Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான எள்ளு துவையல் அரைப்பது எப்படி !!!

எள்ளு துவையல்

தேவையான பொருட்கள் :

கறுப்பு எள்ளு –   3 டேபிள்ஸ்பூன்

தேங்காய்த்துருவல் – 2 டேபிள்ஸ்பூன்

உளுத்தம் பருப்பு –  1/2  டேபிள்ஸ்பூன்

காய்ந்த மிளகாய் –  4

புளி –  நெல்லிக்காயளவு

பூண்டு பற்கள் – 2

எண்ணெய் – 1 டீஸ்பூன்

உப்பு – தேவைக்கேற்ப

எள்ளு துவையல்க்கான பட முடிவுகள்

செய்முறை :

முதலில் எள்ளை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும் . ஒரு  கடாயில் எண்ணெய் விட்டு, உளுத்தம் பருப்பு , மிளகாய், பூண்டு, புளி , தேங்காய்த் துருவல் சேர்த்து  வதக்கி எடுத்து ஆற விடவும். பின்னர்  மிக்ஸியில் போட்டு, உப்பு சேர்த்து கெட்டியாக அரைத்தெடுத்தால் சுவையான எள்ளு துவையல் தயார் !!!

Categories

Tech |