மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று மனம் அமைதியாகவே காணப்படும். சாந்த குணத்துடனே பேசுவீர்கள். செயல்களில் வெற்றியும் இருக்கும். தொழில் வியாபாரம் அபரிதமான அளவில் வளர்ச்சி உருவாகும். தாராள அளவில் பணவரவு இருக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள். இன்று தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் இருக்கும். எடுக்கும் முயற்சியில் சாதகமான பலன்கள் இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, வருமான உயர்வு போன்றவை இருக்கும். சக ஊழியர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது. சக பணியாளர்கள் ஆதரவாக இருப்பார்கள். பெண்களுக்கு தேவையான உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். இன்று வாகனத்தில் செல்லும்போதும் வெளியூர் பயணத்தின் போதும் கவனமாக இருங்கள். யாருக்கும் கடன்கள் ஏதும் கொடுக்காதீர்கள். வாக்குறுதிகளையும் தராதீர்கள்.
இன்று மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் மிகுந்து இருக்கும். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடியதாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று முருகன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தையும் தொடங்குங்கள். அனைத்து காரியமும் நல்லபடியாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்
ரிஷபம் ராசி அன்பர்களே..!! உங்கள் குடும்பத் தேவைகள் இன்று அதிகரிக்கும். மற்றவரை நம்பி எவருக்கும் வாக்குறுதிகள் தர வேண்டாம். தொழில் வியாபாரத்தில் நிலுவை பணி நிறைவேற்றுவது நல்லது. கூடுதல் உழைப்பினால் பணவரவு சீராக இருக்கும். கண்களின் பாதுகாப்பில் தகுந்த கவனம் இருக்கட்டும். இன்று முன் கோபத்தை குறைத்து நிதானத்தைக் கடைபிடிப்பது பிரச்சினை வராமல் தடுக்கும். பணவரவு சீராக இருக்கும்.
இன்று மாணவர்கள் மிகவும் கவனத்துடன் பாடங்களை படிப்பது கூடுதல் மதிப்பெண்கள் எடுப்பதற்கு உதவும். எதையும் சமாளிக்கும் திறமை இன்று இருக்கும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்கள் நடக்கும் எல்லா வகையிலுமே நன்மையும் ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மன வருத்தம் நீங்கி மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். உடல் நலம் இன்று சீராகவே இருக்கும்.
எடுக்கும் முயற்சியில் வெற்றி இருக்கும். இன்று நீங்கள் வெளியில் செல்லும்பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு சிறப்பு வாய்ந்த நிறமாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகன் வழிபாடு உங்களை மிகவும் நல்வழிப்படுத்தும். நீங்கள் எடுக்கக் கூடிய காரியங்களை வெற்றியடையச் செய்யும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறம்
மிதுனம் ராசி அன்பர்களே..!! இன்று உங்கள் பேச்சில் மங்கலம் நிறைந்திருக்கும். தொல்லை கொடுத்தவர் இடம் மாறுவார். தொழிலில் உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். அதிக பண வரவில் சேமிப்பு கூடும். அரசாங்கம் தொடர்பான உதவிகளும் கிடைக்கும். இன்று தொழில் வியாபாரம் தொடர்பான சிறிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும். தடைகளை தாண்டி முன்னேறி செல்வீர்கள். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த பணியை முதலில் முடிப்பது போன்ற குழப்பத்திற்கு ஆளாக வேண்டியிருக்கும்.
கலைத் துறையைச் சார்ந்த தொழிலுக்கு புதிய ஒப்பந்தங்கள் எடுப்பதில் கவனம் இருக்கட்டும். லாபம் உண்டாகும். கடின உழைப்பு உங்களுக்கு வெற்றியைத் தேடிக் கொடுக்கும். சிறு சிக்கல்கள் ஏற்பட்டு மறையும். கவனத்துடன் செயல்பட்டால் சிக்கல்களை நாம் தவிர்க்கலாம். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை இருக்கும். உடல் நிலையைப் பொறுத்தவரை நல்ல முன்னேற்றம் இருக்கும். கொடுக்கல்வாங்கல் விஷயங்கள் கூட ஓரளவு சிறப்பை கொடுக்கும்.
இன்றைய நாள் கடன்கள் கட்டுக்குள் இருக்கும் நாளாக இருக்கும். இன்று நீங்கள் முகமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடியதாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் உங்களுக்கு சிறப்பாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் வெள்ளை நிறம்
கடகம் ராசி அன்பர்களே..!! இன்று சிரமங்களை தாமதமின்றி சரிசெய்யவும். நல்லவர்களின் ஆலோசனை நம்பிக்கையை கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனமே போதுமானதாக இருக்கும். அதிக உழைப்பினால் பணவரவு சீராகும். வீடு, வாகன பாதுகாப்பில் உரிய கவனம் செலுத்த வேண்டும். இன்று அடுத்தவர்களுக்கு உதவி செய்வதில் சங்கடமான சூழ்நிலை உருவாகும். சமாளித்து முன்னேறும் திறமை இருக்கும்.
மாணவர்கள் கல்வியில் முன்னேற வேண்டுமென்று பாடுபடுவீர்கள். போட்டிகள் சாதகமான பலனை கொடுக்கும். சிலருக்கு நெடுநாளைய ஆசைகள் நிறைவேறும். லட்சியங்கள் கைகூடும். மனதிற்கு நெகிழ்ச்சியான சம்பவங்கள் நடக்கும். நிதானமாக செயல்படுங்கள் எதிர்பார்த்த வாய்ப்புகள் வந்து சேரும். இன்று புதிய முயற்சியில் நல்ல முன்னேற்றமான சூழல் இருக்கும்.
கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடியதாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று முருகன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைத் தொடங்குங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் மஞ்சள் நிறம்
சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று பணிகளில் நம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி நிலை அதிகரிக்கும். உபரி பண வருமானம் கிடைக்கும். புத்திரர் விரும்பிய பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை மகிழ்ச்சி வளரும். இன்று குடும்பத்தில் இருப்பவர்களால் வீண் பிரச்சினை குழப்பம் போன்றவை ஏற்பட்டு பின்னர் சரியாகும். கணவன் மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை தோன்றலாம்.
பிள்ளைகளிடம் பேசும் போது எச்சரிக்கையாக இருங்கள். உறவினர்களிடம் எந்த உறுதியையும் தராமல் இருப்பது நல்லது. சின்ன சின்ன செலவுகளை சந்திக்க நேரலாம். உழைப்பிற்கான ஊதியம் சற்று குறைவாகவே கிடைக்கும். பெற்றோர் ஆசிரியர் பாராட்டும் வகையில் மாணவர்கள் நடந்து கொள்வார்கள். இன்றையநாள் ஓரளவு மகிழ்ச்சி பொங்கும் நாளாகவே இருக்கும். கணவன் மனைவிக்கிடையே கொஞ்சம் கருத்து வேற்றுமை இருக்கும்.
இதை மட்டும் நீங்கள் மிகவும் கவனத்தில் கொண்டு அதற்கு ஏற்றார்போல் செயல்படுங்கள் அது போதும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு சிறப்பு வாய்ந்த நிறமாகவே இருக்கும். அதுபோலவே இன்று முருகன் வழிபாட்டை மேற்கொண்டு அனைத்து காரியங்களையும் மேற்கொள்ளுங்கள். காரியங்கள் உங்களுக்கு சிறப்பாக நடந்தேறும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் நீல நிறம்
கன்னிராசி அன்பர்களே..!! இன்று பணிகளில் நம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். இன்று நட்பு வட்டம் விரிவடையும். வாழ்வில் இருந்த குறுக்கீடுகள் விலகி செல்லும். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெறும். உபரி பண வருமானம் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு விவகாரங்களில் அனுகூலத் தீர்வு வந்து சேரும். விரும்பிய உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். இன்று எதிலும் பயம் கொஞ்சம் இருக்கும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தடை தாமதம் போன்றவை ஏற்படும்.
சங்கடமான சூழ்நிலையை சந்திக்க வேண்டி இருக்கும். ஜீரண கோளாறு போன்ற ஏதாவது ஆரோக்கிய குறைபாடு கொஞ்சம் ஏற்படலாம் பார்த்துக்கொள்ளுங்கள். செலவு கொஞ்சம் அதிகரிக்கும். அடுத்தவரை நம்பி காரியத்தில் இறங்கும் பொழுது கவனமாக இருங்கள். பிள்ளைகள் நீங்கள் கூறியதை கேட்டு அதன்படி நடப்பது ஆறுதலைக் கொடுக்கும். மன தைரியத்தால் வெற்றி காண்பீர்கள்.
இன்றையநாள் ஓரளவு வெற்றி பெறும் நாளாக இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடியதாக இருக்கும். அது மட்டுமில்லை இன்று முருகன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை மேற்கொள்ளுங்கள். காரியங்கள் அனைத்துமே வெற்றியை கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் மஞ்சள் நிறம்
துலாம் ராசி அன்பர்களே..!! இன்று உங்களை சிலர் புகழ்ந்து பேசக்கூடும். புகழ்ந்து பேசுபவரிடம் கொஞ்சம் விலகியே இருங்கள். தொழிலில் திட்டமிட்ட இலக்கை அடைய கூடுதல் கால அவகாசம் தேவைப்படும். குடும்பத்திற்கான பணச்செலவு அதிகரிக்கும். வாகனத்தில் மிதவேகத்தை பின்பற்றவும். இன்று குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் கூடும். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.
குடும்பத்தாருடன் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேரிடும். உறவினர்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் கூடும். நண்பர்கள் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் சுமூகமாகவே நடந்து முடியும். தடைபட்ட காரியங்கள் சாதகமாகவே நடந்து முடியும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். கொடுக்கல் வாங்கலிலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். திருமண முயற்சிகள் கைகூடும்.
இன்றைய நாள் ஓரளவு வெற்றி பெறும் நாளாகவே இருக்கும். இருந்தாலும் வெளியில் செல்லும்பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு உகந்த நிறமாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் முருகன் வழிபாடு உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். இன்று நீங்கள் செய்யக்கூடிய காரியங்கள் அனைத்துமே வெற்றியை கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் சிவப்பு நிறம்
விருச்சிகம் ராசி அன்பர்களே..!! சிலர் உங்களுக்கு தவறான ஆலோசனையை சொல்லக்கூடும். அவப்பெயர் வராத வகையில் செயல்படுவீர்கள். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். பணவரவு கிடைப்பதில் தாமதமும் ஏற்படும். தியானம் தெய்வ வழிபாடு மன அமைதி பெற உதவும். இன்று பயணங்களின் போதும் வாகனத்தில் செல்லும்போதும் எச்சரிக்கையாகவே இருங்கள். சரியான நேரத்தில் உறங்க முடியாத சூழ்நிலை உருவாகும்.
மிகவும் வேண்டியவரை பிரிய வேண்டியிருக்கும். மற்றவர்களுக்கு வழியேசென்று உதவுவதால் வீண் விரோதம் ஏற்படும். அரசியல் துறையினர் மனத்திருப்தியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன்களைப் பெறக்கூடும். பயணங்கள் செல்ல நேரிடும். மனதிற்கு பிடித்தவரை சந்திக்கவும் நேரிடும். இன்றைய நாள் ஓரளவு வெற்றி பெறும் நாளாக இருக்கும்.
இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு சிறப்பான நிறமாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று முருகன் வழிபாட்டை மேற்கொண்டு இன்றைய நாளை தொடங்குங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் நீல நிறம்
தனுசு ராசி அன்பர்களே..!! இன்று செயல்கள் வெற்றி பெற எளிதான வழி பிறக்கும். நண்பர் தேவையான உதவியை மனமுவந்து வழங்குவார்கள். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பண பரிவர்த்தனை திருப்திகரமாகவே இருக்கும். வெளியூர் பயணங்களை பயன் அறிந்து மேற்கொள்வீர்கள். இன்று தொழில் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டியிருக்கும். எதிர்பார்த்த நிதி வசதி கிடைத்தாலும் திட்டமிட்டதை விட கூடுதல் செலவு இருக்கும்.
பணியாளர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பெரியவர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். உடன் இருப்பவர்களுடன் எச்சரிக்கையாகப் பழகுவது நல்லது. ரகசியங்களை கையாளுவதில் கவனம் இருக்கட்டும். யாரிடமும் எந்த விதமான ரகசியங்களையும் நீங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டாம். அது மட்டுமில்லாமல் இன்று வாக்குறுதிகளையும் நீங்கள் கொடுக்க வேண்டாம். பொறுமையை மட்டும் கையாளுங்கள் அது போதும்.
இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடியதாகவே இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமானை மனதார நினைத்து வழிபட்டு இன்றைய நாளை நீங்கள் தொடங்குங்கள். அனைத்துக் காரியமும் உங்களுக்கு நல்லபடியாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு
அதிஷ்ட எண் : 2 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்
மகரம் ராசி அன்பர்களே..!! இன்று நண்பர்களிடம் பேசி மகிழ்வீர்கள். வாழ்வில் எதிர்கொண்ட சிரமங்களை பற்றிய சிந்தனை குறையும். தொழில் வியாபாரம் செழித்து வளரும். உபரி பண வருமானம் கிடைக்கும். குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரி கூறுவதுபடி நடந்துகொள்வது நன்மையை கொடுக்கும். நிலுவையில் உள்ள பணம் வரும். குடும்பத்தில் இருப்பவர்களால் சிறு சிறு பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க கூடும்.
குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திலும் வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்திலும் கவனமாக இருங்கள். இன்று மாணவர்களுக்கு புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அவர்கள் மூலம் கல்வியில் முன்னேற்றமும் இருக்கும். கூடுமானவரை ஆசிரியர்களின் சொல்படி மட்டும் நடந்துக் கொள்ளுங்கள். இன்றையநாள் ஓரளவு வெற்றி பெறும் நாளாகவே இருக்கும்.
இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுப்பதாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று முருகன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். நீங்கள் செய்யக்கூடிய காரியங்கள் அனைத்தும் நல்லபடியாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் மஞ்சள் நிறம்
கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று சிலரது பேச்சு உங்களை சங்கடப்படுத்த கூடும். பொது இடங்களில் மட்டும் அதிகம் பேசவேண்டாம். தொழில் வியாபார நடைமுறை சுமாராகத்தான் இருக்கும். பணவரவு சராசரி அளவில் இருக்கும். சுற்றுப்புற தொந்தரவினால் நித்திரை கொஞ்சம் தாமதமாகலாம். இன்று கணவன் மனைவிக்கிடையே இருந்த மனகசப்பு மாறும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நல்லது. கொடுக்கல் வாங்கலில் கவனம் இருக்கட்டும்.
மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செலவுகள் கூடும். கவனத்துடன் பாடங்களை படிப்பது மட்டும் அவசியம். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். பழைய பாக்கிகளும் வசூலாகும். கொடுக்கல் வாங்கல் சிறப்பாகவே இருக்கும். பணியாட்கள் மூலம் நன்மை ஏற்படும். உங்களுடைய சாமர்த்தியமான பேச்சு மூலம் வாடிக்கையாளர்களிடம் நல்ல மதிப்பை பெறக்கூடும். இன்று குடும்பத்தின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.
இன்று முக்கியமான பணியை மட்டும் நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிற ஆடையை அணிந்து கொண்டு செல்லுங்கள். இன்று வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக் -கூடியதாக இருக்கும். அது மட்டுமில்லாமல் முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு இன்றைய காரியங்களைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்
மீனம் ராசி அன்பர்களே..!! இன்று முக்கிய பணி நிறைவேறுவதற்கு கொஞ்சம் காலதாமதம் பிடிக்கும். இதனால் சிறு வேலைகளை நினைவுபடுத்தி நிறைவேற்றுவீர்கள். தொழில் வியாபார நடைமுறை சராசரி அளவில் இருக்கும். அடுத்தவர் பார்வையில் அதிக பணம் செலவழிக்க வேண்டாம். இன்று பணவரவு ஓரளவு இருக்கும். மனதில் தைரியம் கூடும். எப்படிப்பட்ட சூழ்நிலையையும் நீங்கள் சமாளிக்க கூடிய திறமை உங்களிடம் வெளிப்படும். ஆனால் மற்றவர்களின் சூழ்ச்சிக்கு ஆளாகாமல் கவனமாக இருப்பது மட்டும் அவசியம்.
வழக்கு விவகாரங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நேர்மையாக சிறப்பாக பணிகளை செய்து மேலதிகாரியிடம் பாராட்டுகள் கிடைக்கப் பெறுவார்கள். இன்று கணவன் மனைவிக்கு இடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். நட்பு வட்டம் விரிவடையும். குடும்பத்தாருடன் மகிழ்ச்சியாகவும் நீங்கள் காணப்படுவீர்கள். சகோதரர் வகையில் ஒத்துழைப்பு உங்களுக்கு இருக்கும். உயர் பதவிகளும் கிடைக்கக்கூடும்.
சம்பள உயர்வு போன்ற செய்திகளையும் நீங்கள் கேட்கக் கூடும். இன்றையநாள் ஓரளவு மகிழ்ச்சியாகவே இருப்பீர்கள் இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது மட்டும் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடியதாக இருக்கும். அது மட்டுமில்லை முருகப் பெருமான் வழிபாடு உங்களுக்கு இன்று நீங்கள் செய்யக் கூடிய காரியங்களை சிறப்பானதாக ஆக்கி கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு
அதிஷ்ட எண் : 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் பச்சை நிறம்