Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

கரம் மசாலா பொடி அரைப்பது எப்படி !!!

கரம் மசாலா பொடி

தேவையான பொருட்கள் :

சோம்பு –  3  டேபிள் ஸ்பூன்

தனியா –  3  டேபிள் ஸ்பூன்

மிளகு –  1 டீஸ்பூன்

சீரகம்  –  1  டீஸ்பூன்

பட்டை –  5  [2  இன்ச் அளவுடையது ]

கிராம்பு –  15

ஏலக்காய் –  6

அன்னாசி பூ –   2

ஜாதிபத்திரி – 2

மராத்தி மொக்கு – 4

பிரியாணி இலை –  2

கரம் மசாலாக்கான பட முடிவுகள்

செய்முறை :

ஒரு கடாயில் சோம்பு  ,  தனியா , மிளகு , சீரகம் சேர்த்து வறுத்து தனியே எடுத்துக் கொள்ள வேண்டும். பின்  அதே கடாயில்   பட்டை  , கிராம்பு , ஏலக்காய் , அன்னாசி பூ, ஜாதிபத்திரி , மராத்தி மொக்கு , பிரியாணி இலை சேர்த்து தனியாக வறுத்துக் கொள்ள வேண்டும் . இவை ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்தால் கரம் மசாலா பொடி தயார் !!!

 

 

 

Categories

Tech |