முட்டை 65
தேவையான பொருட்கள்:
முட்டை – 5
சின்ன வெங்காயம் – 10
பூண்டு – 5
சீரகம் – 1 ஸ்பூன்
சோம்பு – 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
கருவேப்பிலை – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் முட்டைகளை அவித்து சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். சின்ன வெங்காயம் ,பூண்டு , சீரகம் ,சோம்பு ஆகியவற்றை அரைத்து மிளகாய் தூள் , உப்பு சேர்த்து ,முட்டையில் தடவி அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி முட்டையை பொட்டு பொரித்து எடுத்தால் சுவையான முட்டை 65 தயார் !!!