பிரியாணி பொடி
தேவையான பொருட்கள் :
மல்லி – 4 மேஜைக்கரண்டி
பட்டை – 5 இன்ச்
சீரகம் – 1 மேஜைக்கரண்டி
சோம்பு – 1 1/2 தேக்கரண்டி
கிராம்பு – 1 மேஜைக்கரண்டி
பிரியாணி இலை – 2
மிளகு – 1 தேக்கரண்டி
மராத்தி மொக்கு – 2
ஏலக்காய் – 6
அண்ணாச்சி மொக்கு – 2
ஜாதிபத்திரி – 2
துருவிய ஜாதிக்காய் – 1/2 ஸ்பூன்
செய்முறை :
முதலில் ஜாதிக்காயை மட்டும் தனியே எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும் .பின்னர் ஒரு கடாயில் தீயை குறைத்து வைத்து மேற்கூறிய அனைத்து பொருட்களையும் தனித்தனியாக நல்ல மணம் வரும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும். வறுத்த பொருட்களை மிக்ஸியில் போட்டு , ஜாதிக்காய் பொடி சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்தால் பிரியாணி பொடி தயார் !!!