கேரளா ஸ்டைல் முட்டை தொக்கு
தேவையான பொருட்கள் :
முட்டை – 5
சின்ன வெங்காயம் – 100 கிராம்
காய்ந்த மிளகாய் – 15
உப்பு – தேவையான அளவு
மல்லி இலை – சிறிதளவு
தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் முட்டையை வேக வைத்துக் கொள்ள வேண்டும். வெங்காயத்துடன் உப்பு , காய்ந்த மிளகாய் சேர்த்து நன்கு அரைத்து கொள்ள வேண்டும். ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி, அரைத்த மசாலாவை சேர்த்து வதக்க வேண்டும்.
பின்னர் இதனுடன், வேகவைத்த முட்டையை போட்டு , மல்லி இலை தூவி இறக்கினால் சூப்பரான கேரளா ஸ்டைல் முட்டை தொக்கு தயார் !!!