கையேந்தி பவன் காரச்சட்னி
தேவையான பொருட்கள் :
பூண்டு – 4 பற்கள்
தனியா – 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – தேவைக்கேற்ப
வரமிளகாய் – 12
இஞ்சி – சிறிய துண்டு [ 1 இன்ஞ் ]
பல்லாரி – 2
தக்காளி – 2
புளி – சிறிது
பெருங்காயத்தூள் – சிறிது
கறிவேப்பிலை – தேவைக்கேற்ப
கடுகு – 1/4 ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை :
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பூண்டு , தனியா , இஞ்சி மற்றும் வரமிளகாய் சேர்த்து சிவக்க வறுத்துக் கொள்ள வேண்டும் .இதனுடன் நறுக்கிய பல்லாரி, உப்பு சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும் . பின் நறுக்கிய தக்காளி , புளி சேர்த்து நன்கு வதக்கி பெருங்காயத்தூள் மற்றும் கொத்தமல்லித்தழை சேர்த்து ஆறவைத்து அரைத்தெடுக்க வேண்டும் . கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு , கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியில் சேர்த்தால் காரசாரமான கையேந்தி பவன் காரச்சட்னி தயார் !!!