ஆந்திரா ஸ்டைல் புளியோதரை
தேவையான பொருள்கள் :
சாதம் – 1 கப்
புளி – தேவையான அளவு
பச்சை மிளகாய் – 1
மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
கடுகு – 1/4 ஸ்பூன்
உளுந்து – 1 ஸ்பூன்
கடலைப் பருப்பு – 1 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
நல்லெண்ணெய் – 1 ஸ்பூன்
பெருங்காயம் – 1/4 ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை :
முதலில் ஒரு கிண்ணத்தில் புளிக்கரைசல் , மஞ்சள் தூள், பச்சை மிளகாய், கறிவேப்பிலை,நல்லெண்ணெய் ஆகியவற்றை ஒன்றாக கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு, மிளகாய் வற்றல், பெருங்காயம், புளிக் கரைசல் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும் . நன்கு கொதித்து வந்ததும், சாதத்துடன் சேர்த்துக் கிளறினால் சூப்பரான ஆந்திரா ஸ்டைல் புளியோதரை ரெடி!!!