Categories
மாநில செய்திகள்

“திருடுபோன இலவச லேப்டாப்கள் எத்தனை?”… பள்ளிக்கல்வித்துறை கேள்வி…!!

பள்ளிகளில் திருடு போன மடிக்கணினிகளை குறித்து அறிக்கையாக தயார் செய்து வழங்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

வருடம் தோறும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு இலவசமாக மடிக்கணினிகள் வழங்கப்படுகிறது. இவ்வாறு அரசிடம் இருந்து வழங்கப்படும் மடிக்கணினிகள் திருடு போகிறது என பல்வேறு பள்ளிகளிலிருந்து புகார்கள் நிறைய வந்திருக்கின்றன. இதனால் 2012 முதல் தற்பொழுது வரை காணாமல்போன மடிக்கணினிகளை பற்றிய தகவல்களை பள்ளிகள் சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

மேலும் கொடுக்கப்பட்டுள்ள புகாரை கருத்தில் கொண்டு மடிக்கணினிகளை மீட்க வேண்டும், அப்படி இல்லை என்றால் அதற்கு ஈடாக உள்ள தொகையை செலுத்த வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இதுவரை எத்தனை மடிக்கணினிகள் காணாமல் போயிருக்கின்றன? அதில் எத்தனை மீட்கப்பட்டு உள்ளன? என்பது குறித்தும் அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் அறிக்கையாக தயார் செய்து வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

Categories

Tech |