சுவையான உருண்டை மோர்க்குழம்பு.
தேவையான பொருட்கள் :
துவரம்பருப்பு – ஒரு கப்
மோர் – 2 கப்
காய்ந்த மிளகாய் – 4
மிளகு – 6
இஞ்சி – ஒரு சிறு துண்டு
பச்சைமிளகாய் – 4
தேங்காய் துருவல் – ஒரு கப்
சீரகம் – 1 ஸ்பூன்
கடுகு – அரை ஸ்பூன்
தனியா – 1 ஸ்பூன்
கொத்த மல்லி , கறிவேப்பிலை – சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு ஸ்பூன் துவரம் பருப்புடன் , பச்சைமிளகாய், தனியா, சீரகம், இஞ்சி,தேங்காய் துருவல் சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும். இந்த மசாலாவை, மோருடன் உப்பு சேர்த்துக் கலக்கி கொள்ளவேண்டும். மீதியுள்ள ஊறவைத்த துவரம்பருப்புடன் காய்ந்த மிளகாய், மிளகு, இஞ்சி, உப்பு சேர்த்து அரைத்து ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, அரைத்த பருப்புக் கலவையைப் போட்டு கிளற வேண்டும். பின்னர் சிறிய உருண்டைகளாக உருட்டி இட்லி தட்டில் வைத்து வேக விட வேண்டும்.வெந்த உருண்டைகளை மோருடன் சேர்த்து கொத்த மல்லி, கறிவேப்பிலை தூவி, கொதிக்க விட்டு இறக்கினால் சுவையான உருண்டை மோர்க்குழம்பு தயார் !!!