ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த கொரோனா தடுப்பு கலந்தாய்வு கூட்டத்தில் கொரோனா 3ஆம் அலைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாலுகா அலுவலகத்தில் கொரோனா 3ஆம் அலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு கீழக்கரை தாசில்தார் முருகேசன் தலைமை தங்கியுள்ளார். இதனையடுத்து துணை தாசில்தார் பழனிக்குமார்,நகராட்சி அன்னையர் பூபதி, வர்த்தக சங்க தலைவர் ஜகுபர் மற்றும் காய்கறி, மளிகை கடை உயிரிமையாளர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து கடையின் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்துக்கொள்ள வேண்டும் என்றும் முகக்கவசம் அணிந்தும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கும் முகக்கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கூறியுள்ளனர். இதனை மீறும் கடை உயிரிமையாளர்களுக்கு அபராதம் விதிப்பதோடு கடைக்கு சீல் வைக்கப்படும் எனவும் கூறியுள்ளனர். தற்போது கொரோனா 2ஆம் அலையில் பொதுமக்கள் பாதிக்கப்பட்ட நிலைமை மீண்டும் 3வது அலையால் பொதுமக்கள் பாதிக்க கூடாது என்றால் இந்த ஒத்துழைப்பை பொதுமக்கள் அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.