கொரோனோ பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் முழுக்க தற்போது வரை சுமார் 367 கோடி மக்களுக்கு இரண்டு டோஸ் தடுப்பூசிகள் அளிக்கப்பட்டிருக்கிறது.
உலக நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டிருப்பதால், அதனை கட்டுப்படுத்த ஸ்புட்னிக், கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் மக்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்ட பின்பு, தடுப்பூசியளிக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், 2 டோஸ் தடுப்பூசிகள் உலக நாடுகளில் தற்போது வரை 367 கோடி மக்கள் செலுத்தி கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்த மக்கள் தொகையில் இது 46.6% என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், கொரோனா தொற்றில் அமெரிக்கா முதலிடத்தில் இருக்கிறது.
அங்கு, சுமார் 5.01 கோடி மக்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்தியா இதில் இரண்டாம் இடத்தில் உள்ளது. அங்கு சுமார் 3.4 கோடி மக்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. உலக நாடுகள் முழுக்க நேற்று நிலவரத்தின் படி, சுமார் 857 கோடி தடுப்பூசிகள் அளிக்கப்பட்டிருக்கின்றன.
அதன்படி, அதிக மக்கள் தொகை உடைய கொண்ட நாடுகளான, சீனா, இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா மற்றும் பிரேசில் போன்ற நாடுகள் அதிக அளவில் தடுப்பூசி செலுத்திய நாடுகளாக தெரிவிக்கப்பட்டுள்ளது.