சத்துக்கள் வீணாகாமல் சமைப்பது எப்படி?
காய்களை எப்போதும் கழுவிய பின் நறுக்க வேண்டும். நறுக்கிய பின் கழுவினால் அதில் உள்ள சத்துகள் வீணாகும்.
அதிக வெப்பத்தில் உள்ள எண்ணெயில் உணவை பொறிக்கும் பொழுது அதிகளவில் சத்துகள் வீணாகிறது.முடிந்த வரை உணவை வேகவைத்து உண்பது நல்லது .
தேவையான அளவு தண்ணீர் வைத்து அது கொதித்தவுடன் உணவுப் பொருட்களை போட்டு சமைப்பது நல்லது .இல்லை எனில் சத்துக்கள் வீணடிக்கப்படும் .
பாத்திரத்தை மூடி சமைப்பதால் சத்துக்கள் வீணாவது குறைக்கப்படுகிறது.
பச்சையாக உண்ணக் கூடிய காய்கறிகளை நன்றாக கழுவிய பின் சாப்பிடும் பொழுது நமக்கு தேவையான சத்துகள் வீணாகமல் கிடைக்கிறது.
காய்களை நறுக்கி உடனடியாக சமைப்பது நல்லது . கீரைகளை நிமிடங்கள் வரை மூடாமல் சமைக்க வேண்டும். பிறகு மூடிக் கொள்ளலாம்.