நாளுக்குள் கடவுள் நம்பிக்கையுடன் இணைந்து ராசி பலன்களும் மக்கள் என்ன ஓட்டத்தில் பிரதி பலிக்கின்றது . நம்முடைய வீட்டிலும் , குடும்பத்தில் எந்த செயலை தொடங்கினாலும் நல்ல நேரம், ராசி என்னவெண்று தெரிந்து கொள்ள தினம் தினம் நாள்கட்டியில் கண்டு கழிக்கும் பழக்கம் பலருக்கும் இருந்து வருகின்றது. இந்த நிலையில் மேஷ ராசி முதல் மீனம் ராசி வரை உள்ள 12 ராசிகளின் ராசிபலனை தெரிந்து கொள்ளலாம்.
மேஷம் :
மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று உங்களை அவமதித்தவர் அன்பு பாராட்டுகிற இனிய சூழல் உருவாகும். இன்றைக்கு தொழில் வியாபாரம் வளர்ச்சியில் புதிய சாதனை ஏற்படும். பண பரிவர்த்தனையும் திருப்திகரமாக இருக்கும். புத்திரர் விரும்பிய பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். சுகமான நித்திரை அமைந்து இனிய கனவும் ஏற்படும். இன்று எதிலும் கூடுதல் கவனம் மட்டும் இருக்கட்டும். மனகவலை நீங்கும். காரிய வெற்றியும் உண்டாகும். எந்த பிரச்சினை வந்தாலும் எதிர்த்து நின்று சமாளிக்கக்கூடிய ஆற்றல் மேலோங்கும். காரியத்தில் அனுகூலமும் இருக்கும். தன வரவு தாராளமாக இருக்கும். உங்களுடைய அறிவு திறமை இன்று வெளிப்படும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு உண்டாகும். சமூகத்தில் நல்ல மதிப்பும் அந்தஸ்தும் கிடைக்கும். இன்று மாணவர்கள் மிகவும் கவனத்துடன் சந்தேகங்களை தெளிவாக தெரிந்துகொண்டு பாடங்களை படிப்பது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சியும் கலகலப்பான சூழலும் இருக்கும். அதே போல வெளியிடங்களுக்கு செல்லும் போது கொஞ்சம் கவனமாக செல்லுங்கள்.
பொருட்கள் மீது கவனம் இருக்கட்டும் அது மட்டும் போதும். அது போலவே மேஷ ராசி அன்பர்களுக்கு வாழ்க்கைத் துணை மூலமாக அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கும். ஆன்மீகத்திலும் நாட்டம் செல்லும். இறைவனுக்காக இன்று சிறு தொகையை செலவிட நேரிடும். இன்று கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் ஓரளவு சிறப்பை கொடுக்கும். புத்தி தெளிவு ஏற்படும். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி காரியங்களை நீங்கள் தெளிவாக செய்வீர்கள். இன்று நீங்கள் வெளியில் செல்லும்பொழுது பச்சை நிற ஆடை அல்லது பச்சை நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக நடக்கும். அதுமட்டுமில்லை இன்று வெள்ளிக்கிழமை என்பதால் 7 நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் நீங்கி அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்
ரிஷபம் :
ரிஷபம் ராசி அன்பர்களே..!! இன்று பரந்த மனப்பான்மையுடன் செயல்படுவீர்கள். புதியவர்களின் அன்பு உதவி உங்களுக்கு கிடைக்கும். தொழில் வியாபாரம் செழிக்க சில மாற்று உபாயம் பின்பற்றுவீர்கள். பணபரிவர்த்தனை திருப்திகரமாக இருக்கும். உங்களுடைய புத்திரரின் நல்ல செயல் பெருமையை தேடிக் கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் நண்பர்கள் மற்றும் வாடிக்கையாளரிடம் அனுசரித்து செல்வது நன்மையை கொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு ஏற்பட்டாலும் எப்படியாவது செய்து முடித்து விடுவீர்கள். அந்த விஷயத்தில் நீங்கள் கெட்டிக்காரர்கள். சக ஊழியர்கள் ஒத்துழைப்பு இருக்கும். நீண்ட நாட்களாக இருந்த மன அழுத்தம் நீங்கும் படியான சூழல் உருவாகும். மதிப்பும் மரியாதையும் உங்களுக்கு அதிகமாக கிடைக்கும். நீங்கள் நினைத்தது இன்று நல்லபடியாக நடக்கும்.
கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். இழுபறியாக இருந்த காரியங்கள் சிறப்பாக நடந்து முடியும். அது போலவே உங்களை விட்டு விலகிச் சென்றவர்கள் மீண்டும் வந்துசேர்வார்கள். எதிரிகள் விலகிச் செல்வார்கள். பழைய கடன்கள் அடைபடும். அதேபோல் அனைத்துமே கட்டுக்குள் இருக்கும். இன்றைய நாள் ஓரளவு சிறப்பான நாளாக இருக்கும். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை அடைய ஆசிரியர்களின் சொல்படி மட்டும் தயவு செய்து நடந்துகொள்ளுங்கள். கணவரிடம் ஒற்றுமை பேணுவது நல்லது. இன்று நீங்கள் முக்கியமான பணிக்கு செல்லும் பொழுது முக்கியமான காரியத்தில் ஈடுபடும்போது ஆரஞ்சு நிற ஆடை அல்லது ஆரஞ்சு நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும். அது மட்டுல்லை இன்று வெள்ளிக்கிழமை என்பதால் 7 நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்தால் உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்தும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்
மிதுனம் :
மிதுனம் ராசி அன்பர்களே..!! உங்கள் நல்ல செயலுக்கான பாராட்டுக்கள் கண்டிப்பாக இன்று வந்து சேரும். மனதில் உற்சாகம் கொள்வீர்கள். தொழில் வியாபாரம் செழிக்க புதிய யுக்திகளை கையாளுவீர்கள். அளவான பணவரவு கிடைக்கும். ஒவ்வாத அழகு சாதன பொருட்களை தயவு செய்து பயன்படுத்த வேண்டாம். ஒவ்வாத பொருட்கள் ஏதேனும் இருந்தால் தூர தூக்கி போடுவது நல்லது. இன்று அடுத்தவரிடம் பேசும்போது யாரைப்பற்றியும் விமர்சிக்காமல் பேசுங்கள். பணவரவு கொஞ்சம் தாமதம் இருக்கும். மாணவர்கள் கல்வியில் கொஞ்சம் பின்தங்கிய நிலையை சந்திக்க கூடும். கூடுதலாக பாடங்களை ஒதிக்கி படிப்பது நல்லது. இன்று பிள்ளைகள் நலனில் அக்கறை கொள்வீர்கள். விருந்தினர்கள் வந்து செல்வார்கள். அதனால் கொஞ்சம் செலவு இருக்கும். பணவரவு ஓரளவு தான் எதிர்பார்த்தபடி இருக்கும்.
நீங்கள் வெளியிடங்களுக்கு செல்லும் பொழுது நிதானமாக செல்லுங்கள். காரியத்தை செய்யும்போது கவனமாக செய்யுங்கள். மிக முக்கியமாக நீங்கள் இன்று யாரிடமும் எந்த விதமான பொறுப்புகளையும் கொடுக்க வேண்டாம் .நீங்களே அந்த காரியத்தை முன் நின்று செய்வது நல்லது. அதேபோல் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சுபநிகழ்ச்சிகள் செய்வதற்கான யோகங்கள் இருக்கும். இன்றைய நாள் ஓரளவு மனம் மகிழும் படியான சம்பவம் நடக்கும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுது வெள்ளை நிற ஆடை அல்லது வெள்ளை நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். காரியமும் சிறப்பாக இருக்கும். இன்று வெள்ளிக்கிழமை என்பதால் 7 நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள். உங்களுடைய கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் பச்சை நிறம்
கடகம் :
கடகம் ராசி அன்பர்களே..!! இன்று மனதில் சஞ்சலம் கொஞ்சம் ஏற்படலாம். தொழிலில் கூடுதல் உழைப்பினால் உற்பத்தி விற்பனை சீராகும். அளவான பணவரவு தான் இன்றைக்கு கிடைக்கும். தரம் குறைந்த உணவு பொருட்களை தயவு செய்து உண்ண வேண்டாம். கவனக் குறைவுடன் இன்று நீங்கள் நடந்து கொள்ளுங்கள். உங்களுடைய தாயின் அன்பு ஆசி உங்களுக்கு நன்மையை கொடுக்கும். காரியத்தில் தடை தாமதம் விலகிச்செல்லும். வீண் அலைச்சலும் விலகிச் செல்லும். எந்த ஒரு வேலையை செய்யும் பொழுது பொறுமையாக கேளுங்கள் அது போதும். உங்கள் வாழ்க்கையில் இன்று நீங்கள் முன்னேற்ற பாதையை நோக்கி எடுத்துச் செல்வீர்கள். அனைவரையும் அனுசரித்துச் செல்வீர்கள். பணவரவு சிறப்பை கொடுக்கும். வாக்குவாதங்களை மட்டும் தயவு செய்து தவிர்த்து விடுங்கள். உங்களுடைய வீடு தேடி இன்று வாய்ப்புகள் வரக்கூடும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த வாய்ப்புகளும் சிலருக்கு கிடைக்கும்.
அரசாங்கத்தில் இருந்து நல்ல தகவல்கள் உங்களுக்கு வந்து சேரும். எந்த ஒரு காரியத்தையும் செய்து முடிக்க கூடுதல் நேரம் தான் உழைக்க வேண்டியிருக்கும். உத்தியோகத்தில் உங்களுக்கு நல்ல மதிப்பு இருக்கும். சமூகத்திலும் உங்களுக்கு நல்ல மதிப்பு இருக்கும். அதே போல தூரதேசப் பயணங்கள் செல்லக்கூடியதாக இருக்கும். அது உங்களுக்கு நல்ல வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தும். குடும்பத்தாருடன் மகிழ்வாக இருப்பீர்கள். கலகலப்பாக காணப்படுவீர்கள். இன்று வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமடைய கொஞ்சம் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். அதுமட்டுமில்லை பாடத்தில் கொஞ்சம் கவனத்தை செலுத்துங்கள். விளையாட்டை ஏறக்கட்டி விட்டு பாடத்தில் கவனம் செலுத்துவது மிகவும் சிறப்பு. ஏதேனும் சந்தேகம் இருப்பின் ஆசிரியரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். சக மாணவருடன் கொஞ்சம் கருணை காட்டாமல் நடந்து கொள்ளுங்கள் அது போதும். இன்று நீங்கள் வெளியே செல்லும் பொழுது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அல்லது கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள். அனைத்து காரியம் நல்லபடியாக நடக்கும். அதுமட்டுமில்லை இன்று வெள்ளிக்கிழமை என்பதால் 7 நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்தும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 4 அதிஷ்ட நிறம்
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு மற்றும் நீல நிறம்
சிம்மம் :
சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று உங்களின் இஷ்ட தெய்வ அனுக்கிரகம் பெறுவீர்கள். வெகுநாள் மனதில் இருந்த சஞ்சலம் தீரும். அதிக உழைப்பினால் தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். பண பரிவர்த்தனை சீராகும். புத்திரர் விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இன்று ஆன்மீக செலவுகள் கொஞ்சம் ஏற்பட கூடும். காரியத்தில் இருந்த தடை தாமதம் விலகிச் செல்லும். எந்த ஒரு காரியத்தையும் செய்து முடிக்க கூடுதலாகத்தான் உழைக்க வேண்டியிருக்கும். அந்நிய மொழி பேசுபவர்களால் உதவிகள் கிடைக்கும். வெளியூரில் இருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும். ஏற்றுமதி துறையில் உள்ளவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். அதுபோலவே பங்குச்சந்தை துறையில் உள்ளவர்களுக்கும் நல்ல லாபம் கிடைக்கும். வசிக்கும் இடத்தின் மதிப்பும் மரியாதையும் கூடும். குடும்பத்தில் சகோதர வழியில் நன்மை உண்டாகும். எதையும் இன்று தைரியமாக செய்வீர்கள்.
வீடு தொடர்பான பணிகள் விரைந்து நடக்கும். உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கும். உடல் நிலையில் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். உடலில் வசீகரத் தன்மை கூடும். காதலில் வயப்பட கூடிய சூழல் இருக்கும். திருமணயோகம் இருக்கும். இன்றைய நாள் சுபநிகழ்ச்சிகள் நடத்துவதற்கான திட்டங்களை தீட்டுவீர்கள். அது வெற்றிகரமாக நடந்து முடியும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போதோ முக்கியமான காரியத்திற்கு செல்லும் போதோ சிவப்பு நிற ஆடை அல்லது சிவப்பு நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்தும் சிறப்பாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் 7 நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக வழங்குங்கள். உங்களுடைய கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கும். செல்வ நிலையை ஏற்படுத்திக் கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறம்
கன்னி :
கன்னிராசி அன்பர்களே..!! இன்று சிறு பணியையும் நேர்த்தியுடன் செய்வீர்கள். தொழில் வியாபாரத்தில் அளப்பரிய வளர்ச்சி ஏற்படும். பணவரவும் நன்மையை கொடுக்கும். மாமன் மைத்துனருக்கு உதவிகளைச் செய்வீர்கள். இன்று சுற்றுலா சென்றுவர பயணத்திட்டம் உருவாகும். இன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன் ஏதாவது ஒரு வகையில் வாக்குவாதம் வந்து செல்லும் பார்த்துக்கொள்ளுங்கள். கணவன் மனைவிக்கு இடையே சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடும். சகோதர்களிடம் கருத்து வேற்றுமை ஏற்படும். வெளியூர் பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். அடுத்தவர் கூறும் ஆலோசனைகளை ஏற்கும் போது கவனமாக இருங்கள். அவற்றை ஆராய்ந்து பார்த்து செய்யுங்கள். இன்று நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் கலகலப்பும் இருக்கும். வெளியூரிலிருந்து உங்களுக்கு நல்ல தகவல்கள் வந்துசேரும்.
பொறுப்புகள் கூடும் என்பதால் உத்தியோகத்தில் கொஞ்சம் உழைப்பு அதிகரிக்கும். அரசாங்கத்திடம் இருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும். பண பரிவர்த்தனையில் கொஞ்சம் கவனமாக நடந்து கொள்ளுங்கள் அது போதும். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். இருந்தாலும் ஏதேனும் சந்தேகம் இருப்பின் ஆசிரியரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். இன்று நீங்கள் வெளியிடங்களுக்கு செல்லும் போது மஞ்சள் நிற ஆடை அல்லது மஞ்சள் நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்தும் சிறப்பாக நடக்கும். வெற்றி வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும். இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள். உங்களுடைய கர்ம தோஷங்கள் நீங்கி செல்வ நிலையை ஏற்படுத்தும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் மஞ்சள் நிறம்
துலாம் :
துலாம் ராசி அன்பர்களே..!! இன்று பணி நிறைவேற பொறுமை அவசியம். தொழிலில் உள்ள குறைகளை பிறரிடம் விவாதிக்க வேண்டாம். பணவரவை விட செலவு அதிகரிக்கும். அரசு தொடர்பான அனுகூலம் தாமதத்தை கொடுக்கும். தியானம் தெய்வ வழிபாடு மனதில் நிம்மதியை கொடுக்கும். இன்று வீண் கவலை ஏற்பட்டு நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். உங்களது சொத்து தொடர்பான விவகாரங்களில் தாமதம் ஏற்படும். பக்தியில் நாட்டம் செல்லும். ஆன்மிக சுற்றுலா செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். நெருங்கிய நண்பரிடம் கொஞ்சம் சின்ன பிரச்சனைகள் வரக்கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். பொறுமையை கையாளுங்கள். கல்வியில் மாணவர்களுக்கு ஆர்வம் அதிகமாக இருக்கும். உங்களுடைய பணக் கஷ்டங்கள் தீரும். அதேபோல கடன்கள் அனைத்தும் கட்டுக்குள் இருக்கும். நண்பர்கள் உறவினர்கள் மூலம் உதவி கிடைக்கும். தந்தையுடன் ஏற்பட்ட மனஸ்தாபம் விலகிச்செல்லும். இன்றைய நாள் ஓரளவு வெற்றி பெறும் நாளாக இருக்கும்.
கணவன் மனைவிக்கு இடையே சின்ன சின்ன பிரச்சனைகள் வரக்கூடும் என்பதால் அதில் மட்டும் கவனம் செலுத்துங்கள். பேசும் பொழுது நீங்கள் நிதானமாகப் பேசுங்கள். வெளியூர் பயணம் அலைச்சல் தரக் கூடிய அளவில் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். மனம் திடீரென்று குழம்பி கொள்ளும். தேவையில்லாத விஷயங்களை மனதில் போட்டு குழப்பிக் கொள்ளாமல் பொறுமையாக இருங்கள். நடப்பது உங்களுக்கு நல்லவையாக இருக்கும். அது போல நீங்கள் வெளியில் செல்லும்பொழுது நீலநிற ஆடை அல்லது நீல நிறத்தில் கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக நடக்கும். அதுமட்டுமில்லை இன்று வெள்ளிக்கிழமை என்பதால் 7 நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக வழங்குங்கள். உங்களுடைய கர்ம தோசங்கள் அனைத்தும் நீங்கும். செல்வச் செழிப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு மற்றும் நீல நிறம்
விருச்சிகம் :
விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று உங்கள் செயல்களில் சீர்திருத்தம் தேவைப்படும். பிறரது விமர்சனத்தை பொருட்படுத்த வேண்டாம். தொழிலில் நிலுவை பணி நிறைவேற்றுவது நல்லது. பணவரவை விட செலவு கொஞ்சம் கூடும். வெளியூர் பயணம் பயனறிந்து மேற்கொள்ளுங்கள். இன்று எந்த ஒரு காரியத்தையும் செய்து முடிக்கும் வரை இந்த காரியம் முடியுமோ முடியாதோ என்ற மன குழப்பம் இருந்து கொண்டே இருக்கும். எதை பற்றியும் கவலை வேண்டாம். வீண் அலைச்சல் குறையும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறுவது பற்றிய கவலை இருக்கும். சக மாணவருடன் வாக்குவாதங்கள் இல்லாமல் பழகுங்கள் போதும். அடுத்தவரின் குற்றச்சாட்டுக்கு ஆளாக நேரிடும் கவனமாக இருங்கள். இன்று நீங்கள் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு கிடைக்கும். வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றம் இருக்கும்.
கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் கவனமாக இருங்கள். அது போலவே புதிய முயற்சிகளில் ஈடுபடும் பொழுது கவனமாக இருங்கள். இன்று தயவு செய்து புதிய முதலீடுகள் மட்டும் ஏதும் வேண்டாம். அதற்கான நேரம் வரும் வரை காத்திருந்து நாம் செய்து கொள்ளலாம். இன்று கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். குடும்பத்தாரிடமும் அன்பாக நடந்து கொள்வீர்கள். இன்று நீங்கள் வெளியில் செல்லும்போதோ முக்கியமான பணியை மேற்கொள்ளும் போதோ வெள்ளை நிற ஆடை அல்லது வெள்ளை நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் சொல்லுங்கள். அனைத்து காரியமும் சிறப்பாகவே இருக்கும். அது மட்டுமில்லை இன்று வெள்ளிக்கிழமை என்பதால் 7 நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக வழங்கினால் அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும். உங்களுடைய செல்வாக்கு உயரும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறம்
தனுசு :
தனுசு ராசி அன்பர்களே..!! இன்று பிறர் பாராட்டும் வகையில் செயல்படுவீர்கள். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற புதிய திட்டத்தை உருவாக்குவீர்கள். கூடுதலாகவே பண வரவு கிடைக்கும். புதிய வாகனம் வாங்க நல்ல யோகம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஒற்றுமை அதிகரிக்கும். இன்று மாணவர்களுக்கு மட்டும் கல்வியில் இருந்த தடைகள் விலகி செல்லும். போட்டிகளும் விலகிச்செல்லும். பாடங்களை படிப்பதில் இருந்த இடையூறுகள் நீங்கும். சமயத்திற்குத் தகுந்தாற்போல் உங்கள் கருத்துக்களை நீங்கள் மாற்றிக் கொள்வீர்கள். துன்பம் வருவதும் போல் இருக்குமே தவிர ஆனால் ஏதும் வராது. உங்களுடைய நல்ல குணத்திற்கு இன்று நல்லதே நடக்கும். பிள்ளைகளின் செயல்பாடுகள் திருப்தி கொடுப்பதாக இருக்கும். மன கவலை மட்டும் அவ்வப்போது வந்து செல்லலாம். முயற்சிகளில் இருந்த தடை விலகி செல்லும்.
எதிலும் எச்சரிக்கை என்பது எப்பொழுதுமே இருக்கட்டும். குடும்பத்தாருடன் வெளியிடங்களுக்கு சென்று பொழுதைக் கழிப்பீர்கள். கலகலப்பான சூழல் இருக்கும். இன்று உடலில் வசீகரத் தன்மை கூடும். காதல் கைகூடும். திருமணம் போன்ற யோகங்கள் கைகூடும். இன்று முயற்சியின் பேரில் சில காரியங்களை நீங்கள் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். அனைவரின் பாராட்டுகளையும் பெறுவீர்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அல்லது வெள்ளை நிறத்தில் கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள். அனைத்தும் சிறப்பாக இருக்கும் அது மட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் 7 நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக வழங்குங்கள். உங்களுடைய காரியம் வெற்றி பெறும். அதுமட்டுமில்லை கர்ம தோஷங்கள் நீங்கி செல்வ நிலையை உயர்த்திக் கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு
அதிஷ்ட எண் : 3 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்
மகரம் :
மகரம் ராசி அன்பர்களே..!! இன்று நண்பரை மட்டும் குறை சொல்ல வேண்டாம். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத குறுக்கீடுகள் கொஞ்சம் வரலாம். பொறுமையுடன் செயல்படுவதால் சிரமம் விலகிச்செல்லும். பணப்பரிவர்த்தனையில் பாதுகாப்பு வேண்டும். பணியாளர்களுக்கு ஓரளவு சலுகை கிடைக்கும். இன்று மனதில் ஏதேனும் கவலை பயம் அவ்வப்போது வந்து செல்லும். உங்களது பேச்சே உங்களுக்கு எதிர்ப்பை உண்டாக்கலாம் பார்த்துக்கொள்ளுங்கள். யோசித்து பேசுங்கள். ஆன்மீக எண்ணம் கூடும். உடன் இருப்பவர்களுடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்பட்டு நீங்கும். வாக்குவாதங்களை தவிர்த்து சாதுரியமாக கையாள்வது நல்லது. வரவேண்டிய பணம் வந்துசேரும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும்.
அது போல வெளியூரிலிருந்து நல்ல செய்திகள் வந்துசேரும். இன்று வீண் அலைச்சல் கொஞ்சம் சந்திக்க வேண்டியிருக்கும். பயணங்கள் செல்ல வேண்டியிருக்கும். மனம் ஓரளவு மகிழ்ச்சியாக காணப்படும். கூடுமான வரை நிம்மதியாக இருப்பதற்கு ஆலய வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். அதுமட்டுமில்லாமல் இன்று நீங்கள் வெளியில் செல்லும்பொழுது மஞ்சள் நிற ஆடை அல்லது மஞ்சள் நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும். அது மட்டும் இல்லை இன்று வெள்ளிக்கிழமை என்பதால் 7 நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்ன தானமாக வழங்குங்கள். உங்களுடைய கர்ம தோஷங்கள் நீங்கி வாழ்க்கையை செழிப்பான வாழ்க்கையை மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு
அதிஷ்ட எண் : 1 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்
கும்பம் :
கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று உறவினர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். தாமதமான பணியை புதிய உத்தியால் நிறைவேற்றுவீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். உபரி பணவரவு கிடைக்கும். கலையம்சம் நிறைந்த பொருட்களை வாங்குவீர்கள். இன்று தொழில் வியாபாரம் மூலம் வர வேண்டிய லாபம் வந்து சேரும். எதிர்பார்த்த நிதியுதவி ஓரளவு கிடைக்கும். ஆர்டர் களுக்காக இருந்த அலைச்சல்கள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விருப்பமில்லாத மாற்றங்கள் வரக்கூடும். எல்லா வசதிகளும் இன்று உங்களுக்கு நல்லபடியாக கிடைக்கும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். மனம் மகிழும் படியான சம்பவங்களும் இன்று நடக்கும். குடும்பத்தாருடன் மகிழ்ச்சியாக காண்பீர்கள். அதேபோல கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் இன்று கூடும்.
பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களையும் நீங்கள் வாங்கிக் கொடுப்பீர்கள். அதனால் மனம் மகிழ்வாக இருப்பீர்கள். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை அடைய கூடும். இருந்தாலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் தயவுசெய்து தைரியமாக எழுந்து நின்று கேட்டு சந்தேகத்தை தெரிந்துகொள்ளுங்கள். மாணவரிடம் கொஞ்சம் கடுமை காட்டாமல் நடந்து கொள்ளுங்கள் அது போதும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது முக்கியமான வேலைக்கு செல்லும்போது வெள்ளை நிற ஆடை அல்லது வெள்ளை நிறத்தில் கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள். அனைத்தும் சிறப்பாக நடக்கும். அதுமட்டுமில்லை இன்று வெள்ளிக்கிழமை என்பதால் 7 நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக வழங்குங்கள். உங்களுடைய வாழ்க்கையில் செல்வநிலை அதிகமாக இருக்கும். கர்ம தோஷங்கள் நீங்கி சந்தோசமாக காணப்படுவீர்கள்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 3
அதிஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் காவி நிறம்
மீனம் :
மீனம் ராசி அன்பர்களே..!! இன்று எவரிடமும் சுய பெருமையை பற்றி பேசவேண்டாம். தொழில் வியாபாரத்தில் உருவாகிற இடையூறு தாமதமின்றி சரிசெய்யவேண்டும். அளவான அளவில்தான் இன்று பண வரவு கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை மிகவும் தேவையாக இருக்கும். சத்தான உணவுகளை உண்ணுங்கள். ஆரோக்கியத்தைப் பாதுகாத்திடுங்கள். இன்று குடும்பத்தில் வீண் வாக்குவாதங்களும் அவ்வப்போது வந்து செல்லும். கணவன் மனைவிக்கிடையே நிதானத்தை மட்டும் கடைபிடியுங்கள். பிள்ளைகள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். உறவினர்கள் நண்பரிடம் கவனமாக பழகுங்கள். தாயின் உடல்நிலையில் கொஞ்சம் கவனம் இருக்கட்டும். மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் பிறக்கும். விருப்பத்திற்கு மாறான சம்பவங்கள் நடக்கலாம். அதேபோல கூடுதல் முயற்சியின் பேரில் இன்று நீங்கள் வெற்றி வாய்ப்புகளை குவிக்க முடியும். ஆன்மிக சிந்தனை மேலோங்கும். ஆன்மிக சுற்றுலா செல்வதற்கான திட்டங்களும் நடக்கும்.
உங்களுடைய உடலில் இன்று வசீகரத் தன்மை இருக்கும். காதலில் வயப்பட கூடிய சூழல் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். அக்கம் பக்கத்தில் எப்பொழுதும் போல அன்பாக நடந்து கொள்ளுங்கள் அது போதும். புதிய தொழில் முயற்சிகள் ஏதும் வேண்டாம். கொடுக்கல் வாங்கலில் கொஞ்சம் கவனம் இருக்கட்டும். பழைய கடன்கள் அடைபடும். கடன்கள் அனைத்துமே கட்டுக்குள் இருக்கும். அதை பற்றி எல்லாம் கவலை வேண்டாம். இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் அடைய கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். பாடத்தில் தயவுசெய்து கவனத்தை செலுத்துங்கள் அது போதும். இன்று நீங்கள் வீட்டை விட்டு செல்லும் பொழுது நீல நிறத்தில் ஆடையோ அல்லது நீல நிறத்தில் கைக்குட்டையோ எடுத்துச் செல்லுங்கள். இந்த நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டகரமான நிறமாக இருக்கும். அது மட்டுமில்லை இன்று வெள்ளிக்கிழமை என்பதால் 7 நபர்களுக்கு தயிர் சாதத்தை அந்த தானமாக வழங்குங்கள். செல்வ செழிப்பை ஏற்படுத்திக் கொடுக்கும். கர்ம தோசங்கள் அனைத்தும் நீங்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்