டெல்லியில் தடுப்பூசி இல்லாத காரணத்தினால் 18 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடுவது தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இதையடுத்து தடுப்பூசி வழங்குவதில் மத்திய அரசு தாமதம் செய்து வந்தால் எத்தனை உயிரிழப்புகள் ஏற்படும் என்பது தெரியவில்லை என்று அவர் பேட்டியளித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: “டெல்லியில் தடுப்பூசி இல்லை என்ற காரணத்தினால் நான்கு நாட்களாக 18 முதல் 44 வயது நபருக்கு போடப்படும் தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டுள்ளது.
வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய முற்பட்டபோது மாநிலங்களோடு ஒப்பந்தம் போட்டுள்ளதால் நிறுவனங்கள் தடுப்பூசியை தர மறுக்கின்றனர். இதனால் தடுப்பூசி நிறுவனங்களிடம் இருந்து தடுப்பூசியை பெற மத்திய அரசால் மட்டுமே முடியும். தடுப்பூசி வழங்குவதில் தாமதம் செய்தால் மேலும் எத்தனை உயிர் இழப்புகள் ஏற்படும் எனத் தெரியவில்லை” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.