விடுமுறையின் காரணமாக வீட்டில் இருக்கும் குழந்தைகளை கையாளுவது பற்றிய தொகுப்பு
கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக பள்ளிகளுக்கு மார்ச் 31 வரை விடுமுறை விட்டுள்ள நிலையில் குழந்தைகளை எவ்வாறு கையாள்வது என தெரியாமல் பல பெற்றோர்கள் தவிக்கின்றனர். குழந்தைகளுடன் பழகும் பொழுது குழந்தையாக மாறி பழகினால் பல வழிகள் கிடைக்கும்.
வீட்டில் குழந்தைகளை சமாளிப்பது என்பது சுலபமான காரியம் அன்று அவர்கள் விருப்பப்பட்டு கேட்டு கொடுக்க மறுத்தால் ஊரையே கூட்டும் அளவிற்கு கத்தி அழுது விடுவார்கள். குழந்தைகள் ஒரு பொருளைக் கேட்டு கொடுக்க முடியாத சூழல் ஏற்பட்டால் குழந்தைகளை வேறு செயலில் கவனத்தை சிதற வைக்க வேண்டும். கவனம் வேறு பக்கம் சென்றால் அடம் பிடிப்பதும் குறையும் குழந்தைகளும் சமாதானம் அடைவார்கள்.
விடுமுறை நாட்களில் மொபைல் போன்களில் குழந்தைகளை அடிமைப்படுத்த விடாமல் பழங்கால கதைகளையும் அத்தியாவசிய பழக்கவழக்கங்களையும் கற்றுக்கொடுப்பது சிறந்தது. நகைச் சுவை நிறைந்த பீர்பால் மற்றும் தெனாலிராமன் போன்றவர்களின் கதைகளை கூறி குழந்தைகளை மகிழ்ச்சியாக வைத்திருப்பது அவசியம்.
குழந்தைகள் சேட்டை செய்தால் தந்தை தாய் என இருவரும் திட்டாமல் யாரேனும் ஒருவர் அமைதியாக செய்த தவறை குழந்தைக்கு உணர்த்த வேண்டும். குழந்தைகளை அடிப்பது தவறான செயல் அது எதிர்காலத்தில் குழந்தைகளுக்கு உங்கள் மேல் இருக்கும் அன்பை பாதிக்கும். சிறுகுழந்தைகள் சேட்டைகள் செய்வது இயல்பு அவரது போக்கில் பெற்றோர்கள் சென்றால் குழந்தைகளின் சேட்டை கூட மகிழ்ச்சியை கொடுக்கும். ஏன் பாடத்தை கூட கற்பிக்கும்.