தேவையான பொருட்கள் :
இட்லி அரிசி – 2 1/2 கிலோ
உளுந்து – 1/2 கிலோ
வெந்தயம் – 25 கிராம்
செய்முறை :
முதலில் அரிசியை அலசி நன்கு காய வைத்து தனியாக மாவாக அரைத்துக்கொள்ள வேண்டும் .பின் உளுந்து மற்றும் வெந்தயத்தை அலசி நன்கு காய வைத்து மாவாக அரைத்துக் கொள்ள வேண்டும் . பின் இரண்டு மாவையும் கலந்து விட்டால் இட்லி மாவு தயார் !!…பின்னர் இதிலிருந்து தேவையான மாவுடன் உப்பு , அரைத்து எடுத்த சாதம் அல்லது ஊறவைத்து அரைத்த வெள்ளை அவல் சேர்த்து மறுநாள் இட்லிகளாக அவித்து எடுத்தால் சுவையான பஞ்சி போன்ற இட்லி தயார் !!!