மணிகள் கொஞ்சம் கஷ்டப்பட்டு பாடங்களைப் படியுங்கள். படித்த பாடத்தை ஒரு முறைக்கு இரு முறை எழுதிப் பாருங்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடியதாக இருக்கும். அது மட்டுமில்லை காலையில் நீங்கள் எழுந்ததும் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக இட்டு பின்பு உங்கள் வேலையை ஆரம்பியுங்கள். அனைத்துக் காரியமும் உங்களுக்கு சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் நீல நிறம்

கடகம் ராசி அன்பர்களே..!! இன்று பணி முழு அளவில் வெற்றியை கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் அபரிதமான வளர்ச்சி ஏற்படும். ஆதாய பணவரவு கிடைக்கும். குடும்பத் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். இளமைக்கால நண்பர்களை சந்திக்க கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். இன்று உங்களது கருத்துக்கு சிலர் மாற்று கருத்து மட்டும் சொல்லக்கூடும். அவர்களிடம் நீங்கள் எந்தவித வாக்குவாதங்கள் செய்யாமல் இருங்கள். அவர்களை எதிர்த்துப் பேசாமல் அமைதியாக இருப்பதுதான் எப்பொழுதுமே உங்களுக்கு நல்லது.

மாணவர்கள் எவ்வளவு திறமையாக படித்தாலும் பாடங்கள் கடினமானது போலவே இருக்கும். மனதை தளரவிடாமல் படிப்பது மிகவும் சிறப்பு. கணவன் மனைவிக்கிடையே அன்பு கூடும். அனைவரையும் அனுசரித்துச் செல்லுங்கள். தாய்வழி உறவினர்களுடன் சஞ்சலங்கள் ஏற்படலாம். கூடுமானவரை பொறுமையாகவே பேசுங்கள். மற்றபடி இன்று தனவரைப் பொருத்தவரை எந்த வித பிரச்சினையும் இல்லை. உடல் ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும்.

இன்று மனம் ஓரளவு மகிழ்ச்சியாகவே காணப்படும். இன்று முக்கியமான  பணியை மட்டும் நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு சிறப்பு வாய்ந்த நிறமாக இருக்கும். அதுபோலவே இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள். உங்களுடைய கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக்கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு

அதிஷ்ட எண் :  2 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் நீல நிறம்

சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று உங்களுடைய செயல்களில் திறமை வளரும். அலைச்சல் தந்த வேலை ஆதாயத்தைக் கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி இலக்கு நிறைவேறும். உபரி பண வருமானம் கிடைக்கும். பெற்றோரின் தேவையை  அறிந்து நிறைவேற்றுவீர்கள். இன்று குடும்பத்தில் இருப்பவருடன் கருத்து மோதல்கள் மட்டும் கொஞ்சம் வரக்கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். கணவன் மனைவிக்கிடையே இருந்த பூசல்கள் இன்று சரியாகும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்குவது மற்றும் அவர்களது நலனுக்காக பாடுபட வேண்டியிருக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகம் பணியாற்றுவதால் உடல் சோர்வடைய கூடும். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரியிடம் வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. எதிர்பார்த்த பணி உயர்வு கிட்டும். சம்பள உயர்வு போன்ற செய்திகள் உங்கள் காதுக்கு வந்து சேரும். அதுமட்டுமில்லாமல் வெளியூர் தகவல்கள் உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுப்பதாக இருக்கும். இன்று குடும்பத்தில் ஓரளவு நிம்மதி காணப்படும். இன்று மாணவக் கண்மணிகள் கொஞ்சம் கடுமையாக முயன்று தான் பாடங்களை படிக்க வேண்டியிருக்கும்.

படித்த பாடத்தை ஒரு முறைக்கு இரு முறை எழுதிப் பார்ப்பது மிகவும் சிறப்பாக இருக்கும். அதுபோல இன்று முக்கியமான பணியை நீங்கள் செய்யும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடியதாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னம் ஆக கொடுங்கள். உங்களுடைய வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக்கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு

அதிஷ்ட எண் : 6 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் இளம் சிவப்பு நிறம்

கன்னி ராசி அன்பர்களே..!! இன்று முக்கிய செயலை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம். அந்த செயலை நீங்களே செய்வது நல்லது. சுய தேவை ஓரளவு பூர்த்தியாகும். தொழில் வியாபாரத்தில் உள்ள சிரமங்களை உடனடியாக சரி செய்ய வேண்டும். அளவான பணவரவு கிடைக்கும். ஒவ்வாத உணவுகளை மட்டும் தயவு செய்து உண்ண வேண்டாம். இன்று உடல் ஆரோக்கியம் சீராகவே இருக்கும். குடும்ப பிரச்சினைகள் தீரும். மனக்கவலை ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத செலவு கொஞ்சம் இருக்கும். மற்றவர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பதால் பகை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம்.

எவ்வளவுதான் நீங்கள் திறமையாக செயல்பட்டாலும் பாராட்டுக்கள் கிடைப்பது கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கும். சிலருக்கு எதிர்பாராத பேச்சு மனவருத்தத்தை கொடுக்கலாம். கவனமாக இருங்கள். மற்றவர்கள் உங்களை குறை சொல்வார்கள். எதையும் நீங்கள் காதில் வாங்காதவர் போல் இருப்பது மிகவும் நல்லது. சொத்து சார்ந்த விஷயங்கள் அனுகூலத்தை கொடுக்கும். இன்று நீங்கள் செய்யக்கூடிய விஷயங்களை பொறுமையாகவும் நிதானமாகவும் செய்யுங்கள் அது போதும். மாணவர்கள் இன்று கடினமாகத்தான் படிக்க வேண்டியிருக்கும்.

படித்த பாடத்தை ஒரு முறைக்கு இரு முறை எழுதிப் பாருங்கள். அது மட்டும் இல்லாமல் சக மாணவரிடம் பழகும் போது கொஞ்சம் கவனமாக பழகுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடியதாக இருக்கும். அது மட்டுமில்லை இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள். உங்களுடைய வாழ்க்கையில் கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக்கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு

அதிஷ்ட எண் :  3 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறம்

துலாம் ராசி அன்பர்களே..!! சிலர் சொல்லும் அறிவுரை உங்களுக்கு சங்கடத்தை கொடுக்கலாம். பணிச்சுமை ஏற்பட கூடும். தொழில் வியாபாரத்தில் உள்ள அனுகூலத்தை பாதுகாப்பது நல்லது .செலவுக்கான பண தேவை அதிகரிக்கும். உணவை தரம் அறிந்து கொள்ளுங்கள் அது போதும். இன்று கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி இருக்கும். பிள்ளைகள் தொடர்பான காரியங்களை செய்து முடிக்க அலைய வேண்டியிருக்கும். உங்களது செயல்களுக்கு இருந்த முட்டுக்கட்டைகள் விலகிச்செல்லும். எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கும். பணவரவும் நல்லபடியாக வந்து சேரும்.

பிள்ளைகள் விஷயத்தில் மட்டும் கவனமாக இருங்கள் அது போதும். உறவினர்களின் வருகை இருக்கும். ஆடை ஆபரணச் சேர்க்கையும்  ஏற்படும் .குடும்ப உறுப்பினர்களுடன் பேசும்பொழுது வார்த்தைகளை கோர்த்து பேசுவது அவசியம். கூடுமானவரை இன்று கோபத்தை மட்டும் தவிர்த்து விடுங்கள் அது போதும். இன்று மாணவக் கண்மணிகள் கொஞ்சம் முயற்சி செய்து பாடங்களைப் படியுங்கள். கல்வியில் இருந்த தடை உங்களுக்கு விலகி விட்டது.

ஆகையால் கூடுமானவரை கொஞ்சம் முயற்சி செய்யுங்கள் அது போதும். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு சிறப்பு வாய்ந்த நிறமாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள். கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பு ஏற்படுத்திக்கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்

விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று இஷ்ட தெய்வ அருளால் நன்மை உருவாகும். இயற்கை சூழ்நிலைகளுடன் இயல்பாக வாழ்க்கை நடத்துவீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி வியப்பூட்டும் வகையில் இருக்கும். மனைவி விரும்பி கேட்ட பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். இன்று எதிலும் கவனமாக இருப்பது மட்டும் நல்லது. அக்கம்பக்கத்தினரிடம் சில்லறை சண்டைகள் கொஞ்சம் உருவாகலாம். எதையும் சமாளிக்கும் மன நிலை ஏற்படும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் சிறு தடங்கல்கள் உண்டாகும்.

நண்பர்கள் மூலம் நன்மை ஏற்படும். நிதியுதவி எதிர்பார்த்தபடி கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி குறையும் படியான சூழல் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். எதையும் கவனமாக செயல்படுங்கள். கூடுமானவரை கணவன் மனைவி இருவரும் அனுசரித்துச் செல்வது மிகவும் சிறப்பு. இன்று குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வரக்கூடும் என்பதால் பொறுமையை மட்டும் கையாளுங்கள் அது போதும். இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமடைய கொஞ்சம் கூடுதலாக உழையுங்கள். படித்த பாடத்தை ஒரு முறைக்கு இரு முறை எழுதிப் பாருங்கள்.

சக மாணவரிடம் கொஞ்சம் அன்பாக பழகுங்கள். விளையாட்டு துறையிலும் உங்களுக்கு இன்று நாட்டம் செல்லும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு மிகவும் சிறப்பை கொடுக்கும். அது போலவே இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக வழங்குங்கள். உங்களுடைய வாழ்க்கையில் உள்ள  கர்ம தோஷங்கள் அனைத்தையும் நீக்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 2

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்

தனுசு ராசி அன்பர்களே..!! மனதில் இருந்த கவலை நீங்கும் நாளாக இன்றைய நாள் இருக்கும்.  தொழில் வியாபாரம் வளர்ச்சி பெறுவதற்கு கூடுதல் பணி மேற்கொள்வீர்கள். பணவரவில் திருப்திகரமான நிலை உருவாகும். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க கூடும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைத்து அலுவலகப் பணிகளை முடிக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே ஒருவருக்கு ஒருவர் அனுசரித்துச் செல்வதன் மூலம் நல்ல பலன்களை பெறமுடியும்.

பிள்ளைகள் உங்களுடைய கருத்துக்களை கேட்டு நடப்பது மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். பெண்களுக்கு சமையல் செய்யும்போது கவனமாக இருங்கள். பெண்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். யோகமும் ஏற்படும். ஏதேனும் ஒரு வகையில் இன்று தனுசு ராசி நேயர்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகளும் அமைய கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் அடைவார்கள். விளையாட்டுத் துறையிலும் நல்ல தேர்ச்சி பெறுவார்கள்.

இன்று மாணவர்கள் சக மாணவர்களுடன் பழகும் போது பொறுமையை மட்டும் கடைபிடியுங்கள் அது போதும். கூடுமானவரை ஆசிரியர்களின் சொல்படி நடந்து கொள்ளுங்கள். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லை இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக வழங்கிவிடுங்கள். உங்களுடைய செயல்கள் அனைத்தும் சிறப்பாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்

மகரம் ராசி அன்பர்களே..!! சிலர் உங்களிடம் எதிர்பார்ப்புடன் அணுக கூடும். முன்யோசனையுடன் விலகி இருப்பது மிகவும் நல்லது. தொழில் வியாபாரம் செழிக்க அதிகம் பணிபுரிவது அவசியம். அளவான பணவரவு கிடைக்கும். அதிகம் பயன் தராத பொருட்களை மட்டும் விலைக்கு வாங்க வேண்டாம். இன்று உங்களுடைய சாமர்த்தியமான பேச்சின் மூலம் சூழ்நிலையை புரிந்துகொண்டு நடப்பதன் மூலம் காரியத்தில் அனுகூலமும் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் அடைய கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டு கவனத்தை சிதறவிடாமல் பாடங்களை படிக்க வேண்டும்.

மற்றவர்களுக்கு உதவ பொய் வீண் பிரச்சினையில் சிக்கிக் கொள்ள வேண்டாம். இந்த விஷயத்தில் மகர ராசி நேயர்கள் ரொம்ப கவனமாக நடந்து கொள்ள வேண்டும். அரசியல் துறையினருக்கு பெயர் புகழ் கௌரவம் யாவும் தேடி வரக்கூடும். இன்று அதிர்ஷ்ட வாய்ப்புகளும் கிடைக்கக்கூடும். கணவன் மனைவி இடையே அன்பு இருக்கும். உடல் நிலையைப் பொறுத்தவரை சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.

ஆதாயமும் நல்லபடியாக வந்து சேரும். இன்று முக்கியமான பணி மேற்கொள்ளும் பொழுது மட்டும் வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடியதாக இருக்கும். அதுமட்டுமில்லை இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக வழங்குங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் பச்சை நிறம்

கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று செயல் நிறைவேற தாமதம் தான் பிடிக்கும். சிறிய பணி கூட அதிக சுமை போல இருக்கும். கடுமையான உழைப்பும் இருக்கும். தொழில் வியாபாரம் சிறக்க கூடுதல் பணி புரிவது அவசியம். சேமிப்பு பணம் செலவுக்கு பயன்படும். பெண்கள் நகை இரவல் கொடுக்க வாங்க வேண்டாம். இன்று புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது சிறப்பு. காரியத்தில் தடை தாமதம் அலைச்சல் போன்றவை இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் தேர்ச்சி நல்லபடியாகவே இருக்கும். பழைய பிரச்சனைகள் இன்று கொஞ்சம் தலைதூக்க கூடும்.

ஆனால் பழைய பிரச்சினைகளுக்கு இன்று நீங்கள் முழுவதும் தீர்வு காண்பீர்கள். எதிர்ப்புக்கள் ஓரளவு சரியாகும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியமும் நல்லபடியாக இருக்கும். பணவரவு எதிர்பார்த்ததை விட கொஞ்சம் கம்மியாக தான் வரும் பார்த்துக் கொள்ளுங்கள். ஆனால் மனம் ஓரளவு மகிழ்ச்சியாகவே இருக்கும். இன்று அரசியல் துறையில் உள்ளவர்களுக்கு நல்ல முன்னேற்றமான சூழல் இருக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி இருக்கும். அதுபோலவே நண்பர்கள் மூலம் நீங்கள் சில முக்கியமான பணியையும் மேற்கொள்ளக் கூடும்.

இன்று மாலை வேலை நேரங்களில் குடும்பத்தாருடன் வெளியிடங்களுக்கு சென்று பொழுதைக் கழிக்க கூடிய சூழலும் இருக்கும். கூடுமானவரை இன்று முடிந்தால் ஆலயம் சென்று வாருங்கள். ஆலய வழிபாடு உங்களுக்கு மனநிம்மதியைக் கொடுக்கக்கூடியதாக இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுப்பதாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாமாக வழங்குங்கள். தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்

மீனம் ராசி அன்பர்களே..!! இன்று செயல்களில் அதிக நேர்த்தி நிறைந்திருக்கும். அரசு தொடர்பான உதவி பெறுவதற்கு அனுகூலம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி இலக்கு நிறைவேறும். ஆதாய பணவரவு கிடைக்கும். இன்று எதிரிகளால் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். நண்பர்கள் மூலம் தேவையான உதவிகளும் கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். இனிமையான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வீர்கள். இன்று கலைத் துறையைச் சார்ந்தவர்களுக்கு திறமைக்கு ஏற்ற நல்ல ஊதியம் கிடைக்கப்பெற்று முன்னேற்றமான சூழ்நிலையை அடையக்கூடும். இன்று சுகவாழ்வு, சொகுசு வாழ்வு போன்றவை சிறப்பாக அமையும்.

விஐபிக்களின் சந்திப்புகள் கிட்டும். வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். அந்த பயணம் உங்களுக்கு மிகப்பெரிய அளவில் வெற்றியை கொடுக்கும். தூர தேசத்து நண்பர்கள் மூலம் நல்ல முன்னேற்றமான சூழ்நிலையை  இன்று அடையக்கூடும். ஏற்றுமதி துறையில் உள்ளவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வெளியூரிலிருந்து உங்களுக்கு நல்ல தகவல்கள் வந்துசேரும். இன்றைய நாள் ஓரளவு முன்னேற்றகரமான நாளாக இருக்கும். நீங்களும் மகிழ்ச்சியாகவே காணப்படுவீர்கள். இன்று கணவன்-மனைவி இடையே அன்பு இருக்கும். சொன்ன சொல்லை நிறைவேற்றுவதற்காக கடுமையாக முயற்சிகளையும் மேற்கொள்வீர்கள்.

இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். ஆரோக்கியமான சூழ்நிலையை அடையக்கூடும். சக மாணவரிடம் ஒற்றுமையை மட்டும் பேணுவது மிகவும் நல்லது. இன்று முக்கியமான பணியை  நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு எப்பொழுதுமே சிறப்பான அதிர்ஷ்டத்தை கொடுக்கும். இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள். உங்களுடைய வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக் கொடுக்கும். இன்று மிகவும் முக்கியமாக வாகனத்தில் செல்லும்போது மட்டும் பொறுமையாக செல்லுங்கள் அது போதும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை :  மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்

Categories

Tech |