சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது.
இதனால் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6,0000க்கும் மேல் அதிகமாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் ஒருவரை தாக்கினால், அந்த வைரஸ் பாதிக்கப்பட்டவரின் உடலில் 37 நாட்கள் வீரியத்துடன் இருக்கும் என்பதை சீன மருத்துவர்கள் வெளியிட்டுள்ளனர்.
மேலும் பாதிக்கப்பட்டவருக்கு 20 நாட்களுக்கு பிறகுதான் அதன் அறிகுறி தெரியும் எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர். வைரஸ் தாக்குதல் உறுதியான பின்பு 20 நாட்கள் கவனமாக இருக்கவேண்டும் எனவும் வைரஸால் பாதிக்கப்பட்டவர் அந்த பாதிப்பில் இருந்து மீண்டுவர சில வாரங்கள் ஆகும் என கூறப்படுகிறது.
மேலும், கொரானா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமாகிய வந்தவர்களுக்கு ஓரிரு நாட்களுக்கு வைரஸின் தாக்கம் உடலில் இருக்கும் என்றும் கூறியுள்ளனர்.