Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

அசத்தலான சுவையில் மீன் ஊறுகாய் செய்வது எப்படி !!!

மீன் ஊறுகாய்

தேவையான பொருட்கள்:

மீன் – 1/4 கிலோ

மிளகாய் தூள் – 3 மேஜைக்கரண்டி

வெந்தயப்பொடி – 1/2 மேஜைக்கரண்டி

பூண்டு – 1

இஞ்சி – ஒரு சிறிய துண்டு

மஞ்சள் பொடி – 1/4 தேக்கரண்டி

வினிகர் – 1/4 கப்

உப்பு – தேவையான அளவு

கடுகு – 1/2 மேஜைக்கரண்டி

கறிவேப்பில்லை – சிறிதளவு

நல்லெண்ணெய் – தேவையான அளவு

மீன் ஊறுகாய் க்கான பட முடிவு

செய்முறை  :

முதலில் மீனை நன்றாக  சுத்தம் செய்து, முட்களை  நீக்கிக் கொள்ள வேண்டும். அதனுடன்  மிளகாய் பொடி, மஞ்சள் பொடி மற்றும்  உப்பு சேர்த்து கலந்து 1  மணி நேரம் ஊற வைக்க  வேண்டும்.  ஒரு  கடாயில்  எண்ணெய் ஊற்றி , மீன் துண்டுகளை போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும். மற்றொரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி , கடுகு , கறிவேப்பிலை,  இஞ்சி, பூண்டு சேர்த்து கிளறிக் கொள்ள வேண்டும். அதனுடன் மிளகாய் பொடி, வெந்தயப்பொடி, உப்பு மற்றும்  வறுத்து வைத்துள்ள மீன் துண்டுகளை சேர்த்து 5 நிமிடம் கிளறி வினிகர் சேர்த்து கொள்ள வேண்டும் . பின் இவை  ஆறியதும் ஒரு காற்றுப்புகாத பாட்டிலில் போட்டு வைத்தால் சுவையான மீன் ஊறுகாய் தயார் !!!

Categories

Tech |