பாசுமதி அரிசி – 1/2 கிலோ
மட்டன் – 1/2 கிலோ
வெங்காயம் – 1/4 கிலோ
தக்காளி – 1/4 கிலோ
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 3
தயிர் – 1 கப்
இஞ்சி பூண்டு விழுது – 1/2 தேக்கரண்டி
புதினா – தேவையான அளவு
பட்டை – 1
கிராம்பு – 1
ஏலம் -1
கொத்துமல்லி இலை – தேவையான அளவு
பிரியாணி இலை – 1
எலுமிச்சை – 1
உப்பு தூள் – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
நெய் – தேவையான அளவு
முதலில் அரிசியை ஊற வைத்து கொள்ள வேண்டும். மட்டனை நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை, ஏலம், கிராம்பு , பிரியாணி இலை போட்டு வதக்கி வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கி கொள்ள வேண்டும். பின்னர் மிளகாய் தூள், மிளகாய் , புதினா, தயிர் , தக்காளி , கொத்துமல்லி இலை , உப்பு, மற்றும் மட்டன் சேர்த்து நன்கு கிளறி வேக விட வேண்டும். ஒரு டம்ளர் அரிசிக்கு 1 1/4 டம்ளர் தண்ணீர் அளந்து ஊற்ற வேண்டும்.தண்ணீர் கொதித்ததும் அரிசியை போட்டு கொதிக்கவிட்டு நெய், எலுமிச்சை பிழிந்து 20 நிமிடம் தம்மில் விட்டு இறக்கினால் சுவையான ஆம்பூர் மட்டன் பிரியாணி தயார் !!!