Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (27.11.2019) நாள் எப்படி இருக்கு ? முழு ராசி பலன்கள் இதோ..!!

மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று எதிர்மறையான சூழல்களில் கவனத்தை தவிர்க்கவும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி சீரான முன்னேற்றத்தை கொடுக்கும். சேமிப்பு பணம் முக்கிய செலவுக்கு பயன்படும். இன்று திருமண முயற்சி கைகூடும். குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும்.

உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை இன்று வெளிப்படும். புதுமை படைக்கும் நாளாகவே இன்றைய நாள் இருக்கும். இன்று வாகனத்தில் செல்லும் பொழுதும் பயணங்கள் செல்லும் பொழுதும் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். உடல் நிலையைப் பொறுத்தவரை நல்ல முன்னேற்றம் ஏற்படும். இன்று வெளிநாட்டு பயணங்கள் கிடைக்கக்கூடும். அதுமட்டுமில்லாமல் வெளியூரிலிருந்து நல்ல செய்திகள் வந்துசேரும். கூடுமானவரை பயணங்களின் போது ரொம்ப கவனமாக இருங்கள்.

இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமடைய கொஞ்சம் கடினப்பட்டு தான் உழைக்க வேண்டியிருக்கும். படித்த பாடத்தை ஒரு முறைக்கு இரு முறை எழுதிப் பாருங்கள். இன்று முக்கியமான பணியை  நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடியதாக இருக்கும். அது மட்டுமில்லை இன்று காலை சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் வெள்ளை நிறம்

ரிஷபம் ராசி அன்பர்களே..!! இன்று பணி திறமையை வளர்த்துக் கொள்வதால் சில நன்மைகள் ஏற்படும். தொழிலில் உற்பத்தி விற்பனை சராசரி அளவில் இருக்கும். பணியாளர்கள் பணி சுமை கூடும். இன்று குறைந்த அளவிலேயே பணம் கிடைக்கும். உறவினர் வருகை வீட்டில் மகிழ்ச்சியை  கொடுக்கும். இன்று உடல்நிலையில் மட்டும் கவனமாக இருங்கள். மருத்துவ செலவுகள் கொஞ்சம் இருக்கும். குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்ளக் கூடிய வாய்ப்புகள் கிடைக்கும்.

உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். சொத்து வாங்குவது விற்பது போன்றவை லாபகரமாக அமையும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உயரதிகாரிகளிடம் பேசும் போது மட்டும் கொஞ்சம் கவனமாக பேசுங்கள். ஓரளவு சிறப்பை கொடுக்கும். கணவன் மனைவி உறவு நன்றாகவே இருக்கும். இருந்தாலும் விட்டு கொடுத்து செல்வது நல்லது. இன்று மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் செல்லும்.

அதுமட்டுமில்லாமல் கல்வியில் இருந்த தடைகளும் விலகி செல்லும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும் விதமாக இருக்கும். அதுபோலவே இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு

அதிஷ்ட எண் : 3 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் பச்சை நிறம்

மிதுனம் ராசி அன்பர்களே..!! இன்று தகுதி திறமையை வளர்த்துக் கொள்ளும் நாளாக இருக்கும். செயல்களில் எதிர்பார்த்த நல்ல பலன் கிடைக்கும். தொழில் வியாபாரம் நண்பரின் உதவியால் முன்னேற்றம் பெறும். பணவரவும் நன்மையைக் கொடுக்கும். சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக் கூடிய சூழல் இருக்கும். இன்று உங்களது மேலான யோசனையை செய்வதற்கு தயாராக இருப்பீர்கள். சொன்ன வாக்கை காப்பாற்ற முடியாமல் தவிக்கும் நிலையும் மாறப் போகும்.

இனியாவது வாக்கு கொடுக்கும் முன் யோசித்து கொடுங்கள் அது போதும். நட்பு வட்டம் விரிவடையும். உயர் அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். புது வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். பயணங்களால் பயனடைவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனைகளும் தீரும். இன்று உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்களை ஆதரிக்கக் கூடும். உழைப்பால் உயரும் நாளாக இருக்கும்.

தைரியமும் தன்னம்பிக்கையும் கூடும். மாணவர்கள் இன்று கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். இன்று முக்கியமான பணியை  நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடியதாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்

கடகம் ராசி அன்பர்களே..!! இன்று மனதில் உற்சாகம் அதிகரிக்கும். உறவினருக்கு உதவிகளைச் செய்வீர்கள். தொழில் வியாபாரத்தில் இடையூறுகள் விலகிச்செல்லும். சேமிக்கும் அளவில் வருமானம் கிடைக்கும். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள். இன்று பண விஷயங்களில் தேர்ந்தெடுத்து முதலீடுகளை  செய்வது நல்லது. அது மட்டும் இல்லாமல் தூங்கப் போகும் முன் குலதெய்வத்தை வணங்கி விட்டுச் செல்லுங்கள்.

இன்று தேவையற்ற வீண் மனக் குழப்பங்களும் கற்பனைகளும் இருக்கும். உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். உறவினர்கள் நண்பர்கள் சிலர் உங்கள் உதவியை நாடக்கூடும். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாண்டு கடையை புதிய இடத்துக்கு மாற்ற கூடிய சூழ்நிலையை ஏற்படுத்திக் கொள்வீர்கள் இன்றையநாள் அனைத்து விஷயங்களுமே சிறப்பாக இருக்கும். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல தேர்ச்சி பெற கூடும்.

கல்வியில் இருந்த தடையும் விலகிச்செல்லும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிஷ்ட எண் : 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் பச்சை நிறம்

சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று மனம் புகழ்ச்சியை விரும்பும். அதாவது உங்களை மற்றவர்களும் புகழப்படும். நண்பரின் கருத்துக்கு முக்கியத்துவம் தருவது நல்லது. தொழில் வியாபாரத்தில் மாறுபட்ட சூழ்நிலை இருக்கும். கொஞ்சம் கடன் பெறுவீர்கள். அதிகம் பயன்தராத பொருட்களை மட்டும் வாங்குவதை தவிர்க்கவும். புதிய நபர்களின் அறிமுகம் இன்றைக்கு கிடைக்கும். வேலைவாய்ப்பில் இருந்த சுணக்கம் மாறும். உங்களது வாக்கு வன்மை கூடும்.

உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்த கூடும். அதை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். கூடுமானவரை வாடிக்கையாளர்களை மட்டும் அனுசரித்துச் செல்லுங்கள் அது போதும். உத்யோகத்தில் சின்ன சின்ன இடர்பாடுகளை சந்திக்க வேண்டியிருக்கும். வேலை சுமை கொஞ்சம் அதிகமாகதான் இருக்கும். ஆனால் தைரியம் கூடும். மாணவர்கள் படிப்பில் கொஞ்சம் கவனமாக இருக்கும்.

மிகவும் எச்சரிக்கையுடன் படித்தால் சாதனைகள் புரிய வாய்ப்பு இருக்கு. இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடியதாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 4 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிறம்

கன்னிராசி அன்பர்களே..!! சுய திறமையை வளர்த்துக் கொள்ளும் நாளாகவே இன்று இருக்கும். புது விஷயங்களை அறிந்து கொள்வதில் ஆர்வம் கிடைக்கும். இஷ்ட தெய்வ அருளால் தொழிலில் உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். பண பரிவர்த்தனையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கூடுதல் சொத்து வாங்க திட்டங்களை தீட்டுவீர்கள். இன்று பிள்ளைகளின் வளர்ப்பின் மீது கவனம் இருக்கட்டும். உடல்நிலையில் ஓரளவு நல்ல முன்னேற்றம் இருக்கும்.

மருத்துவ செலவுகள் இன்று குறையும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும். எந்த ஒரு விஷயத்திலும் கவனம் இருக்கட்டும். வீண் வாக்குவாதம் யாரிடமும் செய்ய வேண்டாம். நண்பர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமடைய கொஞ்சம் கூடுதலாக உழையுங்கள்.

ஆசிரியர்களின் சொல்படி நடந்து கொள்ளுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் இன்று அதிஷ்ட நிறமாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். காரியம் அனைத்தும் சிறப்பாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் நீல நிறம்

துலாம் ராசி அன்பர்களே..!! சிலர் இடையூறு செய்ய முயற்சிகளை மேற்கொள்வார்கள். செயல்களில் அதிக தற்காப்பு வேண்டும். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு படிப்படியாக நிறைவேறும். பணவரவை சிக்கனமாகப் பயன்படுத்துங்கள். தியானம் தெய்வ வழிபாடு மன அமைதியை ஏற்படுத்தும். இன்று தேவையற்ற வீண் விவாதத்தில் மட்டும் ஈடுபடவேண்டாம். யாரைப் பற்றியும் விமர்சனம் செய்ய வேண்டாம்.

தந்தையார் உடல்நிலை ஓரளவு முன்னேற்றகரமாக இருக்கும். தந்தையுடன் கருத்து பரிமாற்றம் செய்யும் பொழுது கவனம் இருக்கட்டும். வேலை செய்யும் இடங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். மாணவர்கள் கல்வியில் நிதானத்துடன் செயல்படவேண்டும். கல்வியில் இருந்த தடை இன்று விலகிச் செல்லும்.

இன்றைய நாள் ஓரளவு சிறப்புமிக்க நாளாக இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடியதாக இருக்கும். அது மட்டும் இல்லை இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியங்களை செய்யுங்கள். அனைத்தும் சிறப்பாகவே  நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு

அதிஷ்ட எண் : 6 மற்றும் 8

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்

விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று லட்சிய மனதுடன் செயல்படுவீர்கள். தொழில் வியாபாரத்தில் அபிவிருத்தி பணி திருப்திகரமாக இருக்கும். உபரி வருமானம் கிடைக்கும். குடும்ப உறுப்பினர் விரும்பி கேட்ட பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். எதிர்பார்த்த சுப செய்தி வந்து சேரும். இன்று எந்த ஒரு முடிவையும் சட்டென்று எடுத்து முடிப்பீர்கள். நல்ல விஷயங்களை தள்ளிப்போட வேண்டாம் . வீடு மனை ஆடை ஆபரணங்கள் போன்ற விஷயங்களில் அவசரம் வேண்டாம்.

எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவெடுங்கள் அது போதும். கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். கொடுக்கல் வாங்கல் விஷயங்களும் சிறப்பாக இருக்கும். பழைய பாக்கிகள் இன்று வசூலாகும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண முயற்சிகள் கைகூடுவதற்கு வாய்ப்புகள் ஏற்படும். இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேற்றத்தை அடைய கூடும்.

கல்வியில் இருந்த தடைகள் விலகி செல்லும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடியதாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டால் அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு

அதிஷ்ட எண் : 6 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் நீல நிறம்

தனுசு ராசி அன்பர்களே..!! இன்றும் மனதில் வெகுநாள் இருந்த சஞ்சலம் தீரும். தொழில் வியாபாரத்தில் அபிவிருத்தி நிலை இருக்கும். ஆதாய பணவரவு கிடைக்கும். பிள்ளைகளின் நல்ல செயல் பெருமையை தேடிக் கொடுக்கும். மாணவர்கள் தனித் திறமையால் புகழ் பெறக் கூடும். இன்று தாயார் மற்றும் தாய்வழி உறவினர்களுடன் மனக்கசப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கும். கவனம் இருக்கட்டும். பிள்ளைகள் படிப்பில் மிகுந்த கவனம் இருக்கட்டும்.

குழந்தைகள் இல்லாதவர்களுக்கு சந்தாண பாக்கியம் இன்று கிட்டும். வெளியூர் பயணங்களையும் இன்று நீங்கள் மேற்கொள்வீர்கள். அந்த பயணம் வெற்றிகரமாக இருக்கும். கூடுமானவரை காரியங்களை செய்யும்போது மட்டும் பொறுமையாக நிதானமாக செய்யுங்கள். அக்கம் பக்கத்தினரிடம் பழகும்போது கொஞ்சம் கவனமாகவே பேசுங்கள். எந்த காரணத்தைக் கொண்டும் கோபம் மட்டும் படாதீர்கள்.

இன்று கோபத்தை குறைத்துக் கொண்டால் அனைத்து விஷயங்களும் உங்களுக்கு நன்மை நடக்கும். இன்று முக்கியமான பணியை  நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடியதாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டால் அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்

மகரம் ராசி அன்பர்களே..!! இன்று புதிய முயற்சிகளை நிறைவேற்ற உரிய நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள். பிறரிடம் வீண் பேச்சு மட்டும் வேண்டாம். தொழிலில் அளவான உற்பத்தி விற்பனை இருக்கும். சேமிப்பு பணம் அத்தியாவசிய செலவுகளுக்கு பயன்படும். நேரத்திற்கு உணவு உண்பதால் ஆரோக்கியம் பலமாக இருக்கும். இன்று உங்கள் வாக்கு வன்மை கூடும். உங்கள் பேச்சுக்கு மதிப்பு கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். எந்த காரியத்தையும் செய்யும் முன் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செயல்படுங்கள் அது போதும்.

இன்று தன்னம்பிக்கையும் தைரியமும் கூடும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு நீடிக்கும். இன்று மற்றவர்கள் பார்வையில் படும் படி பணத்தை மட்டும் எண்ண வேண்டாம். இந்த விஷயத்தில் மகரம் ராசிக்காரர்கள் எப்பொழுதுமே கவனம் கொள்வது நல்லது. இன்று உங்களுடைய வசீகர தன்மையால் அனைவரையும் கவரக் கூடும். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும்.

கூடுமானவரை சக மாணவரிடம் எந்தவித பிரச்சனைகளும் இல்லாமல் பொறுமையாக நடந்து கொள்ளுங்கள் அது போதும். இன்று முக்கியமான பணியை  மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்க கூடியதாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை மேற்கொள்ளுங்கள். சிவபெருமான் வழிபாடு உங்களை சிறப்பானதாக்கி கொடுக்கும். காரியங்களில் வெற்றி அடைய செய்யும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 4

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்

கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று தொடர்பில்லாத பணியில் ஈடுபட நேரலாம். குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனை நல்வழியில்  நடத்தும். தொழில் வியாபார நடைமுறை சீராக கூடுதலாகத்தான் நீங்கள் கவனம் மேற்கொள்ள வேண்டும். பண செலவில் சிக்கனம் இருக்கட்டும். உடல் ஆரோக்கியத்திற்கு சிகிச்சை கொஞ்சம் தேவைப்படும். இன்று எல்லாம் நல்லபடியாகவே நடக்கும். வீடு வாகனம் ஆபரணங்கள் வாங்க கூடிய சூழலும் இருக்கும். தாயார் தாய்வழி உறவினர்களுடன் தேவைப்படும்போது மட்டும் பேசுங்கள்.

தேவையில்லாமல் பேசி சில பிரச்சனைகளை உருவாக்கிக் கொள்ள வேண்டாம். நிகழ்காலத்தில் இருப்பதற்கு பழகிக்கொள்ளுங்கள். கூடுமானவரை மாணவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் படிக்க வேண்டும். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை இருக்கும். கொடுக்கல் வாங்கல் விஷயங்களும் ஓரளவு சிறப்பை கொடுக்கும். இன்று புண்ணிய காரியங்களில் ஈடுபடக் கூடிய சூழல் இருக்கும். அது மட்டுமில்லாமல் மற்றவர்களுக்கு உதவிகள் செய்யக் கூடிய எண்ணங்களும் மேலோங்கும்.

இன்றைய நாள் ஓரளவு வெற்றிகரமான நாளாகவே அமையும். கூடுமானவரை பொறுமையாக நிதானமாக காரியங்களை மேற்கொள்ளுங்கள். இதை மட்டும் செய்யுங்கள். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடியதாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை மேற்கொள்ளுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிஷ்ட எண் : 1 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் வெள்ளை நிறம்

மீனம் ராசி அன்பர்களே..!! இன்று நண்பர்கள் தேவையான உதவிகளை உங்களுக்கு கொடுப்பார்கள். தொழில் வியாபாரம் செழித்து வளர்வதற்கு கூடுதலாக மூலதனம் செய்வீர்கள். நிலுவைப்பணம் வசூலாகும். பணியாளர்கள் சலுகை கிடைக்கப் பெறுவார்கள். குடும்பத்தில் சுப நிகழ்வு உருவாகும். இன்று மாணவர்களுக்கு படிப்பில் மந்த நிலை ஏற்படலாம். கூடுமானவரை கவனத்துடன் பாடங்களை படியுங்கள். குழந்தைகள் நலன் ஓரளவு சிறப்பாக இருக்கும். புதிய நபர்களின் சந்திப்பும் இன்று இருக்கும் ஒரு சில நேரங்களில் மனம் கொஞ்சம் அலைபாயக்கூடும்.

எதைப்பற்றியும் கவலைப்படாமல் காரியத்தை நிதானமாக மேற்கொள்ளுங்கள். கணவன் மனைவிக்கிடையே கருத்து மோதல்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கும். எதையும் பொறுமையாக கையாளுங்கள். கூடுமானவரை பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள். எதிர்மறையான சூழல்களில் கவனத்தை தவிர்க்கவும். அதுபோலவே  உத்தியோகத்தில் பணிபுரிபவர்கள் கொஞ்சம் மேலதிகாரியிடம் கடுமையை காட்டாமல் நடந்து கொள்ளுங்கள்.

பேசும்பொழுது நிதானமாகப் பேசுங்கள். இன்று குடும்பத்தாரின் ஒத்துழைப்பு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்துக்கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிஷ்ட நிறமாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டால் அனைத்து காரியமும் நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிஷ்ட எண் :  4 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறம்

Categories

Tech |