மொச்சைக்கொட்டை காரக்குழம்பு
தேவையான பொருட்கள் :
மொச்சைக்கொட்டை – 1/2 கப்
மிளகாய்த்தூள் – 1 1/2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன்
நல்லெண்ணெய் – தேவையான அளவு
புளிக்கரைசல் – 1 டம்ளர்
வெல்லம் – சிறிதளவு
பூண்டு – 5 பல்
தேங்காய் அரைத்த விழுது – 3 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
தாளிக்க:
கடுகு- 1/2 டீஸ்பூன்
வெந்தயம் – 1/2 டீஸ்பூன்
வெங்காய வடகம் – 1
கறிவேப்பிலை – சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் மொச்சைக் கொட்டையை ஊற வைத்து , உப்பு சேர்த்து வேக விட வேண்டும். மொச்சை வெந்ததும் ஒரு கடாயில் புளிக்கரைசல் , உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து கொதிக்கவிட்டு , பூண்டுப் பற்களை நல்லெண்ணெயில் வதக்கி சேர்க்கவும். பின் மொச்சைக் கொட்டை, வெல்லம் ஆகியவற்றை சேர்த்து அரைத்த தேங்காய் விழுதைச் சேர்த்து, கொதி வந்ததும் இறக்கவும்.பின் தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை எண்ணெயில் தாளித்து, குழம்பில் கொட்டினால் மொச்சைக்கொட்டை காரக்குழம்பு தயார் !!!