Categories
உலக செய்திகள்

“பைடன் நிர்வாகத்தில்” எத்தனை இந்தியர்களுக்கு முக்கிய பதவி தெரியுமா…? முழு லிஸ்ட் இதோ…!!

பைடன் நிர்வாகத்தில் முக்கிய பொறுப்புகளை வழங்கியிருக்கும் இந்தியர்களின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் 46 வது ஜனாதிபதியாக ஜோ பைடன் பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில் பைடன் தனது நிர்வாகத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கர்களுக்கு முக்கிய பதவிகளையும் பொறுப்புகளையும் வழங்கியுள்ளார். அவ்வகையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் அமெரிக்க துணை அதிபராக பதவியேற்றுள்ளார். இதுபோன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த நீரா டாண்டென்பெண்ணுக்கு மேலாண்மை மற்றும் பட்ஜெட் அலுவலக நிர்வாக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

மருத்துவர் விவேக் மூர்த்தி என்பவருக்கு கோவிட்-19 சிறப்புப் படையின் துணைத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. வனிதா குப்தா என்பவருக்கு அட்டர்னி ஜெனரல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. சாந்தி கலக்திலுக்கு ஜனநாயகம் மற்றும் மனித உரிமை குழுவின் ஒருங்கிணைப்பாளர் பதவியும், வேதாந்த படேல் என்பவர் வெள்ளை மாளிகையின் துணைச் செயலாளராகவும்  நியமிக்கப்பட்டுள்ளார். கௌதமன் என்பவர் வெள்ளை மாளிகையில் அலுவலகத்தின் இணை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தேசிய பொருளாதார இயக்குனராக  சமீரா ஃபைசிலி பதவி ஏற்றுள்ளார். பைடனின் உரை எழுத்தாளராக வினய் ரெட்டியும், சோனியா அகர்வால் என்பவர் காலநிலை கொள்கை மூத்த ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். கமலா ஹாரிஸ் அலுஅலகத்தின் துணை ஊடக செயலாளராக சப்ரினா சிங் நியமிக்கப்பட்டுள்ளார். வெள்ளை மாளிகையின் இணை கவுன்செலாக நேகா குப்தா நியமிக்கப்பட்டுள்ளார்.

Categories

Tech |