மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று தாராளமாக செலவிட்டு மகிழும் நாளாக இருக்கும். வியாபாரத்தில் புதிய மாற்றங்களைச் செய்யும் எண்ணம் மேலோங்கும். உறவினர்கள் சிலர் பணம் கேட்டு உங்களை தொந்தரவு செய்யக் கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். வெளியூர் பயணங்களின்போது பொருட்கள் மீது கவனம் இருக்கட்டும். இன்று மனக் குழப்பங்கள் தீரும். எதிலும் பயம் கொஞ்சம் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தடை தாமதம் கொஞ்சம் இருக்கும். சங்கடமான சூழ்நிலையை சந்திக்க வேண்டியிருக்கும்.
இன்று உடல்நிலையில் கவனம் இருக்கட்டும். ஜீரண கோளாறு போன்றவை ஏற்படக்கூடும். ஆரோக்கியத்தை கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள். செலவு கொஞ்சம் அதிகரிக்கும். கூடுமானவரை தேவையில்லாத பொருட்களை மட்டும் வாங்க வேண்டாம் பார்த்துக்கொள்ளுங்கள். பெரியவர்களுக்கு முடிந்த அளவிற்கு உதவிகள் செய்து நல்லதை கொடுக்கும். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை அடைய கூடும்.
இருந்தாலும் பாடத்தில் கவனம் செலுத்தி படிப்பது மிகவும் சிறப்பு. இன்று நீங்கள் வெளியில் செல்லும்பொழுது வெள்ளை நிறம் சிறப்பு நிறமாக இருக்கும். வெள்ளை நிறத்தை பயன்படுத்தி செல்வத்தை பெருக்கிக் கொள்ளுங்கள். அது மட்டுமில்லாமல் இன்று ஐப்பசி பௌர்ணமி என்பதால் ஏதேனும் ஒரு சிவன் கோவிலுக்கு சென்று அன்ன அபிஷேகத்தை கண்டு களியுங்கள். உங்கள் வாழ்க்கையில் எல்லா வளமும் பெற்று மகிழ்ச்சியாக வாழுங்கள்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் இளம் மஞ்சள் நிறம்
ரிஷபம் ராசி அன்பர்களே..!! இன்று தள்ளிப் போன காரியம் தானாகவே முடிவடையும் நாளாக இருக்கும். பிரபலமானவர்களின் சந்திப்பால் பெருமை காண்பீர்கள். புதிய ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். மாற்று மருத்துவத்தால் உடல் நலம் சீராகும். இன்று குடும்பத்தில் இருப்பவர்களால் வீண் பிரச்சினை குழப்பம் போன்றவை ஏற்பட்டு பின்னர் சரியாகும். கணவன் மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்படும். பிள்ளைகளிடம் பேசும்பொழுது எச்சரிக்கையாக இருங்கள். உறவினர்களிடம் எந்த உறுதியையும் தராமல் இருப்பது நல்லது.
அது மட்டுமில்லாமல் மற்றவர்களுக்கு எந்த விதமான வாக்குறுதிகளையும் கொடுக்காதீர்கள். இழுபறியாக இருந்த அரசாங்க வேலைகள் இப்பொழுது நல்ல முடிவுக்கு வரக்கூடும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பணவரவும் இருக்கும். தொழில் வியாபாரம் கொஞ்சம் மந்தமாக தான் செல்லும். தனவரவு கிடைப்பதில் காலதாமதம் இருக்கும். வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். அந்த பயணம் உங்களுக்கு வெற்றியை கொடுப்பதாக இருக்கும். மற்றவரிடம் பேசும்போது கொஞ்சம் கவனமாக பேசுங்கள்.
அதாவது அவர்கள் சொல்வதை கூர்ந்து கவனித்த பிறகு அதற்கு ஏற்றார்போல் பொறுமை காப்பது இன்று ரொம்ப முக்கியம். இன்று நீங்கள் வெளியில் செல்லும் பொழுது ஆரஞ்சு நிற ஆடையை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு சிறப்பு வாய்ந்த நிறமாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று ஐப்பசி பௌர்ணமி என்பதால் ஏதேனும் ஒரு சிவன் கோவிலுக்கு சென்று அன்னாபிஷேகத்தை கண்டு மகிழுங்கள். அன்னாபிஷேகத்தை மட்டுமே கண்டுவிட்டால் உங்களுடைய செல்வநிலை என்றுமே குறையாது.
இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 3#
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் ஊதா நிறம்
மிதுனம் ராசி அன்பர்களே..!! இன்று தொழில் வளர்ச்சி மேலோங்கும் நாளாக இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் வர தொலைபேசி வழித் தகவல் உறுதுணையாக அமையும். முக்கிய புள்ளியின் அறிமுகத்தால் பொருளாதார நிலை இன்று உயரும். இன்று ஆழ்ந்த யோசனையும் அனுபவ அறிவையும் கொண்டு எதையும் சாதிக்க முயற்சிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கவனம் இருக்கட்டும். எதிர்பாலினத்தவரிடம் பழகும் போது மிகவும் எச்சரிக்கையாக இருங்கள்.
எந்த காரியத்தை செய்தாலும் அதில் வேகத்தை காட்டாமல் மெத்தனமாகவே செய்யத் தோன்றும். அரசாங்க வேலைகளும் அனுகூலமாகவே இருக்கும். சகோதரர்களிடையே இருந்துவந்த பிரச்சினைகள் அகலும். இன்று மனப் பிரச்சினைகள் தீர்ந்து தெளிவு ஏற்படும். நீங்கள் செய்யக்கூடிய காரியங்களும் வெற்றியை கொடுக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல ஆர்வம் ஏற்படும். ஆசிரியர்களிடம் முழு ஒத்துழைப்பு கிடைக்கும்.
சக மாணவரிடம் மட்டும் கொஞ்சம் கவனமாக நடந்து கொள்ளுங்கள். இன்று நீங்கள் வெளியில் செல்லும்பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து செல்லுங்கள். நீலநிறம் இன்று சிறப்பாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று ஐப்பசி பௌர்ணமி என்பதால் ஏதேனும் ஒரு சிவன் கோவிலுக்கு சென்று அன்ன அபிஷேகத்தை கண்டு களியுங்கள். உங்கள் வாழ்க்கையில் வற்றாத செல்வத்தை ஏற்படுத்திக்கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் நீல நிறம்
கடகம் ராசி அன்பர்களே..!! இன்று பொறுமையோடு செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். தடைகளும், தன விரயமும் கொஞ்சம் ஏற்படலாம். உடன் இருப்பவரிடம் கவனமாகவே நடந்து கொள்வது நல்லது. குடும்பத்தினரின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். ஆகையால் குடும்பத்தாரிடம் பேசும் போது கொஞ்சம் கவனமாக பேசுங்கள். இன்று குடும்ப விஷயமாக அலைய வேண்டியிருக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் நெருக்கம் கொஞ்சம் குறையும். எந்த ஒரு விஷயத்தையும் பார்த்து பேசுவது நல்லது. தாய் தந்தையரின் உடல் நலத்தில் கவனமாக இருங்கள். எதிலும் உற்சாகம் குறைந்து சோம்பல் ஏற்படும்.
வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சில சலுகைகளை அறிவிப்பீர்கள். பாக்கிகள் வசூலாகும். புதிய பங்குதாரர்கள் சேருவார்கள். அதுபோலவே பங்குச் சந்தையிலும் உங்களுக்கு நல்ல லாபம் இருக்கும். புதிய யுக்திகளை கையாண்டு தொழிலை விரிவு படுத்த கூடிய எண்ணங்கள் மேலோங்கும். புதிய முதலீடுகளை செய்வதற்கு தயங்க மாட்டீர்கள். இருந்தாலும் பொறுமையாக இருங்கள் பின்னர் செய்து கொள்ளலாம். கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் கொஞ்சம் கவனமாக இருங்கள். கடன்கள் மட்டும் ன்று வாங்க வேண்டாம் பார்த்துக்கொள்ளுங்கள். இன்று மாணவர்கள் கல்வியில் கடினமாக உழைத்து பாடங்களை படிக்க வேண்டியிருக்கும்.
தயவுசெய்து ஆசிரியர்களின் சொல்படி மட்டும் நடந்து கொள்ளுங்கள். கூடுமான வரை படித்த பாடத்தை ஒரு முறைக்கு இரு முறை எழுதிப் பாருங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிற ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுப்பதாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று ஐப்பசி பௌர்ணமி என்பதால் ஏதேனும் ஒரு சிவன் கோயிலுக்கு சென்று மகா அன்னாபிஷேகம் கண்டு களியுங்கள். இன்று அன்னாபிஷேகம் பார்த்தால் உங்கள் வாழ்க்கையில் செல்வநிலை என்றும் குறையாது.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்
சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று புதிய பாதை புலப்படும் நாளாகவே இருக்கும். சொன்ன சொல்லை நிறைவேற்றி காட்டுவீர்கள். கடந்த இரண்டு நாட்களாக ஏற்பட்ட தடை தாமதங்கள் இன்று அகலும். மன ஆறுதல் தரும் விஷயத்தில் ஒரு பயணங்களை மேற்கொள்வீர்கள். தந்தைவழி உறவினர்களால் நன்மை உண்டாகும். இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு தொழில் தொடர்பான வீண் அலைச்சல் கொஞ்சம் இருக்கும். பணவரவு தாமதப்பட்டாலும் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை தொடர்பான கவலைகள் கொஞ்சம் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள்.
சக ஊழியருடன் அனுசரித்துச் செல்வது நல்லது. சகோதரர்களுக்கு திருமணம் முடியும். இன்று குடும்பத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் தோன்றி மறையும். விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள் அது போதும். நன்மையை நாம் பெறலாம். குடும்பத்தில் ஓரளவு மகிழ்ச்சி காணப்படும். செய்கின்ற வேலையை மட்டும் கொஞ்சம் கவனமாகவே செய்யுங்கள். இன்று மாணவர்கள் கல்வியில் கொஞ்சம் கடினமாக உழைத்தால் தான் பாடத்தை படிக்க வேண்டும்.
தயவுசெய்து பாடத்தில் கவனத்தை செலுத்துங்கள். இன்று நீங்கள் வெளியில் செல்லும்பொழுது நீல நிற ஆடையை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடியதாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று ஐப்பசி பௌர்ணமி என்பதால் ஏதேனும் ஒரு சிவன் கோவிலுக்கு சென்று மகா அன்னாபிஷேகம் கண்டு களியுங்கள். அந்த அபிஷேகத்தை நீங்கள் பார்த்து விட்டால் உங்கள் வாழ்க்கையில் எப்பொழுதுமே வற்றாத செல்வம் ஏற்படும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் சிவப்பு நிறம்
கன்னிராசி அன்பர்களே..!! இன்று நண்பர்கள் உங்களுக்கு நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்ப்பார்கள். உத்தியோக முயற்சி வெற்றியை கொடுக்கும். எடுக்கும் முயற்சிகளில் மன குழப்பம் வேண்டாம். பொறுமையாக யோசித்து செய்யுங்கள் அது போதும். வாங்கல் கொடுக்கல் களில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். இன்று அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்வதில் சங்கடமான சூழ்நிலை உருவாகும். சமாளித்து முன்னேறும் திறமையும் இருக்கும். இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேற கடுமையாக உழைப்பீர்கள்.
போட்டிகள் சாதகமான பலனை கொடுக்கும். பண வரவு இருக்கும். உறவினரால் அதிக அனுகூலமும் இருக்கும். கஷ்டங்கள் குறையும். வேலை பார்க்கும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். மனம் நிம்மதியாக காணப்படும். பெரிய பதவிக்கு உங்கள் பெயர் பரிந்துரைக்கப்படும். நட்பு வட்டம் விரிவடையும். வி ஐ பி களின் சந்திப்பு கிடைக்கும். இன்று அனைத்து விதமான விஷயங்களிலும் உங்களுக்கு நன்மை நடக்கும்.
அதுமட்டுமில்லாமல் இன்று நீங்கள் வெளியில் செல்லும்பொழுது மஞ்சள் நிற ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு சிறப்பு வாய்ந்ததாக அதிஸ்டத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று ஐப்பசி பௌர்ணமி என்பதால் ஏதேனும் ஒரு சிவன் கோவிலுக்கு சென்று மஹா அன்னாபிஷேகம் கண்டு களியுங்கள். உங்கள் வாழ்க்கையில் வற்றாத செல்வத்தைக் கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்
துலாம் ராசி அன்பர்களே..!! இன்று ஆரோக்கியம் சீராகி ஆனந்தத்தை கொடுக்கும். அன்பு நண்பர்களின் ஆதரவு பெருகும். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகிச் செல்வார்கள். மறதியால் விட்டுப்போன காரியம் ஒன்றை செய்து முடிப்பீர்கள். இன்று அடுத்தவரை மட்டும் நம்பி எந்த காரியத்திலும் இறங்காதீர்கள். அப்படி இறங்கினால் கவனமாக செயல்படுங்கள். தொழில் வியாபாரம் தொடர்பாக இன்று அலைய வேண்டியிருக்கும். சின்ன சின்ன பிரச்சனைகளையும் சந்திக்க வேண்டியிருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். கவனமாக இருந்து கொள்ளுங்கள். தடைகளை தாண்டித்தான் இன்று நீங்கள் முன்னேறிச் செல்வீர்கள்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த பணியை முதலில் முடிப்பது போன்ற குழப்பத்திற்கு ஆளாக வேண்டியிருக்கும். மனதில் தோன்றும் ஆசைகள் அனைத்துமே நிறைவேறுவதற்கு கடுமையாக உழைக்க வேண்டும். இன்றைய நாள் கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் கொஞ்சம் கவனமாக நடந்து கொள்ளுங்கள். வாகனத்தில் செல்லும்போது கவனமாக செல்லுங்கள். இன்று நீங்கள் எந்த காரணத்தையும் கொண்டு கடன்களை மட்டும் வாங்காதீர்கள் அது போதும். மாணவச் செல்வங்கள் இன்று கடினமாக உழைத்துத்தான் பாடங்களை படிக்க வேண்டியிருக்கும்.
பாடங்களில் மட்டும் கவனம் செலுத்துங்கள். அதுமட்டுமில்லாமல் இன்று நீங்கள் வெளியே செல்லும் போது மஞ்சள் நிற ஆடையை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஸ்டத்தை கொடுக்கக்கூடியதாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று ஐப்பசி பௌர்ணமி என்பதால் ஏதேனும் ஒரு சிவன் கோவிலுக்கு சென்று மகா அன்னாபிஷேகத்தை கண்டுகளியுங்கள். மகா அன்னாபிஷேகத்தை நீங்கள் பார்த்து விட்டால் உங்கள் வாழ்க்கையில் வற்றாத செல்வம் ஏற்படும். தயவுசெய்து இதை மட்டும் செய்து பாருங்கள்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்
விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று பெற்றோர் வழி ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். பிரச்சினைகள் படிப்படியாக குறையும். மதிப்பும் மரியாதையும் உயரும். பணத்தேவைகள் எளிதில் இன்று பூர்த்தியாகும். பிள்ளைகள் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றியை கொடுக்கும். இன்று முன்கோபத்தை மட்டும் தயவு செய்து குறைத்துக்கொள்ளுங்கள். நிதானத்தை கடைபிடியுங்கள் அது போதும். பணவரவு ஓரளவு திருப்திகரமாக இருக்கும்.
இன்று மாணவர்கள் மிகவும் கவனத்துடன் பாடத்தை படிப்பது கூடுதல் மதிப்பெண் எடுக்க உதவும். எதையும் சமாளிக்கும் திறமை ஏற்படும். உழைத்து பயனடைய முயலு ங்கள். கணவன் மனைவிக்கு இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். இன்று நண்பர்களிடம் அதிகமாக உதவியை எதிர்பார்த்தால் ஏமாற்றம் கூடும். அதே போலவே நண்பரிடம் பேசும் போது கொஞ்சம் கவனமாக பேசுங்கள். விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். அனைவரையும் அனுசரித்துச் செல்லுங்கள்.
அக்கம் பக்கத்தினரிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள். இன்று நீங்கள் வெளியில் செல்லும்பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுப்பதாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று ஐப்பசி பௌர்ணமி என்பதால் ஏதேனும் ஒரு சிவன் கோயிலுக்கு சென்று மகா அன்னாபிஷேகத்தை கண்டு களியுங்கள். மஹா அன்னாபிஷேகம் நீங்கள் பார்த்து விட்டால் உங்கள் வாழ்க்கையில் வற்றாத செல்வம் ஏற்படும். தயவு செய்து இதனை செய்து பாருங்கள்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம்
தனுசு ராசி அன்பர்களே..!! இன்று ஆச்சரியப்படத்தக்க சம்பவங்கள் நடைபெறும் நாளாக இருக்கும். பெற்றோர் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். பொது வாழ்வில் புகழ் கூடும். மங்கல ஓசை மனையில் கேட்க வழிபிறக்கும். இன்று வீண் வாக்குவாதங்களை மட்டும் தவிர்ப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருங்கள். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செலவுகள் அதிகரிக்கும். கவனத்துடன் பாடங்களை படியுங்கள். எதிரில் இருப்பவர்களை எடை போடும் சாமர்த்தியம் என்று உண்டாகும்.
பெண்கள் பெரியோர்களின் ஆசியைப் பெற்றால் எந்த காரியத்தையும் சிறப்பாக செய்யலாம். உடல் நலத்தில் அக்கறை காட்டுவது அவசியம். குடும்பத்தில் கலகலப்பான சூழல் இருக்கும். அதுபோலவே இன்று வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். நண்பர்களிடம் பேசும்போது மட்டும் கொஞ்சம் கவனமாக பேசுங்கள் அது போதும். பங்குச்சந்தையில் உள்ளவர்களுக்கு நல்ல லாபம் இன்று ஈட்டக் கூடிய சூழல் இருக்கும்.
இன்று நீங்கள் வெளியில் செல்லும்பொழுது வெள்ளை நிற ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஸ்டத்தை கொடுக்கக்கூடியதாக இருக்கும். அது மட்டுமில்லாமல் ஐப்பசி பௌர்ணமி என்பதால் ஏதேனும் ஒரு சிவன் கோவிலுக்கு சென்று மகா அன்னாபிஷேகம் கண்டு களியுங்கள். அன்னாபிஷேகத்தை நீங்கள் பார்த்து விட்டால் உங்கள் வாழ்க்கையில் எப்பொழுதுமே வற்றாத செல்வம் ஏற்படும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் வெள்ளை நிறம்
மகரம் ராசி அன்பர்களே..!! இன்று தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் நாளாக இருக்கும். இளைய சகோதரத்தின் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குடும்பத்திற்கு தேவையான மின்சாதன பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இன்று முன் கோபம் வந்தாலும் அதனால் பாதிப்பு ஏதும் இருக்காது. பண வரவு சிறப்பாக இருக்கும். மன தைரியம் கூடும். எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் சமாளித்து முன்னேறி விடுவீர்கள்.
ஆனால் மற்றவர்களின் சூழ்ச்சிக்கு ஆளாகாமல் கவனமாக இருப்பது மட்டும் அவசியம் பார்த்துக்கொள்ளுங்கள். வழக்கு விவகாரங்களில் சாதகமான பலன் உங்களுக்குக் கிடைக்கும். மாணவர்கள் எதிலும் சுறுசுறுப்பாக இருப்பது அவசியம். பாடங்களை படிப்பதில் மட்டும் கவனம் செலுத்துங்கள். இன்று குடும்பத்தில் ஓரளவு மகிழ்ச்சி தங்கும்.
இன்று வெளியிடங்களுக்கு நீங்கள் செல்லும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு சிறப்பாக அமையும். அதுமட்டுமில்லாமல் இன்று ஐப்பசி பௌர்ணமி என்பதால் ஏதேனும் ஒரு சிவன் கோவிலுக்கு சென்று மகா அன்னாபிஷேகத்தை கண்டு களியுங்கள். இந்த மகா அன்னாபிஷேகம் உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய வற்றாத செல்வத்தை ஏற்படுத்திக் கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிஷ்ட எண் : 4 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் ஊதா நிறம்
கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று எண்ணங்கள் அனைத்துமே எளிதில் நிறைவேறும். எடுத்த முயற்சியில் வெற்றி கிட்டும். நட்பால் நன்மை உண்டாகும். சகோதரர் வழியில் ஒற்றுமை பலப்படும். இன்று பஞ்சாயத்துக்கள் அனைத்துமே நல்ல முடிவை கொடுக்கும். நூதனப் பொருட்களை வாங்கி சேர்ப்பீர்கள். இன்று தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாக எடுத்த முயற்சிகள் சாதகமான பலனை கொடுக்கும். பழைய பாக்கிகள் அனைத்தும் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, வருமான உயர்வு போன்றவை நிகழும்.
சக ஊழியர்களிடம் நிதானமாகப் பேசுங்கள் அது போதும். இன்று தெய்வீக நம்பிக்கை உங்களுக்கு அதிகரிக்கும். தெய்வப் பணிகளில் ஈடுபட்டால் மனத்தெளிவும் நிம்மதியும் உண்டாகும். இன்றும் அதிர்ஷ்டகரமான வாய்ப்புகளை நீங்கள் பெறக்கூடும். இன்று மாணவர்கள் கல்வியில் எடுக்கும் முயற்சிகள் ஓரளவு கைகொடுக்கும். கவனமாக பாடங்களைப் படியுங்கள் அது போதும்.
இன்று நீங்கள் வெளியில் செல்லும்பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்ட நிறமாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று ஐப்பசி பௌர்ணமி என்பதால் ஏதேனும் ஒரு சிவன் கோவிலுக்கு சென்று மகா அன்னாபிஷேகத்தை கண்டு களியுங்கள். மஹா அபிஷேகத்தை மட்டும் நீங்கள் கண்டுகளித்துவிட்டால் உங்கள் வாழ்க்கையில் வற்றாப் செல்வம் ஏற்படும். தயவுசெய்து இதை மட்டும் செய்து வாருங்கள்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு
அதிஷ்ட எண் : 1 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் இளம் சிவப்பு நிறம்
மீனம் ராசி அன்பர்களே..!! இன்று இடமாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும் நாளாக இருக்கும். எதிர்பார்ப்புகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். பக்குவமாக பேசி காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். உறவினர்களின் வருகை உண்டாகும். இன்று குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் கூடும். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். இன்று குடும்பத்தாருடன் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவும் நேரிடும். உறவினர்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் கூடும்.
புதிய முயற்சிகளில் ஈடுபடுவது வெற்றியை கொடுக்கும். சக மாணவரிடம் பொறுமையாக நடந்துகொள்வது அவசியம். பாடத்தில் மட்டும் கவனத்தை செலுத்துவது மிகவும் அவசியம். கூடுமானவரை ஆசிரியரின் சொல்படி மட்டும் நடந்து கொள்ளுங்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் இன்று இருக்கும். கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் கூட நல்ல பலனை கொடுக்கும். பழைய பாக்கிகள் வசூலாகி மன மகிழ்ச்சியை ஏற்படுத்தும். இன்று நீங்கள் வெளியில் செல்லும்பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள்.
சிவப்பு நிறம் உங்களுக்கு மிகவும் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று ஐப்பசி பௌர்ணமி என்பதால் ஏதேனும் ஒரு சிவன் கோவிலுக்கு சென்று மஹா அன்னாபிஷேகம் கண்டு களியுங்கள். மஹா அன்னாபிஷேகம் உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடிய அளவில் இருக்கும். வற்றாத செல்வத்தை ஏற்படுத்தி கொடுக்கும். தயவுசெய்து மஹா அன்னாபிஷேகத்தில் கலந்து கொள்ளுங்கள்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு
அதிஷ்ட எண் : 3 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் நீல நிறம்