கொத்தமல்லி துவையல்
தேவையான பொருட்கள் :
கொத்தமல்லி இலை – 1 கட்டு
காய்ந்த மிளகாய் – 9
புளி – சிறிதளவு
கடுகு – 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் கொத்தமல்லி இலையை நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும் .ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி உளுத்தம்பருப்பு , காய்ந்த மிளகாய், புளி, உப்பு, கொத்தமல்லி இலையை போட்டு வதக்கி, ஆறியதும் அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் கடாயில் எண்ணெயை ஊற்றி, கடுகு , கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அரைத்த விழுதில் கொட்டினால் சுவையான கொத்தமல்லி துவையல் தயார் !!!